Election bannerElection banner
Published:Updated:

கான்செப்ட் கல்யாணம்!

கான்செப்ட் கல்யாணம்!

##~##

ம்பத்தூர் ஓ.டி.புதூரைச் சேர்ந்த உஜ்ஜீவநாதன் - சரண்யாவின் திருமணம் 'மாத்தி யோசி’ ரகம்! பத்திரிகை அச்சடிப்பதில் தொடங்கி, தாம்பூலப் பை கொடுப்பது வரை புதுப் புது உத்திகளைச் செயல்படுத்தி இருந்தார்கள்.  

 பத்திரிகையில் உறவினர்கள் பெயர்கள் மட்டுமின்றி சமையல்காரர், வீடியோ மற்றும் புகைப்படக்காரர் என கல்யாண நிகழ்வில் தொடர்புடையவர்கள் அனைவருடைய பெயர்களையும் அச்சடித்து இருந்தார்கள். திருமணத் துக்கு வரும் தம்பதிகளுக்குப் பத்திரிகையோடு வேட்டி-சேலையைப் பிரத்யேகமாக ஒரு பையில்வைத்துக் கொடுத்திருந்தார்கள்.  மேலும், மண்டபத்துக்கு விருந்தினர்கள் சரியாக வந்து சேர உதவும் 'வழிகாட்டும் குழு’வைச் சேர்ந்த ஐந்து பேரின் கைபேசி எண்களையும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

மாப்பிள்ளை அழைப்பு,  நலங்கு, இசை நிகழ்ச்சி,  வாழ்த்த ரங்கம் உள்ளிட்ட அனைத்தும் நிகழ்ச்சி

கான்செப்ட் கல்யாணம்!

நிரலில் இடம்பிடித்து இருந்தன. திருமணத்துக்கு முன்கூட்டியே வெளியூரில் இருந்து வந்து திருமண மண்டபத்தில் தங்குபவர்களின் வசதிக்காக தேங்காய் எண்ணெய், பேஸ்ட், திருநீறு, குங்குமம் அடங்கிய பொருட்களையும் கொடுத்தார்கள்.  

திருமணத்துக்கு வரும் அனைவருக்கும் பானிபூரி, பாப்கார்ன், பஞ்சு மிட்டாயோடு அதிர்ஷ்ட கூப்பனும் உண்டு.  விருந்தினர்கள் தங்களுடைய பெயர், முகவரி, கைபேசி எண்களை இந்த கூப்பனில் நிரப்பி அங்கே வைத்திருந்த பெட்டியில் போட்டுவிட, திருமணம் முடிந்ததும் குலுக்கல் நடத்தி பரிசு கொடுத்து அசத்தினார்கள். இத்துடன் ஃபன்னி கேரம், த்ரிஷாவுக்குப் பொட்டு வைக்கலாம் வாங்க, கரகாட்டம், உறியடி உள்ளிட்ட 28 வகையான  விளையாட்டுகளால் கல்யாண மண்டபமே கலகலத்தது.

விடைபெற்ற அனைவருக்கும் 'நன்றி பத்திர’த்துடன் 'டிஃபன் பாக்ஸ் பை’க்குள் தேங்காய், வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொடுத்தார்கள். விருந்தினர் ஒவ்வொருவரும் மணமக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைச் சுடச்சுட பிரின்ட் செய்து, திருமண மலரின் அட்டையில் ஒட்டி தாம்பூலப் பையோடு சேர்த்துக் கொடுத்து அனுப்பியது தித்திப்பு நிகழ்வு!

மணப்பெண்ணின் தந்தை ரவியிடம் பேசினோம். ''ஒவ்வொரு வேலையையும் ஒவ்வொருவரிடம் ஒப்படைத் ததால் வேலைகள் எளிதாக முடிந்தன. திருமணம் என்பது சாதாரணமாகக் கூடிப் பிரியும் சம்பிரதாயமான நிகழ்ச்சியாக இல்லாமல், அதைப் பயனுள்ளதாக மாற்ற நினைத்தோம். அதிர்ஷ்ட கூப்பன் மூலம் எல்லோருடைய கைபேசி எண்களையும் எளிதாகச் சேகரிக்க முடிந்தது. பஃபே முறையில் ஐஸ்க்ரீம், சாக்லேட் வரை எல்லாம் கொண்டுவந்து குழந்தைகளை சந்தோஷப்படுத்தியது இன்னும் கூடுதல் திருப்தி.

லட்சக்கணக்கில் செலவுசெய்து ஒரு விழா நடத்துகிறோம். அதை வித்தியாசமாக யோசித்துச் செய்தால் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும்... காலாகாலத்துக்கு நினைவிலும் நிற்கும்'' -என்கிறார் மாத்தி யோசித்த அந்த மனிதர்!

- த.கதிரவன்

சுரண்டலுக்கு எதிரான கேள்வி வேள்வி!

கான்செப்ட் கல்யாணம்!

த்யம் திரை அரங்கில் அன்று மின்னிய கேமராவின் ஒளி வெள்ளத்தைச் சேமித்து இருந்தால், சென்னையின் ஒரு நாள் மின்வெட்டை ஈடுசெய்து இருக்கலாம். மணிரத்னம், வைரமுத்து, முருகதாஸ், எஸ்.ஜே.சூர்யா, விஜய், அரவிந்த்சாமி, பரத், பாடகிகள் ஸ்வேதா, திவ்யா என கோடம்பாக்க வி.ஐ.பி-க்கள் கூடியிருந்தனர். காரணம், சந்தோஷ்சிவன்! இந்தியா தேடும் பிரபல ஒளிப்பதிவாளர். இவருடைய 'உருமி’ பட இசை வெளியீட்டு விழாவில்தான் இந்தப் பளபளப்பு!

''சந்தோஷ்சிவன் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். எப்பவும் வித்தியாசமான எண்ணங்களோடு பாசிட்டிவ்வாக வலம் வருவார். 'உருமி’ எடுக்க அவரால் மட்டுமே முடியும்!''-மணிரத்னம் பாராட்ட... சிவன் முகத்தில் வெட்கம். ''ஏகப்பட்ட தேசிய விருதுகள் வாங்கியிருக்கும் இவரோடு ஒரே ஒரு படமாவது பண்ணணும்கிறது ரொம்ப நாள் ஆசை. என் அடுத்த படத்தின் மூலம் அது நிறைவேறப்போகிறது'' என்றார் முருகதாஸ்.

''ரஜினி சாரை 'தளபதி’ படத்தில் தனி டோன்ல காட்டினார் சந்தோஷ்சிவன். முருகதாஸ் படத்திலும் விஜயைக் கண்டிப்பா வித்தியாசமாக் காட்டுவார். விஜய் ரசிகர்கள் இப்பவே ரெடியா இருங்க!'' என்று ஏக எதிர்பார்ப்பு ஏற்றினார் எஸ்.ஜே.சூர்யா. ''சந்தோஷ் படத்தில் நடிக்க எல்லாருக்கும் ஆசை. எனக்குக் கூடிய சீக்கிரம் அது நிறைவேறப்போகுது. 'உருமி’ படத்தோட பாடல்கள் எல்லாமே என் ஃபேவரைட்'' என்றார் விஜய்.

வைரமுத்து பேசும்போது, ''இந்தியாவுக்கு வெளியே இந்திய சினிமாவை அடையாளம் காட்டியவர்களில் சந்தோஷ்சிவனும் ஒருவர். இந்தப் படத்துக்கு இசை அமைத்த தீபக்தேவ் பாராட்டுக்கு உரியவர். 30 வயதுக்குக் கீழ் இருக்கும் ஒரு நபர், 60 வயதுக்கு மேல் உள்ள படத்துக்கு இசை அமைத்து இருக்கிறார். இதில் இரண்டாம் நூற்றாண்டுத் தமிழை 15-ம் நூற்றாண்டுக் காதலுக்காக, 21-ம் நூற்றாண்டில் எழுதி உள்ளேன். இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு எதிராக எழுப்பப்படும் கேள்வி வேள்விதான் இந்த உருமி. இது படம் அல்ல பாடம்'' என்று கவிதையாக முழங்கினார்!

- க.நாகப்பன், படங்கள்: ப.சரவணகுமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு