Election bannerElection banner
Published:Updated:

சகோதரன் காலண்டர்!

சகோதரன் காலண்டர்!

##~##

நிதி திரட்ட விதவிதமான முயற்சிகளில் ஈடுபடும் பொதுநல அமைப்புகளுக்கு மத்தியில், வித்தியாசமான காலண்டரோடு களம் இறங்கி இருக்கிறது 'சகோதரன்’ அமைப்பு. ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்காக இயங்கி வரும் இந்த அமைப்பு, 'ஹார்மோனி’ என்ற தலைப்பில் 2012-ம் ஆண்டுக்கான காலண்டரை வெளி யிட்டு உள்ளது.

 'பொதுவாக, காலண்டர் என்றாலே பெண்கள், இயற்கைக் காட்சிகள், விலங்குகள், கடவுள், குழந்தைகள் போன்ற படங்கள்தான் அதில் இடம்பெறும். இந்த வழக்கத்தை மாற்றி, ஆண்களை மட்டுமேவைத்து இந்த காலண்டரை வடிவமைத்து உள்ளோம். ஒவ்வொரு வருடமும் ஒரு கான்செப்ட். அந்த வரிசையில் இந்த வருடம் 'யோகா' இடம்பெறுகிறது. தனுஷ்கோடி, ராமேஸ்வரம், மங்களூர் பீச், கோழிக்கோடு, கொல்கத்தா ஆகிய இடங்களில் படம் பிடித்தோம். இதில் இடம்பெற்று இருக்கும் 12 மாடல்களுமே

சகோதரன் காலண்டர்!

மாடலிங் உலகுக்குப் புதியவர்கள். இவர்கள் அணிந்து இருக்கும் உடைகள் மற்றும் நகைகள் பயிற்சி பெற்ற டிசைனர்களால் வடிவமைக்கப்பட்டவை.

டிஜிட்டல் கேமரா, டிசைனர், கோரியோகிராஃபர், 'யோகா’ ஆலோசகர், மாடல்ஸ், போஸ்ட் புரொடக் ஷன் என ஒரு சினிமா போலவே அனைத்தையும் சின்சியராகச் செய்தோம். இதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், இதில் பங்கு பெற்ற ஒருவர்கூடச் சம்பளம் வாங்கவில்லை. நல்ல விஷயம் என்பதால் அனைத்தையும் இலவசமாகவே செய்துகொடுத்தனர்!'' என்கிறார் 'சகோதரன்’ அமைப்பின் இயக்குநர் சுனில் மேனன்.

- சி.காவேரி மாணிக்கம், படம்: ச.இரா.ஸ்ரீதர்  

கொலவெறி... கொலவெறி...

சகோதரன் காலண்டர்!

''வணக்கம் நேயர்களே. இது சென்னையின் மெலடி ஸ்டேஷன். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது உங்க சுட்டி லட்சுமிப்ரியா. இப்ப ஒரு பிரபலத்தோட பேசப்போறோம். 'எனக்கு நடிக்க வராதுனு சொன்னவர், ஸ்கூல் ஸ்டூடன்ட்டாவே நடிக்க ஆரம்பிச்சு இப்போ பல்கலைக்கழகமா உயர்ந்துட்டார்!'' என்றவரிடம், ''இப்போ இதையே சேனல் வி.ஜே-வா இருந்தா எப்படிப் பேசுவீங்க?'' என்று நடுவர் கேட்டார். கொஞ்சமும் தயங்காமல், ''ஹாய் வியூவர்ஸ். வெல்கம் பேக் டு த புரொகிராம். இந்த நிகழ்ச்சியை ஹோஸ்ட் பண்றது உங்க சுட்டி லட்சுமிப்ரியா. இப்ப ஸ்டைலான ஒரு செலிபிரிட்டியைப் பார்க்கப் போறோம். இவரோட நிஜப் பேரு வெங்கடேச பிரபு. நல்லா நடிப்பாரு, ஆடுவாரு. இப்போ பாடவும் ஆரம்பிச்சிருக்கார். யெஸ்... தனுஷ்தான் நீங்க இன்னிக்குப் பாக்கப்போற பிரபலம்!'' என்று லட்சுமிப்ரியா கலகலக்க... ஓரத்தில் நின்று கேட்டுக்கொண்டு இருந்த தனுஷ் ஆச்சர்யம் தாங்காமல் கை தட்டினார்.  

கடந்த வாரம் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பிக் எஃப்.எம்மின் சுட்டி ஆர்.ஜே. தேர்வு மற்றும் '3’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியீட்டில்தான் இந்தக் கலாட்டா.  தனுஷ், ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா, அறிமுக இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்ட '3’ டீம், படத்தில் தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி... கொலவெறிடி’ பாடலைத் திரையிட்டது.

அதற்குப் பிறகு அங்கே படக் குழுவினரைவிட, அதீத அலப்பறை கொடுத்தது பார்வையாளர்கள்தான்!

- க.நாகப்பன், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

கமல் ஒரு ஏகசந்த கிராதி!

பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் 'இலக்கியச் சாரல்’, 'ஜெயிக்கப் போவது நீதான்’ உட்பட ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா அது. கமல்ஹாசன், பாண்டியராஜன், எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, கல்யாண மாலை மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் பாண்டியராஜன் பேசுகையில்,  ''நானும் 'தேடல்’, 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை’னு ரெண்டு புத்தகங்கள் வெளியிட்டு உள்ளேன். நான் புத்தகம் வெளியிடும்போது எல்லாம் மழை, புயல் வந்துடும். எனக்கும் எழுத்துக்கும் ராசி இல்லையோனு நினைச்சு விட்டுட் டேன். ஸ்டுடியோ, கேமரா, லேப்புக் குச் செலவு பண்ற காசுனு என் படத்துக்கும் கமல் சார் படத்துக்கும் செலவெல்லாம் ஒரே மாதிரி இருந் தாலும், அவர் நடிச்ச பிறகு படத்தின் விலை கூடிவிடுவதுதான் ஸ்பெஷல்!'' என்றார்.

சகோதரன் காலண்டர்!

ஞானசம்பந்தன் தன் ஏற்புரையில், ''பி.ஹெச்டி., படிக்கும் என் மாணவன் கார்த்திகேயன், ஒரு மாற்றுத் திறனாளி. அவனுக்குப் பொன்னாடை போர்த்த தானும் குனிந்து உட்கார்ந்து மனிதாபி மானத்தை வெளிப்படுத்திய கமலை பாராட்ட வார்த்தைகள் இல்லை. நானும் கமலும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுவோம். நான் அவருக்கு நிறைய கற்றுத்தருவதாகச் சொல்கிறார்கள். சினிமா உட்பட பல விஷயங்களை நான்தான் அவரிடம் இருந்து கற்றேன்.  கமல் ஒரு ஏகசந்த கிராதி. ஒரு முறை கேட்டால் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்வார்'' என்றார்.

கமல் பேச வரும்போது ''ஆழ்வார்பேட்டை தெய்வமே'' என ரசிகர் ஒருவர் குரல் எழுப்ப, ''என்ன பேசி என்ன பயன்? என்னையே தெய்வமாக்கிட்டீங்க? என்ன கலர் சட்டையில் வந்திருக் கேன்?'' என்று வருத்தத்தோடு கேள்வி கேட்க, ''கறுப்பு கலர்...'' என்று மொத்தக் கூட்டமும் ஆரவாரம் செய்தது. ''புகழுக்காக, பெருந் தன்மைக் காக இங்கு வரவில்லை. சுயநலம் காரணமாகவே கற்றுக்கொள்ள வந்தேன். தமிழுக்காக அல்ல; எனக்காக. தமிழுக்கும் எனக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காக.

நான் அவ்வளவு சுலபமாச் சிரிக்க மாட்டேன். ஆனா, தெரிஞ்ச ஜோக்கையே புதுசா சொல்ற மாதிரி ஈர்ப்பதுதான் ஞானசம்பந்தனுடைய தனித்துவம். சினிமாவில் வி.கே.ராமசாமியின் இடம் இன்னும் நிரப்பப்படவே இல்லை. நீங்கள் தான் நிரப்பணும்னு ஞானசம்பந்தனை சினிமா வுக்கு இழுத்து வந்தேன். நகைச்சுவை நடிகர் என்பது கோமாளியாக இருப்பது அல்ல; நடிப்பதுதான். நானும் அவரும் அடிக்கடி பேசுகிறோம் என்பதைவிட, ஒரே நாளில் அடிக்கடி பேசுகிறோம் என்பதே உண்மை. அவர் நினைத்தால் புயலாகக் கருத்துக்களை வீசி இருக்கலாம். எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக, சாரலாக எழுதி இருக் கிறார். நாம் படித்து அதில் நனைய வேண்டும்!'' என்று பாராட்டி மகிழ்ந்தார்.

- க.நாகப்பன், படங்கள்: பா.காயத்ரி அகல்யா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு