Published:Updated:

தமிழ்ப்படம் 2 முதல் மதுரை சிட்னி வரை... கூகுள் பரிதாபங்கள்! #GoogleTrends

தமிழ்ப்படம் 2 முதல் மதுரை சிட்னி வரை... கூகுள் பரிதாபங்கள்! #GoogleTrends
News
தமிழ்ப்படம் 2 முதல் மதுரை சிட்னி வரை... கூகுள் பரிதாபங்கள்! #GoogleTrends

தமிழ்படம் 2ல எத்தனை படங்கள ஸ்பூஃப் பண்ணிருக்காங்க. மைக்ரோ இரிகேஷனுக்கு தமிழ்ல என்ன, அலெக்ஸாண்டர் குதிரை பேர் என்னனு தெரியுமா

தமிழ்ப்படம் 2ல எத்தனை படங்கள ஸ்பூஃப் பண்ணிருக்காங்க. மைக்ரோ இரிகேஷனுக்கு தமிழ்ல என்ன, அலெக்ஸாண்டர் குதிரை பேர் என்னன்னு தெரியுமானு ஆரம்பிச்சு ஐசக் நியூட்டனோட IQ லெவல் என்னங்குற வரைக்கும் எல்லாத்துக்குமே பதில் கிடைக்கும்ங்குற எதிர்பார்ப்போட கூகுள்ல தேடிக்கிட்டு இருக்கோம். கூகுளும் தெளிவா நம் கேள்விக்குப் பதிலை நொடிப்பொழுதில் கொடுக்கிறது. கடந்த வாரத்தில் வைரலான சில விஷயங்களைப் பற்றி தமிழக மக்கள் எப்படியெல்லாம் கூகுளிடம் கேள்வி கேட்டிருக்காங்க... பார்ப்போம்.

மைக்ரோ இரிகேஷன்:

தமிழகம் வந்த பி.ஜே.பி தலைவர் அமித்ஷா, சென்னையில் உரையாற்றினார், அதனை அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மொழிபெயர்ப்பு செய்தார். அமித்ஷா பேசும் போது மைக்ரோ இரிகேஷனுக்காக 332 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்று கூற உடனடியாக ராஜா ''சிறு நீர் பாசனத்துக்காக'' என அப்படியே தமிழில் மொழிபெயர்த்தது வைரலானது. கூகுள் தேடலில் அதிகபட்ச தேடலாக ''மைக்ரோ இரிகேஷனுக்கு தமிழில் என்ன'' என்று பலர் தேடியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கூகுளில் அதிகம் ஆங்கில வார்த்தைகளில் தான் தேடுவார்கள். மாநில மொழிகள் அவ்வளவாக பெரிய அளவில் இடம்பெறாது. ஆனால் இந்த விஷயத்தில் 6வது கூகுள் ட்ரெண்டே தமிழ் தேடல் தான். ''சிறு நீர் பாசனம்'' என்ற வார்த்தையை அதிகமாக தேடியுள்ளனர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மதுரை சிட்னி :

அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையை ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி போல் மாற்றுவோம் என்று கூறியுள்ளார். அடுத்த நொடியே  சமூக வலைதளங்களில் வைரலாய் இந்தச் செய்தி பரவியது. கூகுளில் 'செல்லூர் ராஜூ'' ''மதுரை சிட்னி' ' மதுரை நகரம்' என அதிகம் தேடியுள்ளனர். சமூக வலைதளங்களில் சிட்னி பெரியார் பேருந்து நிலையம், சிட்னி வைகை ஆறு என மீம்ஸ் லைக்ஸ் அள்ளின. 

தமிழ்ப்படம் 2:

தமிழ்ப்படம் முதல் பாகம் வெளியானபோது சமூக வலைதளங்களின் தாக்கம் இன்றைய அளவுக்கு இல்லை. ஆனாலும் ஸ்பூஃப் சினிமாவாக ஹிட் அடித்தது தமிழ்ப்படம். தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகம் பற்றி கூகுளில் தமிழ்ப்படத்தின் ஹெச்.டி பிரின்ட்டை எங்கு டவுன்லோட் செய்யலாம். தமிழ் படம் டவுன்லோட், தமிழ்படம் ரிவியூ என அதிகமாக தேடியுள்ளனர். தமிழ்ப்படம் பைரஸியில் எங்கு கிடைக்கும் என்பது தான் அனைவரின் கேள்வியாகவும் இருந்துள்ளது. இன்னும் , தமிழ்ப் படத்தில் எத்தனை படங்கள் ஸ்பூஃப் செய்யப்பட்டுள்ளது என்றெல்லாம் தேடியிருக்கிறார்கள். 

கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நொடிப்பொழுதில் லட்சம் விடைகளை கொட்டும் திறன் கூகுளுக்கு உள்ளது என்றாலும், நம்மாளுங்க கேக்குற கேள்வியெல்லாம் பார்த்தா ”என்னதான் கேள்வினாலும் ஒரு நியாயம் வேணாமா” அப்படிங்குற லெவல்ல தான் இருக்கு. எடக்கு மடக்கா நாம் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் கூகுள் 60 ட்ரில்லியன் பக்கங்களை தேடி அதன் பிரிவுகளின் அடைப்படையில் ஒரு வரிசையை உண்டாக்கி அதனை தரவரிசை, அல்காரிதம், வார்த்தையோடு பொருந்திய‌ கீ-வேர்டுகள் என அனைத்து வழிகளிலும் மைக்ரோ செகண்டில் தேடி நமக்கு வரிசைப்படுத்தும்.  இதில் அதிகம் தேடப்படும் கூகுள் ட்ரெண்டில் இடம் பெறும். அதுனால் மதுரை தேடினா சட்னி வரலாம்.. சிட்னி வந்தா நல்லாவா இருக்கும்.