Published:Updated:

நம்பிக்கை விருதுகள் விழா

நம்பிக்கை விருதுகள் விழா
பிரீமியம் ஸ்டோரி
நம்பிக்கை விருதுகள் விழா

தொகுப்பு, படங்கள் : விகடன் குழு

நம்பிக்கை விருதுகள் விழா

தொகுப்பு, படங்கள் : விகடன் குழு

Published:Updated:
நம்பிக்கை விருதுகள் விழா
பிரீமியம் ஸ்டோரி
நம்பிக்கை விருதுகள் விழா
நம்பிக்கை விருதுகள் விழா

ரு சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பலப்படுத்துவதே எதிர்காலத்துக்கான இன்றைய பணியாக இருக்கும். கலை, இலக்கியம், சமூகம் சார்ந்த செயல்பாடுகளே தொடர்ச்சியாகச் சமூகத்தின் வளர்ச்சிக்கும் வாழ்வியல் முன்னேற்றத்துக்கும் உதவுகிறது என்று அழுத்தமாக நம்புகிறது ஆனந்த விகடன். அந்த வகையில் சமூகத்தின் வேர்களான இலக்கியத்துக்கும் சமூகப் பணிக்கும் விருதுகள் வழங்கிக் கௌரவித்து வருகிறது விகடன்.

ஆண்டுதோறும் சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு, சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள், சிறந்த சிற்றிதழ், சிறந்த சிறார் இதழ் ஆகியவற்றுக்கு விருதுகளை வழங்கிவருகிறது. இதுவரை இதழில் மட்டுமே விருதுகளை அறிவித்துவந்த நிலையில், இந்த ஆண்டு பிரமாண்ட நிகழ்வாக நடைபெற்றது. இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளில் விருது பெற்றவர்களோடு சமுகக் களப்பணியில் ஈடுபட்டவர்களையும் இணைத்து விருது விழாவை நடத்தியது விகடன்.

நம்பிக்கை விருதுகள் விழா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘பொதுவாகத் தமிழகத்தில் இலக்கியவாதிகள் மதிக்கப்படுவது இல்லை; அவர்களது படைப்புகள் அங்கீகரிக்கப்படுவது இல்லை’ என்கிற மனக்குறை படைப்பாளிகளுக்கும் விமர்சகர்களுக்கும் உண்டு. அந்த மனக்குறையைத் துடைத்தெறியும் வகையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது விகடன் விருதுகள் நிகழ்வு. சமூகத்தின் பல்வேறு துறைகளில் பங்களித்த சாதனை மனிதர்களை டாப் 10 மனிதர்கள் என்றும் எதிர்காலத் தமிழ்ச் சமூகத்தின் நம்பிக்கைக்கு உரியவர்களை டாப் 10 இளைஞர்கள் என்றும் ஆண்டுதோறும்

நம்பிக்கை விருதுகள் விழா

அடையாளப்படுத்தும் ஆனந்த விகடன், இவர்களுடன் இலக்கிய ஆளுமைகளையும் இணைத்து ‘ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்’ என்ற பெயரில் பெரும் நிகழ்வாக நடத்தியது.

சோ.தர்மன், இமையம், வெய்யில், புலம் லோகநாதன், பிரேம், செ.ஜார்ஜ் சாமுவேல், எஸ்.சண்முகம், க.பூரணச்சந்திரன், கடற்கரய் மத்தவிலாச அங்கதம், க.உதயசங்கர், ஜெயந்தி சங்கர், ஏ.சண்முகானந்தம், ‘குக்கூ’ சிவராஜ் மற்றும் அழகேஸ்வரி, மனுஷ்யபுத்திரன், சரவணன் சந்திரன்,  போன்ற இலக்கிய ஆளுமைகளோடு, விளையாட்டு வீரர்கள், சமூகப் போராளிகள் சிறந்த அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள், பண்பலைத் தொகுப்பாளர்கள் எனப் பல தளங்களில் சிறப்பாக இயங்கிவரும் ஆளுமைகள் விருதுபெற்றார்கள்.

நம்பிக்கை விருதுகள் விழா

விருதுகளைப் பெறுபவர்கள் மட்டுமல்லாது, விருதுகளை வழங்கி கௌரவிக்கவும், விழாவில் பங்கேற்கவும் பல்வேறு தளங்களில் மகத்தான பணிகளைச் செய்த பல ஆளுமைகள் வருகை தந்திருந்தனர். பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், விக்கிரமாதித்யன், வண்ணதாசன், சுகுமாரன், சாருநிவேதிதா, சி.மோகன், மு.ராமசாமி, யூமா வாசுகி, நக்கீரன், அறிவுமதி, ஆதவன் தீட்சண்யா, கவிதா முரளிதரன், ச.தமிழ்ச்செல்வன், பவா செல்லதுரை, நித்யானந்த் ஜெயராமன், மயில்சாமி அண்ணாதுரை, வேலுசரவணன், சுகிர்தராணி, வேலராமமூர்த்தி சு.வெங்கடேசன், கே.வி.ஷைலஜா, நடிகர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், திருமாவளவன்,  பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்,லீனா மணிமேகலை, காசி ஆனந்தன், யவனிகா ஸ்ரீராம், ஓவியர் மணியம் செல்வன், சந்திரா, பெருமாள் முருகன், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், இயக்குனர் சுசீந்திரன், நடிகை பூஜா தேவரையா, நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகர் பாக்கியராஜ், மருத்துவர் கு.சிவராமன், நல்லகண்ணு, சகாயம் ஐ.ஏ.எஸ், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், சி.மகேந்திரன், அற்புதம் அம்மாள், நீதியரசர் சந்துரு, மேலாண்மை பொன்னுசாமி, ஜமாலன், ஆர்.சிவக்குமார், இயக்குனர் பாண்டிராஜ், ராஜூ முருகன், பாஸ்கர் சக்தி, லேனா தமிழ்வாணன், இயக்குனர் பிரசாத் முருகேசன், ஜாதவ் பாயெங், குரு சோமசுந்தரம், தமிழிசை சௌந்தர்ராஜன், பாலகுமாரன், செந்தமிழன், ‘நக்கீரன்’ கோபால் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இது தமிழர்களின் விழாவாகவும் தமிழுக்கான விழாவாகவும் தமிழ்ச் சமூகத்தின் விழாவாகவும் இருந்தது.

நம்பிக்கை விருதுகள் விழா
நம்பிக்கை விருதுகள் விழா

பிரபஞ்சன்

“தமிழ்ச்சூழலில் ஒரு எழுத்தாளனை மற்றொரு எழுத்தாளனைக்கொண்டு பாராட்டுவதும், ஒரு கவிஞனை மற்றொரு கவிஞனைக்கொண்டு கௌரவிப்பதும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் படைப்பாளிகளை மேடையேற்றுவதும் இதுவரை நடந்திராத நிகழ்வு. அந்த ஆச்சர்யம், விகடன் நம்பிக்கை விருதுகள் மேடையில் நடந்தேறியது. இன்று வரை அது மனதில் தங்கி நெகிழ்ச்சியூட்டுகிறது.”

நம்பிக்கை விருதுகள் விழா
நம்பிக்கை விருதுகள் விழா

வண்ணதாசன்

“நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது மனது முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. மூத்த படைப்பாளிகள் இளம் படைப்பாளிகளை கௌரவித்துப் பாராட்டுகிற நிகழ்ச்சிகள் அருகிவிட்டன. விகடன் விழா நல்ல முன்னுதாரணமாக இருந்தது. நிறைய மனிதர்கள் ஒருங்கிணைந்திருந்தார்கள். எல்லோரையும் சந்திக்க நல்வாய்ப்பாக இருந்தது. சிவராஜ் விருதை எனக்கு அர்ப்பணித்தது, விக்ரமாதித்யன் போன்ற மூத்த படைப்பாளி அவ்வளவு உணர்வுபூர்வமாக வெய்யில் போன்ற இளம் படைப்பாளிக்கு விருது வழங்கியதெல்லாம் மிக முக்கியப் பதிவுகள்.”

நம்பிக்கை விருதுகள் விழா
நம்பிக்கை விருதுகள் விழா

எஸ்.ராமகிருஷ்ணன்

“இலக்கியத்துக்காகவும், சமூக ஆர்வலர்களைக் கொண்டாடுவதற்காகவும் இப்படி ஒரு விழாவை விகடன் நடத்துவது மகிழ்ச்சி. மிகவும் முக்கியமான நிகழ்வாக இதைக் கருதுகிறேன். விருது பெற்ற புத்தகங்களை அரங்கில் காட்சிப்படுத்தலாம். சிறப்பு விருந்தினர்களுக்கு விருது பெற்ற புத்தகங்களைப் பரிசாக வழங்கலாம். அடுத்த நிகழ்வுகளில் இதில் கவனம் செலுத்தலாம். நிறைவாக இருக்கும்.”

நம்பிக்கை விருதுகள் விழா

கவிதா முரளிதரன்

“விருது விழாவுக்கு என்று தமிழகத்தில் சில இலக்கணங்கள் இருக்கின்றன. கண் கூசச் செய்யும் பகட்டும், ஆடம்பரமும் நிறைந்த விழாக்களில் அன்னியத்தன்மையை மட்டுமே உணர்ந்திருக்கிறேன். ஆனால், விகடன் விருது இதற்கு நேரெதிராய் இருந்தது. அப்படி இருக்கும் என்றுதான் எதிர்பார்த்தேன். அரங்கத்துக்குள் நுழைந்த நொடியிலிருந்து விகடனிலிருந்த நண்பர்கள் காட்டிய தோழமையும் அன்பும் அங்கிருக்கும் ஒவ்வொருவரையும் ஒரு பிரபலமாகவே உணரவைத்திருக்கும். விகடன் விருது விழா, விருது விழா போல இல்லை. ஒரு தோழமையின் ஒன்றுகூடல் போல, ஒரு குடும்ப விழாவாகவே இருந்தது.”

நம்பிக்கை விருதுகள் விழா
நம்பிக்கை விருதுகள் விழா

சு.வெங்கடேசன்

“திரைப்படத் துறை சாராத படைப்பாளிகளை இவ்வளவு பிரமாண்டமான மேடையில் கௌரவித்தது தமிழ்க் கலை இலக்கியச் சூழலில் மிகவும் முக்கியமானது. அந்த மேடையை இதுவரை திரைப்படத்துறை மட்டுமே ஆக்கிரமித்திருந்தது. வணிகம் சார்ந்த முதலீட்டுத் துறை என்பதால், அதற்கு அந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், வாழ்க்கையையே சமூகத்துக்காக அர்ப்பணித்து உழைத்துத் தேயும் போராளிகளும் கலைஞர்களும் இங்கு நிறைந்திருக்கிறார்கள். அவர்களை மேடையில் ஏற்றி மிகப்பெரிய கௌரவத்தையும் பெருமையையும் உருவாக்கியிருக்கிறது விகடன்.”

நம்பிக்கை விருதுகள் விழா
நம்பிக்கை விருதுகள் விழா

ச.தமிழ்ச்செல்வன்

“விருது பெறுபவர் பற்றிய வீடியோ பதிவைப் போட்டு அழகு ததும்ப அறிமுகம் செய்து விருதை வழங்குவது என்பது உலக அளவிலான பெரும் விருது நிகழ்வுகளில் பார்க்கக்கூடிய நடைமுறை. விகடன் அதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது. மிகவும் குறிப்பிட்டுச் செல்ல வேண்டியது, விகடன் நிறுவனத்தாரின் உபசரிப்பு. விகடனில் பணிபுரியும் அத்தனை பேரும்  அரங்கத்தில் நின்று வந்தவர்களை வரவேற்று உபசரித்த விதம் மனதிற்கு நெருக்கமாக இருந்தது. சமகாலத்தில் எழுதும் இளம் படைப்பாளிகள், மூத்த ஆளுமைகள், பல்வேறு சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்த படைப்பாளிகள் என ஒட்டுமொத்தப் படைப்புலகமும் விகடன் அரங்கில் குழுமி இருந்தது முக்கியமானது. விருதுத் தேர்வு குறித்தும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எவ்வித மனத்தடையும் இல்லாத சிறந்த தேர்வு. குமுதத்தைச் சேர்ந்த கடற்கரய்க்கு விருது வழங்கியது ஓர் உதாரணம். அடுத்த ஆண்டு விருது விழாவை மிகவும் எதிர்பார்க்கிறேன்.”

நம்பிக்கை விருதுகள் விழா
நம்பிக்கை விருதுகள் விழா

ஆதவன் தீட்சண்யா

“மிகவும் முக்கியமான தருணம். இலக்கியவாதிகளைக் கௌரவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு, ஜனநாயகபூர்வமாகவும் எல்லா தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும் இருந்த இந்த நிகழ்வு ஒரு முன்னுதாரணம். மாரியப்பனின் அம்மா விருது பெற்ற தருணம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இதுமாதிரி பிரமாண்ட விழாக்களை வட்டார அளவில் நடத்தினால், படைப்பாளிகள், சமூகப் போராளிகளுக்கு உள்ளூரில் அங்கீகாரம் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றி யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சரியான தேர்வுதான். ஆனால், விருதுத் தேர்வு நடவடிக்கையை வெளிப்படையாக நடத்தலாம் என்பது என் கருத்து. படைப்பாளிகளையும் விகடன் ஆசிரியர் குழுவினரையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைத்து விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்யலாம்.”

நம்பிக்கை விருதுகள் விழா
நம்பிக்கை விருதுகள் விழா

யவனிகா ஸ்ரீராம்

“இலக்கியம் என்பது, விகடனுடன் இணைந்தே வளர்ந்த ஒன்று. எனது சிறுபிராயத்திலிருந்தே விகடனைத் தொடரும் ஒருவன் நான். நான் விகடனை வாங்குவதே அதன் இலக்கியத்துக்காகத்தான். விகடனின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக இந்த விழாவைப் பார்க்கிறேன். விகடன், இதைத் தொடர்ந்து செய்யவேண்டும். சமூகச் செயல்பாட்டாளர்களை,  இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாட வேண்டும்.’’

நம்பிக்கை விருதுகள் விழா
நம்பிக்கை விருதுகள் விழா

சாரு நிவேதிதா

“இலக்கியத்துக்கு இவ்வளவு பிரமாண்டமான விழா இதுவரை தமிழ்நாட்டில் நடந்ததே இல்லை.  இதை இன்னும் செழுமைப்படுத்த ஒரு யோசனை சொல்கிறேன். வரும் ஆண்டுகளில் பிற நம்பிக்கை விருதுகளையும் இதில் கலவாமல், இலக்கியத்துக்கு என்றே இன்னும் கூர்மையான விழாவாக நடத்த வேண்டும் என்பதுதான் அது. அதாவது தொடர்ந்து இரண்டு நாள்கள் கட்டுரை வாசிப்பு, கருத்தரங்கம் என ‘டப்ளின் லிட்ரெரி அவார்டு’ வழங்குவதைப்போல நடத்திக் கொடுக்கலாம். அடுத்த விழாவில் மூத்த படைப்பாளிகளையும் கெளரவிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.”

நம்பிக்கை விருதுகள் விழா
நம்பிக்கை விருதுகள் விழா

பெருமாள்முருகன்

“மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. விழா நிகழ்ச்சிக்கு வந்த பிறகும் என்னுடைய ‘ரோல்’ என்னவென்று தெரியவில்லை. அது ஒரு சஸ்பென்ஸாகவே இருந்தது. பின்னர் எனக்குப் பிடித்த எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு விருது வழங்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.”

நம்பிக்கை விருதுகள் விழா
நம்பிக்கை விருதுகள் விழா

சுகிர்தராணி 

“விருதுகள் என்றாலே சர்ச்சைகள் எழும். அண்மையில்கூட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்வுக் குழுவினர் குறித்த விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், விகடனின் நம்பிக்கை விருதுகளுக்கும் சரி, இலக்கிய விருதுகளுக்கும் சரி, சிறிய  முணுமுணுப்புக்கூட எழவில்லை. விகடன் விருதுப் பட்டியலைப் பார்த்தாலே, அவை எப்படிப்பட்ட நபர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அத்தனை ஆளுமைகளையும் திறமையாளர்களையும் ஒரே இடத்தில் சந்தித்தது, பெரும் மகிழ்ச்சி.”

விழாவை உற்சாகமாகத் தொகுத்து வழங்கினார் ராஜ்மோகன். இலக்கிய விருதுகள் பகுதியைத் தன் தமிழால் அலங்கரித்துத் தொகுத்தார் தமிழச்சி தங்கபாண்டியன். விருதுபெற்ற படைப்பாளிகள் அனைவர் குறித்தும் திரையிடப்பட்ட அறிமுகக் குறும்படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன.