Published:Updated:

காமராஜரின் 116-வது பிறந்தநாளில் நூலகத்தில் உறுப்பினரான 116 மாணவர்கள்!

இ.கார்த்திகேயன்
காமராஜரின் 116-வது பிறந்தநாளில் நூலகத்தில் உறுப்பினரான 116 மாணவர்கள்!
காமராஜரின் 116-வது பிறந்தநாளில் நூலகத்தில் உறுப்பினரான 116 மாணவர்கள்!

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியின் தமிழ்மன்றம் சார்பில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் 116 மாணவ, மாணவிகள் நூலகத்தில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டதுடன், பாடப்புத்தகத்துடன் பொது அறிவுப் புத்தகத்தையும் படிப்பேன் என உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். 

காமராஜரின் 116-வது பிறந்தநாளில் நூலகத்தில் உறுப்பினரான 116 மாணவர்கள்!

ஆண்டு தோறும் ஜீலை 15-ம்தேதி கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை ”கல்வி வளர்ச்சி நாளாக” அறிவிக்கப்பட்டு பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நாடார் நடுநிலைப் பள்ளியில், தமிழ்மன்றத்தின் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்ட்டது. காமராஜரின் 116-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இப்பள்ளியின் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 90 மாணவர்கள், 26 மாணவிகள் என மொத்தம் 116 மாணவ, மாணவிகள் காமராஜர் போல, வேட்டி, சட்டை, துண்டு அணிந்து தலையில் காமராஜர் உருவம் பொறிக்கப்பட்ட அட்டையிலான தொப்பியும் அணிந்திருந்தனர். பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப் படத்திற்கு, வேடமணிந்த மாணவ, மாணவிகள் மலர்தூவி மரியாதை செய்தனர். 

காமராஜரின் 116-வது பிறந்தநாளில் நூலகத்தில் உறுப்பினரான 116 மாணவர்கள்!

தொடர்ந்து, கோவில்பட்டி அரசு நூலகத்தில், காமராஜர்  வேடமணிந்த 116 மாணவ, மாணவிகளும் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். ”கல்வி வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிட விடாமுயற்சியுடன் படிப்போம். பள்ளிப்  பாடப் புத்தகத்தோடு நூலகப் புத்தகங்களையும் படித்து பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். அனைவரிடமும் வாசிப்புப் பழக்கத்தினை  ஏற்படுத்திடுவோம்' என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

காமராஜரின் 116-வது பிறந்தநாளில் நூலகத்தில் உறுப்பினரான 116 மாணவர்கள்!

பின்னர், பள்ளியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வேடமணிந்த மாணவ, மாணவிகள் பேரணியாக, மெயின் பஜாரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். பேரணியில், ”பெண் கல்விக்கு முக்கியத்தும் அளிப்போம். கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுவோம், கல்வியை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம், பள்ளி செல்லாக் குழந்தைகள் இல்லாமல் ஆக்குவோம், பள்ளிக்கு தவறாமல் சென்றிடுவோம், காமராஜர் புகழ் ஓங்குக' என மாணவ, மாணவிகள் கோஷங்கள் எழுப்பினர்.

காமராஜர் வேடமணிந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களும், காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்த பேச்சு, கட்டுரைப் போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அத்துடன், ஏழை மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளும், அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.