Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - பொய் சொல்லக் கூடாது கண்மணி!

அனுஷா... ஆதிரா... இனியா! - பொய் சொல்லக் கூடாது கண்மணி!

டிஜிட்டல் கச்சேரி

அனுஷா... ஆதிரா... இனியா! - பொய் சொல்லக் கூடாது கண்மணி!

டிஜிட்டல் கச்சேரி

Published:Updated:
அனுஷா... ஆதிரா... இனியா! - பொய் சொல்லக் கூடாது கண்மணி!

``அது ஓர் அழகான மாலைப் பொழுது. நானும் அவனும் பீச்சில்...’’

``பீச்சில்?’’

``அடச்சே... அதுக்குள்ள ரெண்டும் பேரும் வந்துட்டீங்களா?’’

``பின்னே... மைண்ட்வாய்ஸை சத்தமா பேசினா எட்டிப் பார்க்கத்தானே செய்வோம்.’’

``இல்லைன்னாலும்...’’

``அடியேய்... போதும், போதும் பீச்சுக்கு வா.’’

``ஒரு கவிதை எழுதலாம்னு நினைச்சேன். அது உங்களுக்குப் பிடிக்காதே...’’

``பொய் சொல்லக் கூடாது கண்மணி. என்ன நடந்துச்சுன்னு சொல்லிடும்மா...’’

``சொல்லிடுவேன். அப்புறம் ஃபீல் பண்ணக் கூடாது.’’

``சொல்லித் தொலை.’’

அனுஷா... ஆதிரா... இனியா! - பொய் சொல்லக் கூடாது கண்மணி!

``அதுவந்து... அதுவந்து... நான் கடலையே பார்த்துட்டு இருந்தேனா...’’

``அப்புறம்?’’

``அப்புறம் என்ன...  மெரினாவுல நண்டு சூப் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுன்னு சொன்னான்.’’

``மேல... மேல...’’

``நண்டு சூப்,  ஃப்ரைடு ஃபிஷ்னு அன்னிக்கு ஃபுல்கட்டு. அவ்ளோதான்.’’

``ஏய்... இந்த இனியா பொண்ணு வேற எதையோ ஃபுல்லா கட்டிட்டு ரொம்பத்தான் வெறுப்பேத்துறா!’’

``லவ்வர்ஸ் ரெண்டு பேரும் பீச்சுக்குப் போனா சாப்பிட்டுட்டு மட்டும் வரக்கூடாதா என்ன? போங்கடீ லூஸூங்களா?’’

``ஓவரா பேசுற இனியாவோட, வாய்க்குப் போடலாமா பூட்டு?’’

``சரி... நீ அவனை லவ் பண்றதெல்லாம் இருக்கட்டும். மொதல்ல உன்னை நீயே லவ் பண்றியானு சொல்லு?’’

``என்னை, நானா? புரியலையே!’’

``தினமும் காலையில எத்தனை மணிக்கு எழுந்துக்கறே? நீ செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் யார் உனக்கு ஞாபகப்படுத்துறா? அம்மாவோட உதவி இல்லாம நீயே காலேஜூக்குக் கிளம்புறியா?’’

``அனு... லவ் பண்றது ஒரு குத்தமா? இவ்ளோ கேள்வி கேட்டு கொல்ற?’’

``உன்னை நீயே லவ் பண்றது உண்மைன்னா இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிஞ்சுக்கோ பொண்ணே!’’

``ம்...’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுஷா... ஆதிரா... இனியா! - பொய் சொல்லக் கூடாது கண்மணி!

``ஆதிரா... நீ என்ன `கெக்கேபெக்கே’னு சிரிச்சுட்டு இருக்கே?’’

``அதுவா... வடிவேலுவோட மரண கலாய் மீம்ஸ் பார்த்து என்ஜாய் பண்றேன்.’’

``ஹாஹா... அப்படியே எங்களுக்கும் அனுப்பலாமே.’’

``அனுப்பிட்டேன்.’’

``ஹாஹா... மரண கலாய்.’’

``ககக... போ!’’

``ஆதிரா, உங்க அப்பாவுக்கு இந்த வருஷம் புரோமோஷன் கிடைச்சுதா?’’

``ஆபீஸ் நேரத்துக்கு முன்னாடியே போயிட்டு ஆபீஸ் டைம் தாண்டி, இருட்டுன பிறகுதான் வீட்டுக்கே வருவாரு. அவருக்குக் கிடைக்காதா என்ன?’’

``அதிக நேரம் வேலை செய்யறதை விட ஸ்மார்ட் வொர்க் ரொம்ப முக்கியம். அதுதான் அப்ரைசலுக்கு ரொம்ப முக்கியம்.’’

``பாயின்ட்... பாயின்ட்!’’

- கச்சேரி களைகட்டும்

அனுஷா... ஆதிரா... இனியா! - பொய் சொல்லக் கூடாது கண்மணி!

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - பொய் சொல்லக் கூடாது கண்மணி!

உங்களை நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க...தெரிஞ்சுக்கலாமா? மினி சர்வே! #VikatanSurvey
http://bit.ly/2q95qeo

அனுஷா... ஆதிரா... இனியா! - பொய் சொல்லக் கூடாது கண்மணி!

தமிழ்ப் பாடல்களும் கலாய் கவுன்ட்டர்களும் - இது வடிவேலு வெர்ஷன்!
http://bit.ly/2q9E1c6

அனுஷா... ஆதிரா... இனியா! - பொய் சொல்லக் கூடாது கண்மணி!

ஜாக்கிரதை! இந்த 10 குணங்கள் இருந்தால் அப்ரைசலில் ஆப்புதான்!
http://bit.ly/2pCG8bC

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism