Published:Updated:

ஆ.ராசாவின் நீதிமன்றக் காவல் மார்ச் 17 வரை நீட்டிப்பு

புதுடெல்லி, மார்ச்.3,2011

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நீதிமன்றக் காவலை வரும் 17ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ##~~##

ராசாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் திகார் சிறையில் இருந்தபடியே டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி முன்பு ஆஜர் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் புலனாய்வு முடியாததால் நீதிமன்ற காவலை நீடிக்கும்படி சி.பி.ஐ. சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ராசாவைத் தவிர, ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் பல்வா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அதிகாரிகள் சந்தோலியா, பரூவா ஆகியோர் இன்று பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இவர்களுடைய நீதிமன்றக் காவலும் மார்ச் 17 வரை நீடிக்கப்பட்டதால், மூவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு