Published:Updated:

"அன்னாசி பழத்துக்கும் #FibonacciSeries க்கும் என்ன தொடர்பு?" - ஜாலியா படிக்கலாம் கணக்கு

"அன்னாசி பழத்துக்கும் #FibonacciSeries க்கும் என்ன தொடர்பு?" - ஜாலியா படிக்கலாம் கணக்கு
"அன்னாசி பழத்துக்கும் #FibonacciSeries க்கும் என்ன தொடர்பு?" - ஜாலியா படிக்கலாம் கணக்கு

ஒரு முழு வட்டதோட 360° கோணத்தை இந்த விகித்தத்தால வகுத்தா 137.5° கோணம் கிடைக்கும். இந்த கோணத்துல தா எல்லாச் செடிலையும் இலை அமைப்பு இருக்குமாம்பா.

நம்மள்ள பலருக்கு ஒண்ணாப்ல இருந்து இன்னிக்கு வரைக்கும் ஒத்தே வராத பாடம்னு சொல்றது இந்த கணக்குப் பாடம் தான். கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல், அல்ஜீப்ரா, ஜாமெட்ரி, இன்டகிரேஷன், டிபரென்சியேஷன்….சபா...எவன்டா இதெல்லாம் கண்டுபுடுச்சது? அவன புடிச்சு ஜெய்லா போடுங்க சார் என்கிற அளவிற்குக் கோபம் வரும். ஏன்னா நமக்கு பாடம் எடுத்த டீச்சர் அப்டி. உண்மைய சொல்லனும்னா கணிதம் ஒரு மொழி. இன்னும் சரியா சொன்னா அது ஒரு விளையாட்டுங்க. ஆர்வத்தைக் கிளப்பும் விஷயமா இருக்குல்ல….

ஆமா. நாமா சின்ன வயசுல படிச்சிருப்போம் எண் கணிதத்தில ஃபிபானசி தொடர் (fibanocci series), ஃபிபானசி எண் அப்படின்னு… ஞாபகம் இருக்கா…

0 , 1 

0+1= 1

1+1= 2

1+2= 3

2+3= 5

3+5= 8

5+8=13

8+13=21

13+21=34

…..

ஐய்...ஞாபகம் இருக்குல்ல….

கணிதம் நமக்கு கடினமாக இருக்கக் காரணமே அதோட உபயோகம் தினசரி வாழ்வுல எங்க இருக்குனு தெரியாதது தான். இப்போ இந்த ஃபிபானசி தொடர் பயன  தெரிஞ்சுக்கலாம்.

இதோட அப்ளிகேஷன்னு சூரியகாந்தி விதையைப் படிச்சிருப்போம்.அது மட்டும் கிடையாது. நாம சாப்படற ஆப்பிள், வெள்ளரிக்காய், பப்பாளி, வெண்டைக்காய் , அண்ணாச்சி,  ஏன் வாழைப்பழத்துல கூட இது இருக்குன்னா பாத்துக்கோங்களேன். 

என்னங்கடா சொல்றிங்க... அப்டின்னு ஷாக் ஆகறது தெரியுது. ஆமாங்க. அதான் உண்மை. ஆப்பிள், பப்பாளி, வெண்டைக்காய் எல்லாம் குறுக்க வெட்டிப் பார்த்தா 5 பாகம் தெரிதா?

வெள்ளரி , வாழைப்பழம் எல்லாம் 3 பகுதியா தெரிதா?

அதெல்லாம் சரி அன்னாசில எப்படி இதுன்னு கேட்கலாம். அதுக்கு மேல முள்ளு முள்ளா இருக்கா? அத நல்லா கூர்ந்து கவனிச்சு பாருங்க கீழிருந்து மேலா ஒரு சுருள் மாறி வரிசைல இருக்கும். அதன் எண்ணிக்கை ஃபிபானசி எண்ணா இருக்கும். அந்த வரிசையோட எண்ணிக்கையும் அதே மாதிரி தான்.

காய், பழம் இப்படி இருக்குன்னா அப்போ அதற்கு உருகொடுத்த பூவும் அப்படி தானே..

உங்களைச் சுற்றி இருக்கும் எந்த ஒரு பூவை வேண்டுமென்றாலும் எடுத்து அதன் இதழ்களை எண்ணி பாருங்க...அதுவும் ஃபிபானசி எண்ணா இருக்கும்.செமல..

சூரியகாந்தி பூவில் நடுவில் உள்ள விதைகள் மையத்தில் இருந்து ஒரு சுருள் பாதையிலேயே இருக்கும். அதன் சுருள் எண்ணிக்கையும் ஒவ்வொரு சுருள் வரிசையில் உள்ள விதை எண்ணிக்கையும் ஃபிபநோக்கி எண்ணாகவே இருக்கும். நேர் சுழற்சி, எதிர் சுழற்சினு எப்படி எண்ணினாலும் கணக்கு சரியா வரும். எண்ணி தா பாருங்களேன் பூ கிடைக்கும் போது. 

இன்னொரு விஷயம் அடுத்து ஃபிபானசி எண்கள வகுத்துப் பாருங்க. அதோட விடை தோராயமா 1.618 னு வரும்.

8÷5=1.6

13÷8=1.625

55÷34=1.618

89÷55=1.618…

இது தான் கணிதத்தின் தங்க விகிதம்னு (Golden ratio) சொல்லுவாங்க. 

ஒரு முழு வட்டதோட 360° கோணத்தை இந்த விகித்தத்தால வகுத்தா 137.5° கோணம் கிடைக்கும். இந்த கோணத்துல தான் எல்லாச் செடிலையும் இலை அமைப்பு இருக்குமாம்பா. 0°, 137.5°, 275°, 412.5°….அப்டியே தான் போகுமாம். இந்த அடுக்கு முறைனால ஒன்னோட நிழல் இன்னொன்னு மேல அதிகம் படாம எல்லா இலையும் உணவு சமைக்கும்னா பாத்துக்கோங்களேன். 

அரை அடி செடிக்கு எவ்ளோ அறிவுல?

இது போக இந்த எண்களை வச்சு சதுரம் போட்டு அதன் ஓரங்களை இணைத்தால் ஒரு சுருள் வடிவம் வரும். அதான் கடவுளின் கைரேகைன்னு சொல்றது. நத்தையோட ஓடு,  அண்டம், மனிதனோடு மரபணுனு தொடங்கி நாம அழகா இருக்குனு ரசிக்கிற எல்லா பொருளும் இயற்கையாவே இந்த வடிவத்தில் தான் இருக்கும்னு சொல்றாங்க. 

இதெல்லாம் 2000 வருஷம் முன்னாடி தமிழ்க்காரர் ஒருத்தர் சொன்னாராம்.ஆனா சான்று இல்ல. 1202 ஆம் ஆண்டு லீயானார்டோ ஆப் பைசா என்கிற ஃபிபானசி ஆதாரத்தோட காட்டியதால இப்போ அவர் பேர்ல இருக்கு…

அவ்ளோ தாங்க கணிதம்... இனி எல்லாம் கணிதமாய் தெரிக….இனி எல்லாம் ஃபிபானசி மயம்…

அடுத்த கட்டுரைக்கு