Election bannerElection banner
Published:Updated:

மதுரையில் நிகழ்ந்த மைப் பேனா புரட்சி !

கே.கே.மகேஷ், படங்கள்: ஜெ.பிரதீப் ஸ்ஃடீபன் ராஜ்

##~##

மதுரை காந்தி மியூசியத்தில் கடந்த வாரம் சண்முகம் அறக்கட்டளையும் காந்தி மியூசியமும் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவு, மருத்துவ முறைகள் தொடர்பான பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிக்கான விதிகள் தான் சுவாரஸ்யம்!

 குறைந்த அளவு போட்டியாளர்களை மட்டுமே எதிர்பார்த்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். காரணம், ஒரு பள்ளிக்கு ஒருவர், கல்லூரி என்றால் துறைக்கு ஒருவர்தான் பங்கேற்க வேண்டும் என்பது நிபந்தனை. கட்டுரைப் போட்டியில் பங் கேற்பவர்கள் கட்டாயமாக மைப் பேனா வால் மட்டுமே எழுத வேண்டும் என்றும் அறிவிப்பு. ஆனால், பள்ளி மாணவ - மாணவிகள் சுமார் 500 பேரும், கல்லூரி மாணவர்கள் சுமார் 100 பேருமாகப் போட்டியில் பங்கேற்று அசத்திவிட்டார்கள்.

மதுரையில் நிகழ்ந்த மைப் பேனா புரட்சி !

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜி.சண்முகம் பேசும்போது, ''கடந்த 2006-ல் இரு சிறுநீர கங்களும் பாதிக்கப்பட்டதால், டாக்டர் களின் ஆலோசனையின்படி தினந் தோறும் டயாலிஸிஸ் செய்துகொண்டு இருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் என் மகன் பாரி, அங்கே மாயா திவேரி என்ற பெண்மணி எழுதிய 'சீக்ரெட்ஸ் ஆஃப் ஆயுர்வேதிக்’ என்ற புத்தகத்தைப் படித்து இருக்கிறான்.

இஞ்சி ஒத்தடம் கொடுப்பதன் மூலம், சிறுநீரகத்தில் செயல் இழந்த செல்களை மறு உருவாக்கம் செய்து செயல்படவைக்கலாம் என்றுபடித்த தும், இந்தியாவுக்கு வந்துவிட்டான். அவன் சொன்னபடியே மூன்று மாதங்கள் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்தேன். இப்போது எனக்கு டயாலிஸிஸ் தேவை இல்லை என்று டாக்டரே சொல்லிவிட்டார்.  

நம்மால் கைவிடப்பட்ட நாட்டு மருத்துவ முறை, அமெரிக்காவில் இருந்து மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி இருக்கிறது. இதுபோன்ற மகத்தான இந்திய மருத்துவ முறைகளை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்வதற் காகத்தான் இந்தப் போட்டியை நடத்துகிறோம்!'' என்றார்.

மதுரையில் நிகழ்ந்த மைப் பேனா புரட்சி !

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து இருந்த 'இயற்கையின் காலடித் தடங்கள்’ அறக்கட்டளை நிர்வாகி கார்த்திகேயன், ''ஒரு நிகழ்ச்சியின் நோக் கம் வெற்றிபெற வேண்டும் என்றால், போட்டியை நடத்துபவர்களே அந்தக் கருத்தைக் கடைபிடிக்க வேண்டும். அதனால்தான், போட்டிக்கான அழைப்பிதழ்கள் அனைத்தையும் ஹேண்ட் மேட் பேப்பரில் அச்சிட்டோம். அதுமட்டுமின்றி மண் ணுக்குக் கேடு விளைவிக்காத மைப்பேனாவால் மட்டுமே கட்டுரைகளை எழுத வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து இருந்தோம். வந்திருந்த அனைவருக்கும் நாங்களே இலவசமாக மைப்பேனாவும் கொடுத்தோம்.

ஆரம்பத்தில் மைப்பேனா வில் எழுதத் தடுமாறிய மாணவர் கள், பின்னர் எழுத்து திருத்தமாக அழகாக வருவதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தார்கள். 'இனிமேல் நாங்கள் மைப் பேனாவை மட்டுமே பயன்படுத்துவோம்’ என்று கூறிச்சென்றார்கள். மண்ணுக்குக் கேடு விளைவிக்கும் ரீஃபில், ஜெல் பேனாக்களின் பயன்பாட்டை கொஞ்சமாவது குறைக்க முடிந்திருக்கிறதே என்று சந்தோஷமாக இருந்தது!'' என்றார்.

நல்ல விஷயம்!

சிறுநீரகக் கோளாறைவிட, அதற்குச் செய்ய வேண்டிய டயாலிஸிஸ்தான் ஏழைகளுக்குக் கஷ்டம் தரும் விஷயம். காரணம், அது கொஞ்சம் காஸ்ட்லி. மாதம் நாலு முறை தொடர்ந்து ஆயுள் முழுவதும் டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு குறைவான கட்டணத்தில் டயாலிஸிஸ் செய்து வருகிறார் டாக்டர் பழனிராஜன். மதுரை கோமதிபுரத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் மூன்று டயாலிஸிஸ் இயந்திரங்களுடன் தொடங்கப்பட்ட இவருடைய சாஸ்தா டயாலிஸிஸ் சென்டர், இப்போது 13 டயாலிஸிஸ் இயந்திரங்களைக்கொண்ட மையமாக வளர்ந்து இருக்கிறது. இங்கு

மதுரையில் நிகழ்ந்த மைப் பேனா புரட்சி !

700 கட்டணத்தில் டயாலிஸிஸ், தங்கும் வசதி, இலவச உணவு வழங்கப்படுகிறது. விரைவில் மஹால் அருகில் புதிதாக ஒரு கிளை தொடங்க இருக்கிறாராம் டாக்டர் பழனிராஜன்!
 

ப.சிதம்பரம் சமீபத்தில் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து இருக்கிறார். அங்கே பூஜை செய்தால், ஆபத்துகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல, அவருடைய மகன் கார்த்தி சிதம்பரமும் சென்ற வாரம் சொந்தத் தோட்டத்தில் 30 புரோகிதர்களைவைத்து பள்ளம் தோண்டி பூஜைசெய்து இருக்கிறார். அப்பாவுக்கும் மகனுக்கும் என்ன பிரச்னையோ?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு