Election bannerElection banner
Published:Updated:

அம்மா பக்கங்கள் !

பி.எஸ்.முத்து

'உன் இளமையில் நீ என்னை சுமந்தாய்...
உன் முதுமையில் நான் உன்னை சுமப்பேன்...

##~##

என் இதய மாளிகையில்!''- 10-ம் வகுப்பு மாணவி சத்யா, தன் அம்மாவைப்பற்றி எழுதிய கவிதை இது.

இதுபோல தங்கள் அம்மாவைப் பற்றி நெல்லை மாக்தலின் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 'அம்மா பக்கங்கள்’ என்று புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார் பள்ளியின் தாளா ளர், செல்வராஜ். நிகழ்ச்சியில் விஜிலா சத்யானந்த் புத்தகத்தை வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி முதல் புத்தகத்தைப் பெற்றுக்கொண் டார்.

புத்தகத்தைத் தொகுத்த சவேரியார் கல்லூரி விஸ் காம் துறைத் தலைவர் சேவியர் ஆண்டனி கூறுகிறார், ''பள்ளி மாணவர்களுக்கு மனித வள வகுப்புகள் நடத்துவதற்குத் தாளாளர் செல்வராஜ் என்னை வரச் சொல்லி இருந்தார். தாமிரபரணி, ஸ்பெக்ட்ரம், சுனாமி என வெவ்வேறு தலைப்புகளில் மாணவர்களை பேசச் சொன்னேன். வித்தியாசமான கோணங்களில் தங்க ளுக்குத் தெரிந்த விஷயங்களைச் சொன்னார்கள். அம்மாவைப் பற்றி பேசச் சொன்னபோது, அமைதி ஆகிவிட்டார்கள். அருகிலேயே இருப்பதால் அம்மா வைப் பற்றி ஏதும் தெரியாமலேயே வளர்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன். அம்மாவைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தேன். பயிற்சிப் பட் டறை முடியும் தறுவாயில், 'ஒரு காட்டில் சிங்கத்தின் பிடியில் உன் அம்மாவும் அப்பாவும் சிக்கிக்கொண்டார்கள். யாரையாவது ஒருவரை மட்டும்தான் உன்னால் காப்பாற்ற முடியும். அப்படி என்றால் நீ யாரைக் காப்பாற்றுவாய்?’ என்று கேட்டேன். ஒரு மாணவன் கொஞ்சமும் யோசிக்காமல், 'என் உயிரை சிங்கத்துக்கு இரையாக்கி, என் தாய் தந்தையைக் காப்பாற்றுவேன்!’ என்றான். அம்மா ஊட்டிய முதல் சாதம், அம்மா பாடிய தாலாட்டு, அம்மாவின் அரவணைப்பு என்று பல விஷயங்களைப் பற்றி மாணவர்களை எழுதச் சொன்னேன். அற்புதமாக எழுதி இருந்தார்கள். அதைத் தாளாளரிடம் காட்டியபோது, புத்தகமாகத் தொகுக்கச் சொன்னார். இப்படித்தான் அம்மா பக்கங்கள் உருவானது!'' என்று நெகிழ்வாகச் சொல்லி முடித்தார்.

அம்மா பக்கங்கள் !

'அம்மா பக்கங்கள்’ புத்தகத்தில் எழுதிய மாணவி வள்ளி, ''சேவியர் ஃபாதர் நடத்துன வொர்க் ஷாப்லதான் முதன்முதலா கவிதை எழுதக் கத்துக்கிட்டேன். எழுத எழுத கவிதை வந்துருச்சு. நான் எழுதின முதல் கவிதையை அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன்!'' என்று மகிழவைத்தார்.  அம்மாக்களின் சார்பில் பேசவந்த ஜமீல்சித்தாரா, ''தம் பிள்ளைகளின் உண்மையான அன்பை எல் லோரும் இந்தப் புத்தகம் வழியாகத் தெரிந்து கொள்ளலாம். என் குழந்தை எழுதிய கவிதையைப் படித்ததும் எனக்கு என் அம்மாவைப் பற்றிகவிதை எழுதவேண்டும் போல இருந்தது!'' என்றார்.

10-ம் வகுப்பு  மாணவி முத்துசெல்வி மாற்றுத் திறனாளி. புத்தகத்தில் அவர்,

'உயிரைக் கொடுத்தது கடவுளாயினும்

உருவைக் கொடுத்தது நீயே!
உருவைக் கொடுத்த தாயே...
உன் கனவுப்படி
நான் உருவாவேன்...  உருப்படுவேன்!’
- என்று எழுதி இருந்தார்.

10-ம் வகுப்பு மாணவர் ஜார்ஜ்,

'அன்புள்ள அம்மாவுக்கு...

அம்மா பக்கங்கள் !

நீ பார்க்கும்போது சொல்ல நினைக்கிறேன்.
நீ முத்தம் இடும்போது சொல்ல நினைக்கிறேன்.
ஆனால்... சொல்ல முடியவில்லை
கடவுளே எனக்குப் பேசும் சக்தி கொடு;  
அவளை 'அம்மா’என்று அழைக்க!’

- என்று எழுதி இருந்தார்.

'நான் உன் வயிற்றை விட்டு
வெளியேறியபோது அழுதேன்...
அது துன்பக் கண்ணீர்.
நீ என்னைப் பார்த்தவுடன் அழுதாய்...
அது ஆனந்தக் கண்ணீர்!

நான் உனக்குப் பிள்ளை...

நீ எனக்கு முல்லை!’  - என்று பாசத்தைக் கொட்டியிருந்தார் ஹரீஷ்.

தங்கள் பிள்ளைகள் எழுதிய கவிதைகளைப் படித்து, பாசத்தில் அவர்களை பல அம்மாக்கள் கட்டிப்பிடித்து கண் கலங்கினார்கள். அதை தூரத்தே நின்று ரசித்துக்கொண்டு இருந்தார்கள் பாசமிக்க அப்பாக்கள்!

அம்மா பக்கங்கள் !

கடந்த 13-ம் தேதி நாகர்கோவிலில் இலக்கியவாதிகளின் கூட்டம் குழுமியது. காரணம், நாஞ்சில்நாடன் இல்லத் திருமணம்தான். காலையில் செட்டி நாட்டு டிபனையும், மதிய உணவாக நாஞ்சில் நாட்டு உணவு வகைகளையும் போட்டு அசத்திய நாஞ்சிலார், திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்குக் கொடுத்த தாம்பூல பையில், திருக்குறள் தெளிவு ரையையும் வைத்திருந்தார்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு