Election bannerElection banner
Published:Updated:

இயற்கையை மீட்க 80 -ஆயிரம் மரங்கள்

அவசிய 'அரண்யா'காண்டம் !ஆ.நந்தகுமார்படங்கள்: ஜெ.முருகன்

##~##

100 ஏக்கர் நிலத்தைப் பார்த்தால் நமக்கு என்ன தோன்றும்? ஒரு பெரிய தொழிற்சாலை கட்டலாம், நிலத்தைக் கூறுபோட்டு ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கலாம், தமிழக அரசாக இருந்தால் 'சர்வதேசத் தரத்தில்’ மருத்துவமனை கட்டலாம் என்றெல்லாம் விதவிதமான யோசனைகள் விரியலாம். ஆனால், புதுச்சேரி ஆரோவில் நிர்வாகத்துக்கு அங்கே ஆயிரக் கணக்கான மரங்களை நடலாம் என்று தோன்றி இருக்கிறது. விளைவு... 80 ஆயிரம் மரங்களுடன் பச்சை உடை போர்த்தி பசுமையாக வரவேற்கிறது 'ஆரண்யா காடு’!

இயற்கையை மீட்க 80 -ஆயிரம் மரங்கள்

புதுவை அருகில் உள்ள புத்துறையில் அமைந்துள்ளது  ஆரண்யா காடு. காடுகளைப் பராமரித்துக் காப்பாற் றும் ஆரோவில் ஊழியர் சரவணனிடம் பேசினேன். ''புதுவைக்குக் குடிநீர் ஆதாரமா இருக்கிறது இந்த முத்திரைபாளையம் புத்துறை பகுதிகள்தான். பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில இருந்து இப்போ வரைக்கும் புதுவைக்குக் குடிநீர் விநியோகம் ஆகிறது இந்தப் பகுதியில இருந்துதான்.

இந்தப் பகுதி முழுசும் செம்மண் வடிகால் களா இருப்பதால், நிறைய தண்ணீரைச் சேக ரித்து சுவையான தண்ணீரைப் புதுவைக்குத் தருது. இன்னும் சில வருடங்களில் புதுவைக் குக் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. காரணம், காடுகள் அழிவது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரி முதல் பல கட்டுமானப் பணி களுக்காகக் காடுகள் அழிக்கப்பட்டுச்சு. அதனாலதான் மீண்டும் காடுகளைப் புதுப்பிக்கக் களத்தில் இறங்கியது ஆரோவில்.

இந்த 100 ஏக்கர் நிலம்தான் 1967-ல் ஆரோவில் நிர்வாகத்துக்காக முதன்முதலில் வாங் கப்பட்ட நிலம். ஆரோவில் பசுமைப் புரட்சி இயக்கம் சார்பா இந்தப் புராஜெக்ட் செய்யலாம்னு 1998-ல் முடிவு பண்ணினோம். இந்த இடம் வாங்கி 30 வருடங்கள் சும்மாவே இருந்ததால், மக்கள் இந்த இடத்தைப் புறம்போக்குனு நினைச்சுட்டு மேய்ச்சலுக்குப் பயன்படுத்திகிட்டு வந்தாங்க. நாங்க முதன்முதல்ல வந்தப்ப இந்த இடம் முழுசும் கட்டாந்தரையா இருந்துச்சு. வெயிலுக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லை. நாங்களே ஷாமியானா போட்டுத்தான் தங்கினோம்.

மழை நீர் ஓட்டத்தைத் தடுத்து சேகரிச்சதுதான் எங்கள் முதல் வேலை. மழைநீர் ஓட்டத்தைத் தடுக்காவிட்டால், அது மண் அரிப்பை ஏற்படுத்தும்.

அப்புறம் இந்த மண்ணை ஆய்வுசெஞ்சு, இதற்குமுன் என்னென்ன மரங்கள் இருக் குன்னு கணித்தோம். இங்கே வாழ்ந்த மக்களும் இந்த விஷயத்தில் எங்களுக்கு நிறையவே உதவினாங்க. பிறகு அதே மரங்களை நடணும்னு ஒவ்வொரு இடமா அலைஞ்சு விதைகள் வாங்கினோம். வேதாரண்யம், செஞ்சி, திருவண்ணாமலை போன்ற இடங்களில் கிடைச்ச விதைகளை வெச்சு 80,000 செடிகளை நட்டோம்.

இயற்கையை மீட்க 80 -ஆயிரம் மரங்கள்

அடுத்த கட்டமா இந்தியா முழுவதிலும்  அழிந்துவரும் தாவரங்களைக் கொண்டு வந்து இங்கே வளர்க்கத் தொடங்கினோம். நாங்க இந்த ஆரண்யா காட்டை உருவாக்க ஆரம்பிச்சப்ப... நிலத்தடி நீர் மட்டம் 45 அடியில் இருந்தது. இப்போ 35 அடியி லேயே தண்ணீர் கிடைக்குது. இந்த மரங்களை உருவாக்கினதுக்குப் பின்னால் நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பு இருக்கிறது!'' என்கிறார் இந்த மரங்களின் காதலர்- காவலர்.

இயற்கையை மீட்க 80 -ஆயிரம் மரங்கள்

காடுகளைப் பாதுகாக்க, குடும்பத்துடன் காட்டுக்குள்ளேயே தங்கி இருக்கும் இவர், தினமும் ஒரு முறையாவது தன் மகளுடன் காட்டுக்குள் வலம் வருகிறார். ''அறிவியல், தொழில்நுட்பம்னு உலகம் எவ்வளவு வேகமாப் போனாலும் விவசாயம் இல்லாத வாழ்க்கை வீண்தான். இங்கே ஆராய்ச்சிக்காக நிறைய மாணவர்கள் வர்றாங்க. அவங்களுக்குத் தேவையான உதவிகளை செய்யும் நாங்கள், விரைவில் மரங்கள் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடங்கப்போறோம்'' என்று எதிர்காலத் திட்டங்கள் குறித்து கண்களில் கனவு விரியப் பேசுகிறார் சரவணன்.

புதுவை மட்டுமில்லை, உலகத் தின் ஒவ்வொரு பகுதியும் படிக்க வேண்டிய  'ஆரண்ய’ காண்டம் இது!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு