Election bannerElection banner
Published:Updated:

அழகிய நிழல்கள் !

நா.இள.அறவாழி படங்கள்: எஸ்.தேவராஜன்

##~##

'மது இந்தியா’ - ஃபேஸ்புக் ரசிகர்களுக்கு ரொம்பவே பரிச்சயமான பெயர். காரணம், ஃபேஸ்புக் பக்கங்களை நிரப்பும் இவருடைய அசத்தல் அழகுப் புகைப்படங்கள். 'மது இந்தியா’ புனைபெயருக்குப் பின் இயங்குபவர் சண்முகராஜன். புதுச்சேரிக்காரர்!

தற்போது ஆரோவில்லில் வசிக் கும் வெளிநாட்டுப் பெண்ணான    ஆண்ட்ரியாவைத் தாவணி கலா சாரத்துக்கு மாற்றி ஆல்பத்துக்கு 'கிளிக்’க்கிக்கொண்டு இருந்தவரை ஓரங்கட்டி னேன்.  

''புதுச்சேரி லாஸ்பேட்தான் நம்ம ஏரியா. நான் ஒரே பிள்ளைங்கிறதால வீட்ல கொஞ்சம், இல்லை இல்லை... நிறையவே செல்லம். அப்பப்ப கண்ல படுற நல்ல விஷயங்களை செல் கேமராவில் பதிவு பண்ணி நண்பர்களிடம் காட்டுவேன். அப்போ குவிந்த பாராட்டுக்கள்தான் என்னை மேலும் மேலும் போட்டோகிராஃபி பக்கம் இழுத்தது.

அழகிய நிழல்கள் !

எம்.பி.ஏ. முடிச்சிருக்கேன். போட்டோகிராஃபியில் பெரிய டெக்னிக் தெரியாதுன்னாலும் என்னால் கண்டிப்பா ஒரு நல்ல போட்டோ எடுக்க முடியும். புதுவையில் நிறைய புகைப்படக் கலைஞர்கள் இருந்தாலும், மாடல்களைவெச்சு எடுக்குறவங்க ரொம்பவே குறைவு. அதனால மாடல்களைவெச்சு புகைப்படங்கள் எடுக்க ஆரம்பிச்சேன்.  

சினிமா ஆசை இருக்குறவங்க ஆல்பம் ரெடி பண்ணுவாங்க. அப்படி ஒரு ஆல்பம் தயாரிக்க சென்னையில் பல ஆயிரங்கள் செலவாகும். ஆனா, நான் அவங்களுக்கு இலவசமா ஆல்பம் பண்ணிக் கொடுக்கிறேன். இதுவரை 10-க்கும் மேற்பட்ட மாடல்களுக்கு  ஆல்பம் உருவாக்கிக் கொடுத்து இருக்கேன்.

அழகிய நிழல்கள் !

ஃபேஸ்புக்ல என் புகைப்படங்களைப் பார்த்துட்டு பலர் எனக்கு மாடலா போஸ் கொடுத்தாங்க.  மாடல்களை வெச்சுப் புகைப்படம் எடுக்கும்போது ஆரம்பத்தில் அவங்க இஷ்டத்துக்கு விட்டுடணும். பிறகுதான் படிப்படியா நமக்குத் தேவையான புகைப்படங்கள் எடுக்கணும். நண்பர்களோட வெப் டிசைனிங் கம்பெனியில் இப்போ தைக்கு வேலை செஞ்சுட்டு இருக்கேன். புகைப்படத் துறையில் நல்ல வாய்ப்பு கிடைச்ச£ கண்டிப்பா முழு நேர போட்டோகிராஃபரா ஆயிடுவேன்!''  கேமரா ஷட்டர் போல கண்கள் சிமிட்டிச் சிரிக்கிறார் சண்முகராஜன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு