Published:Updated:

இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள்!

இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள்!

இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள்!

இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள்!

இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள்!

Published:Updated:
இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள்!

'ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் இளைஞர்களை தவறான வழியிலேயே செயல்பட வைக்கிறது' என்ற குற்றச்சாட்டே பொதுவாக வைக்கப்படுகிறது. ஆனால், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி ஏழ்மையில் உழலும் நோயாளிகளுக்கு நன்மைகள் செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் `இணைந்த கைகள்' என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்.

கரூர் மாவட்டத்தில் உள்ள தோட்டக்குறிச்சியைச் சேர்ந்தவர் சாதிக் அலி. இவரும் இன்னும் பத்து இளைஞர்களும் சேர்ந்து 'இணைந்த கைகள்' என்ற அமைப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். அதன்மூலமாக, 10,00,000 ரூபாய் வரை நிதி திரட்டி இரண்டு சிறுமிகளுக்கு இதய ஆபரேஷன், ஒரு இளைஞருக்கு மூளை ஆபரேஷன்கள் செய்ய வைத்து, அவர்களின் உயிர் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள கேட்டுக்காடு கூத்தம்பாளையத்தைச் சேர்ந்த பாலாஜி என்கிற முப்பது வயது இளைஞரைப் பற்றி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது, மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான இவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு மரத்திலிருந்து விழுந்து, இடுப்பு எலும்பு முறிந்து படுத்த படுக்கையாக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. இந்தத் தகவல் சாதிக் அலிக்கும் வர, தனது அமைப்பைச் சேர்ந்தவர்களோடு நேராக பாலாஜியைப் போய்ப் பார்த்திருக்கிறார். ஏழ்மை நிலவும் பாலாஜியின் குடும்பம், பாலாஜி சம்பாத்தியத்தை மட்டுமே நம்பி இருந்திருக்கிறது. அவர் திடீரென மரத்திலிருந்து கீழே விழுந்து இப்படி ஆகிவிட்டதால், அவரின் மனைவி கூலி வேலைக்குப் போய் கிடைக்கும் சொற்ப வருவாயில்தான் குடும்பம் நடப்பது தெரிந்திருக்கிறது. இடுப்புக்கு கீழ் எந்த அசைவும் இல்லாத பாலாஜிக்கு, எல்லா பணிவிடைகளையும் ஒரு ஆள் இருந்து பண்ணிவிடும் சூழல். இதனால், வேலைக்குப் போகும் இடத்தில் அடிக்கடி அனுமதி வாங்கிகொண்டு வந்து கணவரை கவனித்து வந்திருக்கிறார். மூன்று குழந்தைகள் வேறு இருப்பதால், அவர்களுக்கு மூன்று வேளை சோறு போடவே சிரமப்பட்டிருக்கிறார். பாலாஜிக்கு ஒரு வாரத்துக்கான மாத்திரை செலவு மட்டுமே ரூ. 2,500 ஆகுமாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாலாஜியின் நிலைமையைப் பார்த்த சாதிக் அலி, அவரின் குடும்பத்துக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான மளிகை சாமான்கள், அரிசியை வாங்கி முதலில் கொடுத்திருக்கிறார். அதோடு, பாலாஜியை டாக்டரிடம் அழைத்துக்கொண்டு போய் காண்பித்தபோது, ``இவர் இருக்கும் சூழலில் இப்போதைக்கு ஆபரேஷன் செய்ய முடியாது. இப்போதைக்கு அவருக்கு உரிய மாத்திரைகளைத் தவறாமல் கொடுக்கணும்" என்று சொல்லி இருக்கிறார். அதனால், மாதாமாதம் அவருக்கு உரிய மாத்திரை, மருந்துகளை வாங்கித் தர சாதிக் அலி ஒப்புக்கொண்டுள்ளார். அதோடு, பாலாஜி மனைவியிடம் பத்தாயிரம் பணத்தையும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள் இணைந்த கைகள் அமைப்பினர்.

இதுபற்றி, சாதிக் அலியிடம் பேசினோம். ``பாலாஜியின் நிலைமையைப் பார்த்ததும் கண் கலங்கிட்டோம். அதைவிட அவரின் குடும்பமும் அல்லல்பட்டு வந்தது. அதனால், சமூக வலைதளங்கள் மூலமா நிதி திரட்டி, அவரை நலமாக்க முடிவு செய்திருக்கிறோம். இப்போதைக்கு முதல்கட்ட உதவிகளை மட்டுமே செய்திருக்கிறோம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அவற்றை திரட்டி பாலாஜியை 100 சதவிகிதம் நலமாக்குவோம்" என்றார் உறுதியாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism