Published:Updated:

முதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்!

முதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்!

நடிகை ஶ்ரீ ரெட்டி பேட்டி

முதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்!

நடிகை ஶ்ரீ ரெட்டி பேட்டி

Published:Updated:
முதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்!

ஶ்ரீரெட்டி... கடந்த சில வாரங்களாக டோலிவுட் கோலிவுட்டில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் இதுதான். பட வாய்ப்புகள் தருவதாகச் சொல்லி படுக்கைக்கு அழைத்து தன்னைப் பயன்படுத்திக்கொண்டனர் என்று தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோக்கள் உட்பட பல சினிமா பிரபலங்கள் மீது குற்றம்சாட்டிய இவர்தான், சினிமாவின் லேட்டஸ் வைரல் மெட்டீரியல். இதற்காகப் பல கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். உண்மையில் ஶ்ரீரெட்டி யார்? இப்படி ஒரு இக்கட்டான சூழலுக்கு இவர் தள்ளப்பட்டதற்குக் காரணம் என்ன... அவரே நம்மோடு பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

``டிவியில இருந்து சினிமாவுக்குப் போகணுங்கிற ஆசை எப்போ வந்தது, யார் உங்க ரோல் மாடல்?" 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஒருநாள் நானும் என் முன்னாள் காதலனும் பார்ட்டிக்குப் போயிருந்தோம். அங்கே த்ரிஷாவும் ராணாவும் ஜோடியா வந்திருந்தாங்க. த்ரிஷாவைப் பார்த்து என் பாய் ஃப்ரண்டு, `த்ரிஷா எவ்ளோ அழகு, ரொம்ப க்யூட், எப்படி இருக்காங்க தெரியுமா?'னு என்கிட்டயே த்ரிஷாவை ரொம்ப வர்ணிச்சுப் பேசினான். அப்போ எனக்கு த்ரிஷா மேல பொறாமையா இருந்தது. நானும் ஹீரோயின் ஆகிட்டா, என் பாய் ஃப்ரெண்டு  என்னையும் அப்படி வர்ணிப்பான்னு தோணுச்சு. அதுக்காக டிவி வேலையை விட்டுட்டு, ஒரு மாடல் ஆனேன். என்னைப் படமெடுத்த போட்டோகிராஃபர் ஒருத்தரோட நண்பர் ஒரு சினிமா இயக்குநர். அவர் படத்துலதான் முதல்ல கமிட் ஆனேன்."  

``சினிமா துறையில காஸ்டிங் கவுச் (பாலியல் தொல்லைகள்) பிரச்னை இருக்கும்னு தெரிஞ்சுதான் உள்ளே வந்தீங்களா?"

``எல்லோருக்கும் தெரியுமே. எல்லோரும் இந்த மாதிரியான பிரச்னைகள் இருக்குனு சொல்றாங்க. ஆனா, அதுக்கு ஆதாரம் எதுவும் இல்லையேனு நான் அதைப் பத்தி அவ்வளவா யோசிக்கலை. மீடியா துறை ரொம்ப ஸ்டிரிக்ட். யாரும் யாரையும் இந்த விஷயத்துக்காகக் கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா, சினிமாவுல அப்படி இல்லை. நேரடியாவே இந்த விஷயத்துக்காக அப்ரோச் பண்ணுவாங்க." 

``உங்களுக்கு காஸ்டிங் கவுச் பிரச்னை முதல் முதலா எப்போ நடந்தது? அப்போ, அதை எப்படி எதிர்கொண்டீங்க?" 

``ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக ஒரு கிராமத்துக்குப் போயிருந்தோம். ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, நைட் டைம்ல அந்த டைரக்டர் என் ரூம் கதவைத் தட்டினார். அவர், என்னை அடையத்தான் முயற்சி பண்றார்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். `இதைப் பத்தி முடிவெடுக்க எனக்கு ரெண்டு நாள் டைம் வேணும்'னு சொல்லிட்டேன். பிறகு, நல்லா நடிக்கலைனு எல்லோர் முன்னாடியும் திட்டுறது, ஒன் மோர், ரீ-டேக் எடுத்து டார்ச்சர் பண்றதுனு வேறவிதமா நடந்துகிட்டார். அந்த ரெண்டு நாளும் எனக்கு நரகமா இருந்தது. எனக்குக் கெட்ட பெயர் வந்திடுச்சுனா, அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காது, நடிகை ஆக முடியாதுனு நானும் அதுக்கு `சரி'னு சொல்லிட்டேன்." 

``டோலிவுட்ல பவன் கல்யாண், நானினு பலர் மேல குற்றச்சாட்டுகளை வெச்சு போராட்டமெல்லாம் பண்ணீங்க? அந்தப் பிரச்னை எந்தளவுல இருக்கு?" 

``நடிகர் விஷால் உங்களை மிரட்டியதா சொன்ன நீங்க, மறுநாளே மன்னிப்பு கேட்டதற்கான காரணம் என்ன?"

``எல்லோரையும் தப்பு சொல்ற உங்களுக்கு, உங்கமேல எந்தத் தப்பும் இல்லைனு சொல்றீங்களா?"  

``ஒவ்வொரு சினிமா பிரபலங்களின் பெயர்களை வெயிடுறதுக்கான காரணம் என்ன?"

இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு ஶ்ரீ ரெட்டி பதில் அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியை இந்த வீடியோவில் பார்க்கலாம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism