Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - இது பேய் உலாவும் காலம்... ஹிஹிஹி!

அனுஷா... ஆதிரா... இனியா! - இது பேய் உலாவும் காலம்... ஹிஹிஹி!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுஷா... ஆதிரா... இனியா! - இது பேய் உலாவும் காலம்... ஹிஹிஹி!

டிஜிட்டல் கச்சேரி - ஓவியம்: ஸ்யாம்

``தயவுசெஞ்சு ரெண்டு பேரும் கிளம்புறீங்களா?’’

``இனியா... ஏன் இவ்ளோ டென்ஷன்? எதுக்கு இப்படிக் கத்துறே?’’

`‘ஸாரி ஃப்ரெண்ட்ஸ்... நான் இந்த உலகத்துலயே இல்ல. எனக்கு என்ன ஆச்சுனே தெரியலையே...’’

``அடி பைத்தியக்காரி, எங்ககிட்ட எப்பவும் இப்படி நடந்துக்க மாட்டியே... இந்த அளவுக்கு நீ கோபப்படுறேனா, கண்டிப்பா ஏதோ ஒரு பிரச்னையில நீ சிக்கிக்கிட்டு இருக்கேனு தெரியுது. சொல்லு, என்ன விஷயம்?’’   

அனுஷா... ஆதிரா... இனியா! - இது பேய் உலாவும் காலம்... ஹிஹிஹி!

``வாழ்க்கையைப் பத்தின பயம் என்னைப் புரட்டிப் போடுது ஆதிரா. அடுத்து என்ன பண்ணப்போறேன்னு எக்கச்சக்கக் குழப்பம்.’’

``ஹாஹா... இதான் உன் குழப்பமா? இந்த மாதிரி குழப்பங்கள் சில நேரங்கள்ல நம்மைத் தப்பான முடிவை எடுக்க வைக்கும். இதுதான் கவனமா இருக்க வேண்டிய நேரம். படிப்போ, வேலையோ... அடுத்த கட்டமா எதை தேர்ந்தெடுக்குறதுனு ஒரே குழப்பமா இருக்கறப்ப அவசரப்பட்டு எதையாவது செலெக்ட்  பண்ணாம, கொஞ்ச நாளைக்கு குழப்பத்துலயே இருக்கறதுகூட நல்லதுதான்.’’

``ஆமா... ஆமா... ஒரு பூதம் வந்து மனசைப் பிச்சுத் தின்னப்பார்க்கும். பயப்படவே கூடாது!’’

``ஏய் அனுஷா... அவளே பயந்து கிடக்குறா. நீ வேற பேய் பூதம்னு அவளை ஏன் பயமுறுத்துற?’’

``இது பேய் உலாவும் காலம்... ஹிஹிஹி!’’

``நீ சும்மா சொன்னாவே பயம் வரும். இதுல ஃபேஸ்ல மாஸ்க் வேறயா? போம்மா போ... காத்து வரட்டும்...’’

``நான் எவ்ளோ கஷ்டப்பட்டு என் கையாலயே ஃபேஸ் மாஸ்க் செஞ்சு போட்டிருக்கேன். நீ என்னடான்னா கலாய்க்கறியே!’’

``அய்யே... யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ... என்ன மாஸ்க்குடி இது?’’

``இதுதான் மாம்பழ ஃபேஸ் மாஸ்க்!’’

``மாம்பழ ஜூஸை எடுத்து முகத்துல பூசிக்கிட்டேன்னு சொல்லு!’’

``ஃபேஸ் வாஷ் பண்ணதும் பாருங்க. `வாவ் ஏஞ்சல்’னு சொல்லி, கண்ணு வைப்பீங்க!’’

``ஏஞ்சலா... ஐயோ பேயி! அனுஷா, முகப்பொலிவுக்கு மேல்பூச்சு மட்டும் முக்கியம் இல்லை. சரியான அளவுல தண்ணீர் குடிக்கணும்.  வேளாவேளைக்குச் சாப்பிடணும் தெரியுமா?’’

``சாப்பாடெல்லாம் வேளாவேளைக்குத்தான் எடுத்துக்கறேன். ஆனா, தண்ணி குடிக்கத்தான் மறந்துடறேன்...’’

``என்னடி நீ... எல்லாத்துக்கும் உன் மொபைல்ல ஆப்ஸ் வெச்சிருப்ப... இதுக்கு ஆப்ஸ் இல்லையா? `வாட்டர் லாக்டு’னு ஓர் `ஆப்’ இருக்கு. ஒருநாள் முடியும்போது நம் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கிட்டோமான்னு அது செக் பண்ணி நம்மை அலெர்ட் பண்ணும். ட்ரை பண்ணிப் பாரேன்...’’

``இன்னிக்கு ஏன் ஆரோக்கியப் பேச்சாவே பேசிட்டு இருக்கோம்... நான் மீன் பிடிக்கப் போறேன். யாரெல்லாம் வர்றீங்க?’’

``மீன் பிடிக்கப்போறியா, இல்ல...’’

``போதும்ம்ம்மா... அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியா அங்கதானே வர்றீங்க. என் பாகுபலியோட போன வாரமே ஊர் சுத்தியாச்சு!’’

``இந்த முறையும் ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போய் மெனுகார்டையேதான் பார்த்துட்டு இருந்தானா?’’

``ஆமா... ஆனா, மெனுகார்டு முழுக்க என் பெயர் மட்டும்தான் அவன் கண்ணுக்குத் தெரியுதுனு சொன்னான்!’’

``இது உலகமகா நடிப்புடா சாமியோவ்... முடியலை!’’

``உங்ககிட்ட உண்மையைச் சொன்னா கண்ணு வெச்சுருவீங்க. இதோட நிறுத்திக்குவோம் செல்லங்களா!’’

``சரிங்க மேடம். உங்களைப் பார்த்தா வெட்கப்படுற மாதிரி தெரியலை. அதனால மீன் பிடிக்கவே போகலாம். நாங்களும் வர்றோம்!’’

``கமான்... டைம் மெஷின்ல ஏறி ஒரு புது உலகத்துக்குப் புறப்படுவோம்.’’

``ஆமா... புறப்படுவோம்!’’

- கச்சேரி களைகட்டும்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அனுஷா... ஆதிரா... இனியா! - இது பேய் உலாவும் காலம்... ஹிஹிஹி!

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது, இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - இது பேய் உலாவும் காலம்... ஹிஹிஹி!

முகப்பொலிவுக்கு உதவும், பருக்கள் நீக்கும் மாம்பழ ஃபேஸ் மாஸ்க்!

http://bit.ly/2rLXi4a

அனுஷா... ஆதிரா... இனியா! - இது பேய் உலாவும் காலம்... ஹிஹிஹி!
அனுஷா... ஆதிரா... இனியா! - இது பேய் உலாவும் காலம்... ஹிஹிஹி!

தவறான எண்ணங்களை விடவும், குழப்பம் நல்லது!

http://bit.ly/2qZ45rq

அனுஷா... ஆதிரா... இனியா! - இது பேய் உலாவும் காலம்... ஹிஹிஹி!
அனுஷா... ஆதிரா... இனியா! - இது பேய் உலாவும் காலம்... ஹிஹிஹி!

மாதங்களும் வாரம் ஆகும்... நானும் நீயும் கூடினால்! - ஏன் அப்படி? #TimePsychology

http://bit.ly/2qS9d1S

அனுஷா... ஆதிரா... இனியா! - இது பேய் உலாவும் காலம்... ஹிஹிஹி!
அனுஷா... ஆதிரா... இனியா! - இது பேய் உலாவும் காலம்... ஹிஹிஹி!
அனுஷா... ஆதிரா... இனியா! - இது பேய் உலாவும் காலம்... ஹிஹிஹி!

போதுமான தண்ணீர் அருந்துகிறோமா? சம்மரைச் சமாளிக்க உதவும் ஆப்ஸ் கணக்குப்பிள்ளை!