Election bannerElection banner
Published:Updated:

கம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி?

கம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி?
கம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி?

கம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி?

கரையிலிருந்து சில காத தூரம் தள்ளி ஒரு கட்டுமரம் அலையில் மிதந்துகொண்டிருக்கிறது. எங்கோ ஏற்பட்ட அலையின் மையத்திலிருந்து தோன்றும் ஒவ்வொரு மடிப்பிலும் அந்தக் கட்டுமரம் அதன் போக்குக்கு அசைந்துகொண்டிருக்கிறது. துடுப்புகள் அதன் இயக்கத்துக்கேற்ப கட்டுமரத்தை நிலைத்துச் செல்ல உதவிக்கொண்டிருக்கிறது. அந்தப் படகோட்டிக்கு மீன்கள் கிடைக்கலாம், வெறும் கையுடன் கரைக்குத் திரும்பலாம், அலையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடலின் ஆழத்துக்குச் சென்று மாயலாம்… ஆனால், அத்தனையையும் மனதில் வைத்துக்கொண்டே அலையுடன் அவன் விளையாடிக்கொண்டிருக்கிறான். உள்ளிருந்து ஒரு குரல் அவனை உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கிறது, `துடுப்பைச் செலுத்திக்கொண்டே இரு…’ #koode

கம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி?

மனித வாழ்வு, அந்த அலையும் துடுப்பும் கட்டுமரமும்தான் என்கிறது `கூடே’ படம். மனித உறவுகளை வைத்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தேர்ந்த கதை சொல்லி அஞ்சலி மேனன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

மரக்கிளையிலிருந்து விழும் கூடொன்றை எடுத்து மரத்தில் வைத்தபடி தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் சிறுவயது ஜோஷ்வா. தனக்கு வந்திருக்கும் மொபைல் அழைப்பை எடுக்கத் தயங்கும் நடுத்தர வயது ஜோஷ்வாவாக பிருத்விராஜ். ஒரு மகனாக, சகோதரனாக, மாணவனாக, மௌன மொழி காதலனாக, நேசத்தை வெளிப்படுத்திய காதலனாக, ஊருக்குப்புதியவனாக, குடும்ப பாரத்தைச் சுமப்பவனாக, உருகுபவனாக, மருகுபவனாக… ``லவ் யூ ச்சா…” 

``பிரதர்ர்ர்ர்ர்…” என நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நம்மைக் கவர்ந்த நஸ்ரியா, மீண்டும் வந்து `ச்சா’வை அறிமுகப்படுத்தியிருக்கிறார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் நஸ்ரியா தோன்றும் காட்சிக்காகக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதைக் கொண்டாட, குதூகலிக்க, கத்தித் தீர்க்க ரசிகர்கள் ஒவ்வொரு காட்சிக்கும் தயாராக சீட்டின் நுணிக்கு வந்து சேர்கிறார்கள்… ஆனால், நஸ்ரியா திரையில் எட்டிப்பார்த்த அந்தத் தருணத்தில் ஒவ்வொரு ரசிகரும் வேறொரு குரலில் கத்தியதுதான் படத்தின் முதல் ஆச்சர்யம்… 

கம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி?

மகளாக கண்ணீர் உதிப்பதாகட்டும், வலியில் முனகுவதாகட்டும், நண்பர்களைக் கண்டு வலி மறந்து சிரிப்பதாகட்டும், காதலனைக் கண்டு தவித்து மருகுவதாகட்டும், அவள் கவிதை கண்டுகொள்ளப்பட்ட உடன் குதூகலிப்பதாகட்டும், We Missed You நஸ்ரியா..! பத்து நிமிடங்கள் தவிர மீதிப் படம் முழுக்க வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய இடத்துக்குள் நடிக்க வேண்டிய கட்டாயம் நஸ்ரியாவுக்கு. அந்தக் குறுகிய இடத்துக்குள் சகோதரனுடனும் தன் செல்ல நாயுடனும் உறவாட வேண்டும். தன் காதலனின் அருகாமையில் தவிக்கும் போதும் சரி, அவன் தரப்பு வாதத்தைப் புரிந்து அவனுடன் நெருங்கும் போது சரி, சகோதரனின் காதலி உடன் பயணிக்கும் போது, அவர்கள் நெருக்கத்தை மதிப்பதும், சகோதரனை ஓரக்கண்ணால் நக்கலடிப்பதும் சரி நஸ்ரியா தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். நஸ்ரியாவைத் தவிர வேறொருவரை ஜென்னி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்க முடியாது, அது நஸ்ரியாவுக்காக எழுதப்பட்ட பாத்திரம் என பிருத்வி சொன்னது அத்தனை நிஜம் எனத் திரையில் உணர முடிகிறது. 

மென்சோகத்துடன் வலம் வரும் பார்வதி, ஒரு சின்ன தலையசைப்பில் நம்மைக் கவிழ்த்து விட்டுப்போகிறார். கூந்தலை சரி செய்து சுருள் முடிகளை படரவிடுவதும், திரை முழுக்க விரிந்த கற்றை முடியைச் சேர்ந்து கட்டும்போதும் சுந்தரிப்பெண்ணே..!  தந்தையுடனான அவருடைய உறவும் ``கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது?” என்ற மாயா ஏஞ்சலோவின் புத்தகத்தை அவர் தந்தை பரிந்துரைப்பதும், அதற்கான சோஃபியின் (பார்வதி) எதிர்வினையுமான ஒரு காட்சி போதும். கண்களும், தலை அசைவுமே அத்தனை பதில்களையும் சொல்லிவிடுவதால், பார்வதிக்கு அதிகமாகப் படத்தில் வசனங்கள் கூட இல்லை. இன்னும் எத்தனை முகங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறாள் என ஒவ்வொருமுறையும் அதிசயிக்க வைக்கிறார் இந்தத் தென்னிந்திய நடிப்பு ராட்சஷி.

கம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி?

—-

படம் முழுக்க வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் இன்னொரு கதாபாத்திரத்துக்குமான உறவில் ஒரு சிக்கலும் நெகிழ்ச்சியும் இருக்கிறது. தந்தை-மகன், தாய்-மகன், சகோதரன்-சகோதரி, ஆசிரியர்-மாணவன், பள்ளிக்கால வயதில் தோன்றும் ஈர்ப்பு, சொல்லாத நேசத்துக்குச் சொந்தக்கார உறவுகள், நாயுடனான உறவு, தந்தை-மகள், நண்பர்கள், கதைக்குள் காட்டப்படாமல் சொல்லப்படும் ஓர் அயல் தேச காதலர்களுக்கு இடையிலான உறவு எனப் படம் முழுக்க அத்தனை மனித உறவுகள் நெருங்கியும் விலகியும், நேசித்தும் முரண்பட்டும் அத்தனை கதை சொல்லப்படுகிறது. மனிதர்களுடனான உறவுகளில் ஏற்படும் இந்தச் சிக்கல்தானே மனித குலத்தில் இதுவரைக்கும் சொல்லப்பட்ட அத்தனை கதைகளுக்குமான ஆதாரம்.  

ஒரு கதைக்கு எதெல்லாம் தேவை, எதெல்லாம் தேவையில்லை என்று சில விஷயங்கள் உண்டு. மேம்போக்காக அஞ்சலி மேனனின் படங்களில் வரும் காட்சிகளை நாம் வெட்டி எறிந்துவிட்டுக்கூட படத்தைத் தொடரலாம். அது காட்சி அனுபவத்துக்கு எந்தவிதமான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது. ஆனால், அவற்றைப் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களுடன் இணைப்பதில் தேர்ந்த விற்பன்னராக இருக்கிறார் அஞ்சலி. பெங்களூர் டேஸில் வரும் குட்டனின் (நிவின் பாலி) அப்பா வீட்டைவிட்டு ஓடிவிடுவார். பல மாதங்கள் கழித்து அவர் கோவாவில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கடிதம் ஒன்று வரும். கூடேவில் வரும் வேன்கார சாஹிப் அப்படி முகமறியா ஒரு கதாபாத்திரம். முகமறியா கதாபாத்திரங்கள் நம்முள் ஏற்படுத்தும் எண்ண ஓட்டங்கள் எப்போதும் அதீதமானவை. வேன்கார சாஹிப்பும் பிருத்வியும் ஒரே நேர்க்கோட்டில் இணையும் இறுதிக்காட்சிகள் எல்லாம்... அன்பு முத்தங்கள் அஞ்சலி மேனன் 

கம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி?

கூடே படத்துக்கு முன்பு ஒரு பேட்டியில் பிருத்விராஜ், ``நஸ்ரியாவுடன் இதற்கு முன்பு நடித்ததில்லை, பழக்கமில்லை ஒரு விருது விழா நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன், அப்போது நஸ்ரியாவுக்கு ஆறோ, ஏழோ வயதிருக்கலாம்” என்றார். கிட்டத்தட்ட படத்திலும் அதுதான், அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சகோதரியைச் சந்திக்கிறான், இருவருக்குமான நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுகிறது, இருவருக்குமான தலைமுறை இடைவெளி, இருவரும் அவரவர் காதலைப் பற்றிப் பேசுவது, கொஞ்சம் சிரிக்கலாம் என நஸ்ரியா வம்பிழுப்பது, உனக்காகவும் கொஞ்சம் வாழ்ந்து பார், கடமைக்கும் காதலுக்கும் விளக்கம் சொல்வது, பிருத்வி ஒவ்வொரு முறை தயங்கும் போதும் அவரை முடிவெடுக்க ``உள்ளிருந்து எழும் குரல்” நஸ்ரியாவுடையது. நஸ்ரியா வளர்த்த நாயைக் கண்டு முதலில் நடுங்குவதும், அதன் நேசத்தைப் புரிந்து அதனை நேசிக்கத் தொடங்குவதும், நஸ்ரியா ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு, அதைப் பிருத்வி முழுமையாகக் கவனிக்காமல் விட்டுவிட அதைத் திரும்பிக் கேட்கும் போது நஸ்ரியா கொடுக்கும் ரியாக்‌ஷனை திரையில் மிஸ் செய்துவிடாதீர்கள். 

தந்தைக்கும் மகனுக்குமான உறவு அவ்வளவு பேசாமல் அழகாகக் கடத்தப்படுகிறது. மகனின் சிறுவயது காதலான பொம்மை ரயிலின் விளையாட்டை இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவர் நேசித்துக்கொண்டிருக்கிறார். பள்ளியில் அவன் தோல்வியடையும் போது தோளில் வாஞ்சையுடன் கைபோட்டு அவன் நேசித்ததை அவனுக்குக் காட்டுகிறார். மகன் வீடு திரும்பியதும், அவனுடன் பெரிதாகப் பேசாமல், அவனுக்கு ஒரு தேவை வரும் போது பெருந்துணிச்சலுடன் முன் வந்து நிற்கிறார்.

கம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி?

உறவின் விரிசலில், சிக்கலில் கனம் கூடும்போதெல்லாம் திரைக்கதையில் அஞ்சலி நகைச்சுவையைத் தூவிச்செல்கிறார். ஊர் முழுக்க வதந்தி பரப்பும் கிழவி, முடி வெட்டினால் அழகாகிவிடும் உறவினர் ஒருவர், பள்ளி மேடையில் முழுமையாகப் பாடவிடாமல் தடுத்த ஆசிரியையிடம் முறையிடும் மாணவனாகட்டும், இங்க யாருடா ஓனர்' என ஆரம்பித்து தெரிந்தவர் என்றவுடன் `வடை பழசு நேத்துப்போட்டது, பஜ்ஜி வாங்கிக்கோ' எனச் சிரிக்கும் `பன் ஆம்லேட்' கடைக்காரர் வரை நம்மைச் சிரிக்க வைக்க அத்தனை விஷயங்கள் உண்டு படத்தில். அத்தனை பேரையும் தாண்டி நஸ்ரியா செய்யும் சேட்டைகள் தனிரகம், நஸ்ரியாவின் இந்தச் சேட்டைகள் இல்லாமல் போனால் படம் ஒரு துயர காவியமாக மாறிவிடக்கூடிய வாய்ப்பு அதிகம், இதனை அஞ்சலியே படத்தில் பகடி செய்துவிடுகிறார். 

 பள்ளியில் தன்னை நேசித்த பெண்ணொருத்தியுடன், அவன் தயங்குவதும், இயலாமையுடன் அவளைத் தவிர்த்துவிட்டுச் செல்வது, பல ஆண்டுகள் கழித்து அவளை மீண்டும் சந்திக்கும் போதும் அதே தயக்கம் அவனைப் பிடுங்கித் தின்கிறது, அவளுடைய சிக்கல்களைப் புரிந்துகொள்ளாமல் அவன் அசட்டுத்தனத்துடன் ஒரு கேள்வியைக் கேட்டு, பிறகு அவளைப் புரிந்து அவளுக்காக வாழத்துவங்குவதும் வாழ்வதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தொடங்குகிறான். கதாபாத்திரங்களுக்கு  இடையிலான அத்தனை உறவுச்சிக்கல்களையும் தாண்டி ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள்... இத்தனைக்கும் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் ஏதோ ஒரு குறைபாடும், மற்றவர்கள் மீதான வருத்தமும் இருந்து கொண்டிருக்கிறது. அன்பு அத்தனை குறைபாடுகளையும் மீறிய ஒன்றுதானே!

கம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி?

கால்பந்து பயிற்சியாளராக ஓர் ஆசிரியரைப் போல மாணவனை வழிநடத்துகிறார் பிருத்வியின் ஆசிரியராக வரும் அதுல் குல்கர்னி. சிறுவயதில் அவன் தொலைத்த உறவுகளை, வாழ்க்கையை அவன் மீண்டும் அடைய, அவருடைய தொலைந்த வாழ்வு அவனுக்கு அத்தனையையும் கிடைக்க உத்வேகப்படுத்துகிறது. ஓர் ஆசிரியருக்கு வழிநடத்துவதானே முக்கியமான விஷயமாக இருக்க முடியும்.  

மராத்தி மொழியில் சச்சின் குண்டல்கர் எழுத்தில் வெளியான ``Happy Journey” திரைப்படத்தின் தழுவல்தான் என முதலிலேயே அஞ்சலி தெரிவித்திருக்கிறார். மராத்தி மூலத்தில் நடித்த அதுல் குல்கர்னிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் உண்டு. மராத்தியப் படத்தின் மூலக்கதையை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு திரைக்கதையில் அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கிறார் அஞ்சலி. மலையாளப்படங்களுக்கே உரிய எளிமையும் அழகியலும், நீலகிரி மற்றும் ஊட்டியைச் சுற்றிய நிலப்பரப்புக்காட்சிகள் காட்டும் குளுமையையும் அப்படியே தன் கேமராவில் பாதுகாத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் லிட்டில் ஸ்வயம்ப். ராகுல் தீக்ஷித்தின் இசையும், தேர்ந்த நடிகர்களின் நடிப்பும் படத்தை உண்மையிலேயே காவியமாக்குகிறது. படம் மிகவும் மெதுவாக இருப்பதை சிலர் குறையாகச் சொல்கிறார்கள். விமர்சனத்தின் ஆரம்பத்தில் சொல்வது போல், எந்தவிதச் சலனமும் இல்லாத ஓர் ஏரியில் நிலா வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டே துடுப்பை இயக்கி பயணிக்கும் அனுபவம் தரவல்லது இந்தக் `கூடே'. அதை மோட்டார் பொருத்திய படகில் அமர்ந்து விருட்டென வேகமாகப் பார்க்க நினைப்பது நியாயமில்லையே. 

கம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி?

`கூடே' ஓர் அனுபவம் டோன்ட் மிஸ்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு