Published:Updated:

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

Published:Updated:
சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!
சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்துக்கு உணவே அடித்தளம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். உணவு உண்ணாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குச் சிலர் ஜூஸ் கொடுப்பார்கள். ஆனால், நேரம் காலம் தெரியாமல் எந்த ஜூஸை எப்போது கொடுக்க வேண்டும் என்பது புரியாமல் இருப்பார்கள். நெஞ்சுச்சளி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு, ஜூஸ் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற சில வரைமுறைகள் உள்ளன. வளர்ச்சி குன்றிய குழந்தைக்கு ஆப்பிள் ஜூஸ் தருவது, மலச்சிக்கல் உள்ள குழந்தைக்குத் திராட்சை, வாழைப்பழம் ஜூஸ் தருவது என யாருக்கு எந்த ஜூஸ் தரலாம் என்று பட்டியலிடுகிறார் உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன். மேலும், அவற்றின் பலன்கள் பற்றிக் கூறுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் லட்சுமி. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் ஹெல்த்தி ஜூஸ்களைச் செய்து காட்டுகிறார், சமையல் கலை நிபுணர், ஆதிரை வேணுகோபால்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விதவிதமான பழச்சாறுகள்

குழந்தைகளுக்கு 10-வது மாதத்திலிருந்து பழச்சாறுகள் கொடுக்கலாம். காலை நேரங்களில் ஒரேமாதிரியான பழச்சாறுகள் கொடுப்பதைத் தவிர்க்கலாம். மேலும், சீசன் பழங்களான வாழை, அன்னாசி, முலாம், தர்பூசணி, கிவி போன்றவற்றை மாறிமாறிக் கொடுக்கலாம். இரவு நேரங்களில் சிட்ரிக் ஆசிட் நிறைந்த பழச்சாறுகளைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

பழச்சாறு அருந்துவதற்கான சிறந்த நேரம், காலை 11 மணி மற்றும் மாலை 3 மணி. உணவு உண்டபின் பழச்சாறுகளை அருந்தக்கூடாது. ஆனால், நெஞ்சுச் சளி, மூச்சுத்திணறல் உள்ள குழந்தைகள் குளிர்ச்சியாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். மேலும், இருமல் பாதிப்பு இருந்தாலோ குளிர்காலத்திலோ பழச்சாறுகளைக் குளிர்ச்சியாகக் கொடுக்கக்கூடாது. சளித் தொந்தரவு வரும் குழந்தைகளுக்கு, நன்கு காய்ச்சி ஆறவைத்த குடிநீரில் ஜூஸ் கலந்து தருவது நல்லது.

உணவே வேண்டாம் என்றால்...

உணவு வேண்டாம் என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குப் பழச்சாற்றை உணவாகக் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும் எந்த வகைப் பழச்சாற்றிலும் பால் சேர்த்துக் கொடுக்கக் கூடாது. ஸ்மூத்திஸ்களுடன் பால், சர்க்கரை சேர்க்காமல் தயாரிப்பது நல்லது. சில பழங்களை ஒதுக்கும் குழந்தைகளுக்கு, மிக்ஸட் ஜூஸாகக் கொடுக்கலாம். அதாவது, 3 - 4 வகைப் பழங்கள் சேர்த்து, அரைத்து ஜூஸாகத் தயாரித்துக் கொடுக்கலாம்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

இப்படிக் குடிக்கக் கொடுப்பதால் உடலுக்குத் தேவையான அனைத்துவகைச் சத்துகளும் கிடைக்கும். சில வகைப் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களின் ஜூஸை வடிகட்டாமல் குடிப்பது சிறந்தது. அதுபோல், தோல் நீக்க வேண்டியவற்றைத் தவிர, மற்ற பழங்களைத் தோலுடன் சேர்த்து அரைத்துக் கொடுப்பது நல்லது.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

அதீத பழச்சாறும் ஆபத்தே!

எப்போதும் ஒரேவிதமான ஊட்டச்சத்தைக் கொடுக்கக்கூடாது. அதாவது, குழந்தைக்கு ஆப்பிள் ஜூஸ் பிடிக்கும் என்றால், அதையே தொடர்ந்து கொடுப்பதும் தவறு. இதனால், உடலுக்குத் தேவையான மற்ற ஊட்டச்சத்துகளின் குறைபாடுகள் ஏற்படலாம். வெறும் பழச்சாறுகளை மட்டுமே உணவாக உட்கொள்வதால், உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையும் மாறுபடும். ஆகவே, அனைத்துவிதமான சத்துகளும் கிடைக்கத் திட உணவு, திரவ உணவு எனச் சமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், பழங்கள், காய்கறிகள், கீரைகள், பருப்பு - பயறு வகைகள், தானியங்கள் எனக் கலவையான உணவைக் கொடுப்பது நல்லது.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!
சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

தவிர்க்க வேண்டியவை

குழந்தைகளுக்கு அனைத்து வகையான உணவுகளையும் அளவாகக் கொடுக்கலாம். துரித உணவுகள், கார்பனேட்டட் பானங்கள் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
அதிக நிறமுள்ள உணவுப் பண்டங்களைத் தவிர்க்கலாம். உதாரணத்துக்கு, இனிப்புகள். மாறாக, அடர் நிற சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

ஆப்பிள் க்ரஷ் ஷேக்

தேவையானவை: தோல் சீவிப் பொடியாக நறுக்கிய ஆப்பிள் - 2 கப் (மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்), ஸ்ட்ராபெர்ரி சிரப் - 2 டேபிள்ஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - அரை லிட்டர், பொடித்த பாதாம், முந்திரி - தேவையான அளவு (வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்தது), ஐஸ் க்யூப்ஸ் - தேவையானால்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: பொடித்த பாதாம், முந்திரி ஆகியவை தவிர, மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு நுரைக்க அடித்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றவும். பின்பு பாதாம், முந்திரி தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: பாலில் உள்ள கால்சியம், பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெற உதவுவதோடு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைத் தருகிறது. ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள், உடல் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. ஸ்ட்ராபெர்ரியில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது.

கூல் பப்பாயா

தேவையானவை: நன்கு பழுத்த பப்பாளித் துண்டுகள் - ஒரு கப், ஆரஞ்சு - 2 (தோல், விதை நீக்கிச் சாறு எடுக்கவும்), எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தலா ஒரு சிட்டிகை, சர்க்கரை - தேவையான அளவு, துளசி இலை - 7 அல்லது 8.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: மிளகுத்தூள், துளசி இலை நீங்கலாக எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டி, கண்ணாடி டம்ளரில் ஊற்றவும். மிளகுத்தூள், துளசி இலை தூவி, ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும்.

பலன்கள்: பப்பாளியில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகள் சருமம், கண் மற்றும் வயிற்று உபாதைகளில் இருந்து காக்கிறது. உடலின், வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் நிறைந்துள்ள வைட்டமின் சி, உடலுக்குத் தேவையான உடனடி எனர்ஜியைத் தரும்.

டொமேட்டோ கூலர்

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

தேவையானவை: நன்கு பழுத்த சிவப்பான தக்காளிப்பழங்கள் - 6, சர்க்கரை - தேவையான அளவு, மிளகுத்தூள், உப்பு - தலா ஒரு சிட்டிகை, ஆரஞ்சுச் சாறு - அரை கப், ஐஸ் க்யூப்ஸ் - தேவையான அளவு.

செய்முறை: தக்காளியை மிக்ஸியில் நன்கு அடித்து வடிகட்டவும். இதனுடன் ஆரஞ்சுச் சாறு, சர்க்கரை, மிளகுத்தூள், உப்பு, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து, மிக்ஸியில் மீண்டும் ஒருமுறை நுரைக்க அடித்துப் பரிமாறவும்.

பலன்கள்: தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. சிறுவயதிலேயே ஏற்படும் புற்றுநோய் செல்களிடமிருந்து நம்மைக் காக்கிறது. செரிமானத்துக்கு உதவுகிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

ஃப்ரூட் மிக்ஸர்

தேவையானவை: நன்கு பழுத்த பப்பாளி - ஒரு துண்டு (தோல் நீக்கி, மிக்ஸியில் அடிக்கவும்), வாழைப்பழம் - ஒன்று (தோல் நீக்கி, மிக்ஸியில் அடிக்கவும்), மிகவும் பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழத் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், தோல் நீக்கிய ஆப்பிள் - ஒரு துண்டு (மிகவும் பொடியாக நறுக்கவும்), பைனாப்பிள் எசென்ஸ் - ஒரு துளி, சர்க்கரை - தேவையான அளவு.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: மிக்ஸியில் அரைத்த பப்பாளி, வாழைப்பழ விழுதுடன் பொடியாக நறுக்கிய பைனாப்பிள், ஆப்பிள் துண்டுகள், சர்க்கரை, பைனாப்பிள் எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து, மேலே ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்: ரத்த உற்பத்திக்கு உதவுகிறது. செரிமான சக்தியை அதிகரித்து நச்சுகளை வெளியேற்றுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. பல், எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும். உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது. இதில், நிறைந்துள்ள வைட்டமின் சத்துகள் பார்வைத்திறனை மேம்படுத்தும். நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது.

லவங்கம் - பால் கீர்

தேவையானவை: பால் - ஒரு கப் (கால் கப் ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும்), லவங்கத்தூள் - ஒரு டீஸ்பூன், பொடித்த நாட்டுச் சர்க்கரை - 3 டீஸ்பூன்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: லவங்கத்தூளில் அரை கப் நீர் சேர்த்து, பாதியாக வற்றும் வரை நன்குக் கொதிக்கவிடவும். பிறகு, அதைச் சுண்டக் காய்ச்சிய பாலுடன் சேர்த்து வடிகட்டவும். பின்னர், இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். இதைக் குளிரவைத்தும் அருந்தலாம்.

பலன்கள்: செரிமானக் கோளாறைச் சரிசெய்து, வயிற்றுத் தொல்லைகளிலிருந்து காக்கிறது. இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. சருமத் தொற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. சளி, இருமல் போன்றவற்றுக்கு நல்ல மருந்து. உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

பைனாப்பிள் க்ரஷ் ஷேக்

தேவையானவை: பைனாப்பிள் துண்டுகள் - 2 கப் (பொடியாக நறுக்கவும்), பைனாப்பிள் எசென்ஸ் - 2 டீஸ்பூன், சர்க்கரை - கால் கப் அல்லது தேவையான அளவு, காய்ச்சி ஆறவைத்த பால் - 2 கப், ஐஸ் க்யூப்ஸ் - தேவையான அளவு.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: பைனாப்பிள் துண்டுகளைத் தண்ணீரில் போட்டு 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, பிறகு சிறிதளவு சர்க்கரை சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு நீரை நன்கு வடிக்கவும். பைனாப்பிள் துண்டுகளுடன் மற்ற எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு நுரைக்க அடித்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.

பலன்கள்: பப்பாளியில் அதிகம் நிறைந்துள்ள வைட்டமின் சத்துகள், குழந்தைப் பருவத்திலேயே ஏற்படும் உடல் பருமன் பிரச்னையைச் சரிசெய்கிறது. பார்வைத் திறனை மேம்படுத்துகிறது. எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்து, நோய்த் தாக்குதலிலிருந்து காக்கிறது.

மலாய் லஸ்ஸி

தேவையானவை: புளிக்காத கெட்டித்தயிர் - ஒரு கப், பால் ஏடு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை டேபிள்ஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - சில துளிகள், சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், கறுப்பு உப்பு - ஒரு சிட்டிகை.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: தயிருடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு நிமிடம் அடிக்கவும். அடித்த தயிரை கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே மசித்த பால் ஏட்டைச் சேர்க்கவும். அதன் மேல் ரோஸ் எசென்ஸ், மிளகுத்தூள், சீரகத்தூள், கறுப்பு உப்பு தூவி, ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

பலன்கள்: வயிற்றுவலி, உப்புசம் மற்றும் செரிமானக் கோளாறு போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. இதில் நிறைந்துள்ள புரதச்சத்து, எலும்பு மற்றும் தசைகள் வலுப்பெற உதவும். கோடையில் ஏற்படும் உடல் நீர்வறட்சியைச் சரிசெய்ய ஏற்ற பானம்.

கேரட் சர்ப்ரைஸ்

தேவையானவை: கேரட் - 2 (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), ஆரஞ்சு - ஒன்று (தோல், விதை நீக்கி சாறு எடுக்கவும்), தேன் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தலா ஒரு சிட்டிகை.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

பலன்கள்: கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. இவை ரத்த உற்பத்திக்கு உதவுகின்றன. பார்வைத் திறனை மேம்படுத்துகிறது. சரும நோய்கள் வராமல் தடுக்கிறது. சீரான இதயத் துடிப்புக்கு உதவுகிறது. மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.

ஜிஞ்சர் சிரப்

தேவையானவை: இஞ்சி - 25 கிராம் (கழுவி, தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு, தேன் - தலா 2 டேபிள்ஸ்பூன்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: பொடியாக நறுக்கிய இஞ்சியுடன் அரை டம்ளர் நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். 10 நிமிடங்கள் கழித்து ஜூஸை அப்படியே எடுத்து, மேலாக இருக்கும் தெளிந்த ஜூஸை மட்டும் வேறொரு பாத்திரத்தில் ஊற்றவும். அதனுடன் 2 டம்ளர் நீர், எலுமிச்சைச் சாறு, தேன், சர்க்கரை கலந்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓடவிட்டு, ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து ஜில்லென்று பரிமாறவும்.

பலன்கள்: வயிறு வலி, வாய்வுத்தொல்லை, வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான உபாதைகளைச் சரிசெய்யும். வாந்தி, பேதிக்கு நல்ல மருந்து. செரிமான சக்தியை அதிகரிக்கும். நெஞ்செரிச்சலைப் போக்கும். மூளையைச் சுறுசுறுப்பாக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச்செய்யும்.

பாதாம் சுக்கு நீர்

தேவையானவை: நன்றாகக் காய்ச்சி குளிரவைத்த பால் - 2 கப், பாதாம் விழுது - 2 டேபிள்ஸ்பூன் (ஊறவைத்து, தோலெடுத்து மிக்ஸியில் அரைத்தது), பொடியாக நறுக்கிய பாதாம் - ஒரு டீஸ்பூன், சுக்குப்பொடி, குங்குமப்பூ - தலா ஒரு சிட்டிகை, சர்க்கரை - தேவையான அளவு.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: பாலுடன் மற்ற எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

பலன்கள்: பாதாமில் நிறைந்துள்ள நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், துத்தநாகம், மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர், இரும்பு மற்றும் வைட்டமின் சத்துகள் மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். சருமத்தைக் காக்கும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும். சுக்கு, செரிமானத்துக்கு உதவும்.

துளசி கூலர்

தேவையானவை: சாத்துகுடிச் சாறு, அன்னாசிச் சாறு, தர்பூசணிச் சாறு - தலா ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், ஆப்பிள் - பாதியளவு (மிகவும் பொடியாக நறுக்கவும்), துளசி இலைகள் - 10, ஐஸ் க்யூப்ஸ் - சிறிதளவு, சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன் (பொடித்துக்கொள்ளவும்).

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: துளசி இலைகள், ஆப்பிள், ஐஸ் க்யூப்ஸ் நீங்கலாக எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மேலே பொடியாக நறுக்கிய ஆப்பிள், துளசி இலைகள், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்: துளசி, வயிற்றைச் சுத்தம் செய்யும். சளி, இருமலிலிருந்து காக்கும். பழச்சாற்றில் உள்ள வைட்டமின் சத்துகள் உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கும். உடலுக்குத் தேவையான உடனடி எனர்ஜியைத் தரும். உடலின், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மூளையைப் புத்துணர்வு பெறச் செய்கிறது. 

இளநீர் - தேன் கூலர்

தேவையானவை: இளநீர் - ஒன்றரை டம்ளர், தேன், எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் அடித்துப் பரிமாறவும்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

பலன்கள்: இவற்றில் உள்ள சுக்ரோஸ், உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது. சளி, காய்ச்சல், தொண்டை பிரச்னைகள், இருமல் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாகும். அல்சர் மற்றும் வாய்வுத் தொல்லையைச் சரிசெய்யும். உடல் வளர்ச்சிக்கு உதவும். பளபளப்பான சருமம் பெற உதவுகிறது.

கிர்ணி ட்ரீட்

தேவையானவை: கிர்ணிப்பழத் துண்டுகள் - 3 கப் (மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்), ஆரஞ்சுச் சாறு - ஒரு கப், சர்க்கரை, குளுக்கோஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், புதினா இலைகள், ஐஸ் க்யூப்ஸ் - சிறிதளவு.

செய்முறை: புதினா இலைகள் நீங்கலாக எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து ஒரு நிமிடம் ஓடவிட்டு, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, புதினா இலைகளைப் பொடியாக நறுக்கித் தூவிப் பரிமாறவும்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

பலன்கள்: இதில் நிறைந்துள்ள புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து, கூந்தல் வளர்ச்சிக்கும் சருமப் பொலிவுக்கும் உதவுகின்றன. உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். செரிமானத் தன்மையை அதிகரிக்கும். வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொல்லும். வயிற்றுப் பொருமல், அல்சரைச் சரிசெய்யும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

ரோஸ் சிரப்

தேவையானவை: தண்ணீர் - 2 கப், சர்க்கரை - அரை கப், திக்கான ரோஸ் எசென்ஸ் - ஒரு டீஸ்பூன், ரோஸ் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓடவிட்டு, நன்றாகக் குளிரவைத்துப் பரிமாறவும்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

பலன்கள்: இதில் நிறைந்துள்ள வைட்டமின் சத்துகள், சரும வறட்சியைச் சரிசெய்கிறது. சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது.

செரிமானத்துக்கு உதவுகிறது. அசதியை நீக்குகிறது. உடல் குளிர்ச்சி அடையச் செய்கிறது. வியர்வையால் ஏற்படும் தலைவலியைக் குணமடையச் செய்கிறது.

டேட்ஸ் க்ரஷ் ஷேக்

தேவையானவை: வாழைப்பழம் - 2 (தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும்), பேரீச்சைப்பழம் - 6 (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்), காய்ச்சிய ஆறவைத்த பால் - அரை கப், ஐஸ் க்யூப்ஸ் - சிறிதளவு, வெனிலா எசென்ஸ் - ஒரு துளி, சர்க்கரை - தேவையான அளவு, தேன் - சிறிதளவு.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: வாழை, பேரீச்சைத் துண்டுகளுடன் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓடவிடவும். பிறகு அதனுடன் பால், சர்க்கரை, எசென்ஸ் சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே கொஞ்சம் தேன் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்: வாழையில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுஉப்புகள், ஆரோக்கியத்துக்கும் உடல் எடை அதிகரிப்புக்கும் உதவுகின்றன. பேரீச்சை ரத்தச் சுத்திகரிப்புக்கு உதவுவதுடன், ரத்த உற்பத்திக்கும் உதவுகிறது. எலும்பு மற்றும் தசை வளர்ச்சியை அதிகரிக்கிறது. செரிமானச் சக்தியை அதிகரிக்கிறது. சீரான தூக்கத்துக்கு வழிவகுக்கிறது.

மாதுளை க்ரஷ் ஷேக்

தேவையானவை: மாதுளம்பழம் - 2 (முத்துகளை உதிர்த்து மிக்ஸியில் போட்டு சாறு எடுத்து வடிகட்டவும்), பால் - 200 மி.லி, தேன் - 4 டீஸ்பூன்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: வடிகட்டிய மாதுளைச் சாற்றுடன் பால் மற்றும் தேன் கலந்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓடவிட்டு எடுத்து, ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும்.

பலன்கள்: மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் ஆகிய சத்துகள், உடலின் செல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. இவற்றில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன. இவை ரத்த உற்பத்திக்குப் பெரிதும் உதவுகின்றன. அனீமியாவைத் தடுக்கும். வயிற்றுப்போக்கைச் சரிசெய்யும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

ஸ்ட்ராபெர்ரி கொலாடா

தேவையானவை: நன்றாக அரைத்த ஸ்ட்ராபெர்ரி பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு, திக்கான தேங்காய்ப்பால் - தலா 2 கப், வெனிலா ஐஸ்க்ரீம் - சிறிய கப், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அடித்து, ஜில்லென்று பரிமாறவும்.

பலன்கள்: இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ், முழு உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. பார்வைத் திறனை மேம்படுத்தும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மூளைக்குப் புத்துணர்வு கிடைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.

மின்ட் கூலர்

தேவையானவை: புதினா இலைகள் - 10 அல்லது 12, ஆப்பிள், அன்னாசிப்பழம் - தலா 2 துண்டு (மிகவும் பொடியாக நறுக்கவும்), பீச் பழச்சாறு - 2 கப் (தேவைப்பட்டால்), சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, குளிரவைத்துப் பரிமாறவும்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

பலன்கள்: இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சத்துகள், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் புரதச் சத்துகள் நிறைந்துள்ளன. உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவும். செரிமான கோளாறைச் சரிசெய்யும். உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. எலும்புகள் வலுப்பெறும்.

ஃப்ரூட் காக்டெய்ல்

தேவையானவை: ஆரஞ்சுச் சாறு, பன்னீர் திராட்சைச் சாறு, மாதுளைச் சாறு, பைனாப்பிள் சாறு - தலா ஒரு கப், இஞ்சிச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், குளுக்கோஸ் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய ஆப்பிள் - கால் கப்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: எல்லா பழச்சாறுகளையும் ஒன்றாகக் கலந்து, இஞ்சிச் சாறு, குளுக்கோஸ், பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

பலன்கள்: உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. பல், எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும். உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது. ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் சத்துகள் பார்வைத் திறனை மேம்படுத்தும். நோய்த் தொற்றிலிருந்து நம்மைக் காக்கிறது. செரிமான சக்தியை அதிகரித்து, நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

குக்கும்பர் - டொமேட்டோ ஜூஸ்

தேவையானவை: பழுத்த தக்காளிப்பழம் - 2, மீடியம் சைஸ் வெள்ளரிக்காய் - ஒன்று (நறுக்கவும்), செலரி கீரைத்தண்டு - ஒரு சிறு துண்டு, புதிய தயிர் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - தேவையான அளவு, மிளகுத்தூள், உப்பு - தலா ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய புதினா - சிறிதளவு.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: புதினா நீங்கலாக எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, வடிகட்டவும். மேலே புதினா தூவி, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

பலன்கள்: இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. இவை உடலின் நீர்வறட்சித் தன்மையைக் குறைத்து, தாகத்தைத் தணிக்கின்றன. இதனால், உடல் உஷ்ணம் குறையும். உடல் எடையைக் குறைக்க உதவும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். கண்களைக் குளிர்ச்சியடையச் செய்யும். சருமப் பொலிவுக்கு உதவும்.

பெருஞ்சீரகக் கூலர்

தேவையானவை: பெருஞ்சீரகம் (சோம்பு), கல்கண்டு - தலா கால் கப்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: சோம்பை அரை டம்ளர் நீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, இதனுடன் பொடித்த கற்கண்டைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, மஸ்லின் துணியில் வடிகட்டவும். வடிகட்டிய சாறு அரை டம்ளர் இருக்கும். இதனுடன் ஒன்றரை டம்ளர் நீர் சேர்த்து ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

பலன்கள்: சோம்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். வாய் துர்நாற்றத்தைச் சரிசெய்யும். உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கும். உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடலும் மனமும் புத்துணர்வு பெற உதவும். மூளை சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்பட உதவும். செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். சீரான தூக்கத்துக்கு உதவும்.

பனானா க்ரஷ் ஷேக்

தேவையானவை: பூவன் வாழைப்பழம் - 4 (தோல் உரித்துப் பொடியாக நறுக்கவும்), தேன் - 4 டீஸ்பூன், வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு கப், பால் - கால் கப்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மிக்ஸியில் சேர்த்து ஒரு நிமிடம் ஓடவிட்டு, ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும்.

பலன்கள்: இவற்றில் உள்ள சுக்ரோஸ், உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெற உதவும். எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாக்கும். உடலின் செல் வளர்ச்சிக்கு உதவும். செல்கள் புத்துணர்வு பெறச் செய்யும். உடல் சோர்வை நீக்கி புத்துணர்வு தரும். செரிமானப் பிரச்னையைச் சரி செய்யும்.

மோர் - வடிகஞ்சி பானம்

தேவையானவை: மோர் - 2 கப், வடிகஞ்சி - அரை கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்), பச்சைமிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தோல் சீவி நறுக்கிய இஞ்சியுடன் பச்சைமிளகாய், கறிவேப்பிலை, சீரகம், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். பின்னர், அதனுடன் மோர், வடிகஞ்சி சேர்த்து அரை நிமிடம் மிக்ஸியில் ஓடவிட்டு, வடிகட்டிப் பரிமாறவும்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

பலன்கள்: இது சரிவிகித உணவாகும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்துகள், உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும். எலும்பு வலுப்பெற உதவும். மற்ற உணவுகளைவிடக் கஞ்சியில் அதிக சத்துகள் உள்ளன. உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். உடலின் நீர்வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும். உடல் சோர்வை நீக்கும்.

மாம்பழ க்ரஷ் ஷேக்

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், பழுத்த இனிப்பான மாம்பழம் - 3, சர்க்கரை - தேவையான அளவு, ஃப்ரெஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: பாலைக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து நன்கு ஆறவிடவும். 2 மாம்பழங்களிலிருந்து சாறு எடுத்து வடிகட்டவும். ஒரு மாம்பழத்தைத் தோல் சீவி மிகவும் பொடியாக நறுக்கவும். பாலுடன் மாம்பழச் சாற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரை நிமிடம் ஓடவிடவும். அதனுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அரை நிமிடம் அடித்து ஐஸ்கட்டிகள், மாம்பழத் துண்டுகள் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.

பலன்கள்: இதில் வைட்டமின் ஏ மற்றும் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள், பாலிபீனால் ஃபிளேவனாய்டுகள் போன்றவை நிறைந்துள்ளன.  பார்வைத் திறனை மேம்படுத்தும். ரத்தச்சோகையைச் சரிசெய்யும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். செரிமான சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.

ஆரஞ்சு - கொய்யா கூலர்

தேவையானவை: கொய்யா - 3 (கழுவி, துடைத்து பொடிப் பொடியாக நறுக்கவும்), ஆரஞ்சு - 2 (பிழிந்து சாறெடுத்து வடிகட்டவும்), சர்க்கரை - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், துளசி இலை - 10.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: மிக்ஸியில் துளசி இலை நீங்கலாக எல்லாவற்றையும் சேர்த்துத் தேவையான நீர் விட்டு நன்கு அடித்து, மெல்லிய துணியில் வடிகட்டி ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து துளசி இலை தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: உடலுக்குத் தேவையான உடனடி எனர்ஜியைத் தருகிறது. பசியை ஏற்படுத்தும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். இதில் நிறைந்துள்ள கால்சியம், பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். கிருமித் தொற்றுகளில் இருந்து காக்கும். கண் மற்றும் சருமத்தைப் பாதுகாக்கும். நல்ல தூக்கத்தை வரவழைக்கும். நினைவாற்றல் சக்தியை அதிகரிக்கும்.

எவர்க்ரீன் ஜூஸ்

தேவையானவை: துளசி இலை, புதினா இலை, கற்பூரவல்லி, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு (நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்), வெற்றிலை - 3, வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), உப்பு, சர்க்கரை - தேவையான அளவு, தண்ணீர் - 2 கப்.

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: பொடியாக நறுக்கிய இஞ்சி, சர்க்கரையுடன் நீர் சேர்த்து, சர்க்கரை கரையும் வரைக் கொதிக்கவிடவும். பிறகு, எல்லா இலைகளையும் அதில் சேர்த்து இறக்கி மூடி வைக்கவும். ஆறியவுடன் வடிகட்டி உப்பு, சீரகத்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து, குளிரவைத்துப் பரிமாறவும்.

பலன்கள்: இவற்றில் நிறைந்துள்ள கால்சியம், எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு உதவும். பசியைத் தூண்டும். சளி, இருமல் போன்றவற்றைக் குணப்படுத்தும். வயிற்றைச் சுத்தம் செய்யும். செரிமான சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, குழந்தைப் பருவத்தில் ஏற்படும் உடற்பருமன் வராது தடுக்கும். உடலைக் குளிர்ச்சியாக்கும்.

க்ரீன் கூலர்

தேவையானவை: விதையில்லாத பச்சை திராட்சை - ஒரு கப் (கழுவி, மிக்ஸியில் அடித்து வடிகட்டவும்), ஆரஞ்சுப்பழம் - 2 (சாறு எடுத்து வடிகட்டவும்), இஞ்சி - ஒரு சிறு துண்டு, சர்க்கரை - தேவையான அளவு, துளசி இலைகள் - 10, ஐஸ்கட்டிகள் - சிறிதளவு

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

செய்முறை: இஞ்சியுடன் சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து வடிகட்டித் தெளியவிடவும். வடிகட்டிய திராட்சைச் சாறு, ஆரஞ்சுச் சாறு, தெளிந்த இஞ்சிச் சாறு, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரை நிமிடம் ஓடவிட்டு ஐஸ்கட்டிகள் சேர்த்து மீண்டும் அரை நிமிடம் ஓடவிட்டு, துளசி இலை தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. சருமத்தைப் பொலிவுபெறச் செய்கிறது. திராட்சையில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ, சி, கே, கரோட்டினாய்ட், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகின்றன. சிறுநீர் மற்றும் மலம் சரிவர வெளியேற உதவுகிறது.

- ஆர்.ஜெயலட்சுமி, ச.மோகனப்பிரியா

படங்கள்: ப.சரவணகுமார், பா.காளிமுத்து

சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism