Published:Updated:

புவியீர்ப்பு விசை பாதியானால் பூமிக்கு என்னாகும்? #KnowScience

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புவியீர்ப்பு விசை பாதியானால் பூமிக்கு என்னாகும்? #KnowScience
புவியீர்ப்பு விசை பாதியானால் பூமிக்கு என்னாகும்? #KnowScience

புவியீர்ப்பு விசை பாதியானால் பூமிக்கு என்னாகும்? #KnowScience

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செடி ஏன் மண்ணில் புதைந்து அப்படியே நிற்கிறது? ஆடு, மாடு,கோழி, நாம எல்லாரும் எப்படி நிலத்தில் நிலையாக நிற்கிறோம்? நடக்கிறோம்? உலகம் உருண்டை. அது சுற்றிக்கொண்டிருப்பதாக இருந்தும் எப்படி நாம கீழே விழாமல் நிலையாக இருக்க முடிகிறது? பூமியை விட்டு வெளியே பறந்து போய்விடாமல் எப்படியிருக்கிறோம்? நிலா எப்படி பூமியைச் சரியாக 28 நாள்களில் சுற்றி வருகிறது? இது எல்லாவற்றுக்கும் ஒரே பதில் புவியீர்ப்பு விசை. 

ஒரு பொருள் இன்னொரு பொருளை தன்னகத்தே தக்கவைக்க ஒரு சக்தியைப் பயன்படுத்தும். அதற்குப் பெயர்தான் விசை. ஒரு காந்தம் இரும்பு மேல் செலுத்தும் விசையைக் காந்த விசை என்று சொல்லுவோம். அதே இந்தப் பூமி அதன் மேலே இருக்கும் பொருள்கள் மேல் ஏற்படுத்தினால் அதற்குப் பெயர் புவி ஈர்ப்பு விசை. அவ்வளவுதான். 

ஒவ்வொரு பொருளுக்கும் அதன் நிறை(mass), திறன் பொருத்து அதனுடைய விசை அளவும் மாறும். பூமியின் விசை 9.807 m/s2. நிலவின் விசை அளவு வெறும் 1.62 m/s2 தான். இங்கே ஓர் ஆளின் விசை 100 நியூட்டன் என்று இருந்தால் நிலவில் அது வெறும் 17 நியூட்டன்தான். காரணம் விசை அங்கே குறைவு.

இப்போது நம் பூமியின் விசை பாதியாக இருப்பதாகக் கற்பனை செய்து பார்ப்போம். அப்படிப் பாதியானால் எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும்? அதைப் புரிய நமக்கு இப்போது உதவியாக இருக்கப் போவது விண்வெளிக்குச் சென்ற வீரர்கள்தாம். அவர்களது படங்கள், செயல்கள் எல்லாம் நாம் படங்களில் பார்த்திருப்போம். அடர்த்தியான ஓர் ஆடை, தலைக்கவசம், மிதந்து மிதந்து நடப்பது. அது எல்லாவற்றுக்கும் காரணம் விண்வெளியில் ஈர்ப்பு விசை சுழியமாக(zero gravity) இருபதே. இப்போது ஓரளவு புரிந்துகொள்ள முடியும். நம்மை ஈர்க்க ஒரு விசை இல்லாத போது நாம் மிதப்போம். நம் தசைகள் இறுகும். இதிலிருந்து தப்பிக்கத்தான் அந்த அடர்த்தி ஆடைகள். 

விசை இருப்பது, விசை சுழியமாக இருப்பது என்ற இரண்டு வேறுபட்ட நிலைகள் பார்த்தோம். அப்போது இதற்கு இடைப்பட்டது எப்படி இருக்கும்? இரண்டும் இடையிலான நிலைதான் பாதி ஈர்ப்பு. பாதி மிதப்பு.


புவியீர்ப்புப் பாதியானால்…

இன்றைய கால சூழ்நிலையில் வளி மண்டல அழுத்தம் 14.5  lbs/ sqr inch ஆக உள்ளது. நம் கற்பனைப்படி ஈர்ப்பு விசை பாதியானால் வளிமண்டல அழுத்தமும் பாதியாகும். 7.8  lbs/sqr inch ஆகும். இது இன்றைய கடல் மட்டத்திலிருந்து 15,000 அடி உயர மலையில் உள்ள அழுத்தத்துக்குச் சமம். அப்போது அன்றைய மலைப்பகுதி அழுத்தத்தை எண்ணிப்பாருங்களேன். வாழ தகுதியற்றதாகவே இருக்கும்.

இப்போது நாம் குதிக்கும் உயரத்திலிருந்து இருமடங்கு நம்மால் குதிக்க முடியும் என்றால் யோசித்துப் பாருங்களேன். நம் மீதான பூமி நோக்கிய ஈர்ப்பு குறையும். பூமியை நோக்கிய காற்றின் ஈர்ப்பும் குறையும். அப்போது காற்றுவெளி( atmosphere) மண்டலமும் பூமியை விட்டுத் தொலைவில் போகும்.

அதைச் சார்ந்த ஆக்சிஜன் அடர்த்தியும் குறையும். ஆக்சிஜன் அடர்த்தி பாதியாகக் குறைந்தால் உயிர்களுக்குத் தேவையான அளவு சுவாசக் காற்று இருக்காது. உயிர்கள் அதனால் ஒன்று அழிந்துபோகும்; இல்லை திரிந்து போகும். சூழல் மாற்றம் பரிணாம வளர்ச்சிக்கு (evolution of species) வித்திடும். அடுத்த தலைமுறைகள் சகிப்புத்தன்மை (tolerance) மிக்கதாக வளரும்.

காற்று வெளி மண்டலம் தூரமாகச் செல்லும் போது பசுமை இல்ல வாயுக்கள் (green house gas) பற்றாக்குறை ஏற்படும். பூமி வெப்பம் குறையும்...மகிழ்ச்சி என்று நினைக்காதீர்கள். உறையும் நிலை கூட ஏற்படும். வளிமண்டலம் விரிந்தால் நிலவின் பாதையிலும் செயற்கைக்கோளின் பாதையிலும் மாற்றம் ஏற்படும். ஈர்ப்பிலிருந்து விடுபட்டுப் போகலாம் அல்லது வெடித்துச் சிதறலாம். 

ஆனால், இவை அனைத்தும் நிகழவேண்டுமாயின் அதற்குக் குறைந்தது மில்லியன் ஆண்டுகள் ஆகும். பூமியின் ஈர்ப்புப் பாதியாகவேண்டுமெனில் அதன் நிறை( mass) பாதியாகக் குறைய வேண்டும். அதற்கு பூமி வெடித்தோ எதனுடனாவது மோதியோ உடையவேண்டும். அல்லது அதன் ஆரம் (radius) அரை மடங்கு கூட வேண்டும். உள்ளுள்ள நீர்மப் பகுதி அதிகரிக்க வேண்டும்.

இது எதுவும் நம் தலைமுறையிலோ அடுத்த தலைமுறையிலோ நிகழ்ந்துவிடாது. ஆனால், நடக்கும் நேரம் பூமி செவ்வாய் போல மாறும். பூமி பூமியா இருக்கும் வரைதான் வாழ்க்கை, உயிரினம் எல்லாம் பாஸ்…. அதனால் அதை அது இருக்கும் நிலையிலேயே பாதுகாத்து வைக்க முயற்சி செய்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு