Published:Updated:

ஆழ்கடல் உயிரினங்களை வகுப்பறைக்குள் அழைத்து வந்த ஆசிரியை! #CelebrateGovtSchool

ஆழ்கடல் உயிரினங்களை வகுப்பறைக்குள் அழைத்து வந்த ஆசிரியை! #CelebrateGovtSchool

மாணவர்கள் இவற்றைப் பார்த்ததும், ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தனர்.

ஆழ்கடல் உயிரினங்களை வகுப்பறைக்குள் அழைத்து வந்த ஆசிரியை! #CelebrateGovtSchool

மாணவர்கள் இவற்றைப் பார்த்ததும், ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தனர்.

Published:Updated:
ஆழ்கடல் உயிரினங்களை வகுப்பறைக்குள் அழைத்து வந்த ஆசிரியை! #CelebrateGovtSchool

`பள்ளிக்கு விடுமுறை என அறிவித்தால் எப்போது குழந்தைகள் மனம் வருத்தமடைகிறார்களோ, பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கிறார்களோ, அப்போதே உண்மையான கல்வி நடக்கிறது' என்பார், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், ஜார்ஜ் பெர்னாட் ஷா. மாணவர்களுக்கு விரும்பும் வகையில் பள்ளியை மாற்றும் முயற்சியை முன்னெடுக்க வேண்டியவர், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர். வகுப்பறையைச் சுவைமிகுந்ததாக உருவாக்கும் பொறுப்புக்குரியவர் ஆசிரியர். அப்படியான மாற்றத்தை ஓர் அரசுப் பள்ளி ஆசிரியை நிகழ்த்தி, வகுப்பறையை உற்சாகமாக்கியிருக்கிறார்.

சிதம்பரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கிள்ளை எம்.ஜி.ஆர் நகர். இருளர் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி அது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையான சசிகலா, தன் வகுப்பறையை மாணவர் ரசிக்கும் விதத்தில் அமைத்திருக்கிறார். அப்படி என்ன செய்திருக்கிறார்? 

``இது, இருளர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ஊர். இயற்கை குறித்தும் வாழ்க்கை குறித்தும் ஆழ்ந்த புரிதல்கொண்டவர்கள். ஆனால், பள்ளிக் கல்வி முழுமையாகச் சென்று சேராத தொலைவில்தான் இருக்கின்றனர். மீன் பிடித்தல், விவசாயக் கூலி போன்ற வேலைகளுக்கே செல்பவர்களின் பிள்ளைகளே எங்கள் பள்ளியில் அதிகம் படிக்கின்றனர். வேலைக்காகச் செல்லும்போது தங்களோடு பிள்ளைகளையும் அழைத்துச் செல்லும் பழக்கம் பல பெற்றோர்களிடம் இருக்கிறது. இந்த மனநிலையிலிருந்து மாற்றி, பிள்ளைகளை வரவைப்பதுதான் எங்களின் முதல் சவால். ஆனாலும் அதைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் செய்தே வருகிறோம். எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் குமரவேல், மாணவர்களைப் புரிந்துகொள்வதிலும், அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதிலும் மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றுபவர். அந்த ஆர்வம் எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாடத்திட்டம் தவிர்த்தும் பல விஷயங்களை மாணவர்கள் தெரிந்துகொள்ள, வாரம் ஒரு குறும்படம் திரையிடுகிறோம். அந்தக் குறும்படம் பற்றிய உரையாடலும் நடக்கும். சில மாணவர்கள் குறும்படம் விவாதிக்கும்போது, பெரியவர்களே கவனிக்காத விஷயங்களைச் சொல்லி பிரமிக்க வைப்பார்கள். கவிதை, ஜோக், பாட்டு எழுதுவதில் ஆர்வமாக இருப்பார்கள். அவற்றைத் தொகுத்து, `பூக்களின் மாலை' எனும் மாணவர் இதழை நடத்திவருகிறோம். இது, எழுத்துப் பயிற்சியையும் தன்னம்பிக்கையும் வளர்த்தெடுக்கிறது. எங்கள் பகுதியில் மலைகள் கிடையாது. ஏற்காடு சுற்றுலா சென்றபோது, மாணவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. அதேபோல ரயில் பயணத்தின்போது வேறோர் உலகத்துக்கே சென்ற ஆனந்தத்தில் திளைத்தார்கள்" என்கிறவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் பெருமிதம்.

பள்ளியின் வகுப்பறைகளே சுண்டியிழுக்கின்றன. ``நான் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை. எங்கள் வகுப்பறையைச் சிறப்பாக மாற்ற நினைத்தோம். சின்னச் சின்னதாகச் செய்தும் திருப்தியில்லை. அதனால், வகுப்பறையின் தோற்றத்தையே மாற்றும் விதத்தில் ஓவியங்கள் வரைய முடிவெடுத்தேன். ஓவியர் யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம் என என் கணவரிடம் விசாரித்தபோது, `நீயே நல்லா வரைவியே, ட்ரைப் பண்ணு' என்றார். ஆவலுடன் இறங்கிவிட்டேன். பள்ளி நாள்களில் இந்தப் பணி வேண்டாம் என சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெள்ளையடித்து ஓவியங்களை பென்சிலால் வரைந்தேன். பாடத்தில் கடல்வாழ் உயிரினங்கள் பற்றி இருக்கிறது. அதனால், கடற்குதிரை, ஆக்டோபஸ், கடற்பாசி, மீன்கள் என ஆழ்கடலில் வாழ்பவற்றை வரைந்தேன். கற்பனைப் பாத்திரமான கடல் தேவதையும் இடம்பெற்றிருந்தது. இது தவிர, மலைகள், விலங்குகள், காமிக்ஸ் வடிவக் கதைகள் எனத் திரும்பிய பக்கமெல்லாம் வண்ணமயமாக்கினேன். பள்ளி நேரம் முடிந்ததும், தினமும் ஒரு மணி நேரம் ஓவிய வேலையைத் தொடர்ந்தேன்.

மாணவர்கள் இவற்றைப் பார்த்ததும், ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தனர். மதிய இடைவேளைகளில் ஓவியங்களில் இருக்கும் உருவங்களுக்கு இவர்களாகவே ஒரு பெயர் வைப்பது, கதை சொல்வது என வகுப்பறை சுவர், மாணவர்களுக்குள் பல எண்ணங்களை உருவாக்கி மகிழ்ச்சியை அளித்துவருகிறது. பக்கத்து வகுப்பறைகளிலிருந்தும் மாணவர்கள் வந்து பார்த்தனர். சென்ற ஆண்டு என்னிடம் படித்த மாணவர்கள், `ஏன் டீச்சர், போன வருஷமே நீங்க இதையெல்லாம் வரையலே?'னு கோபித்துக்கொண்டார்கள். வகுப்பறை மாணவர்களைப் பயமுறுத்தக் கூடாது. அந்தச் சூழலை மாற்றும் பணியில் இதுவும் ஒன்றாகப் பார்க்கிறேன். சக ஆசிரியர்களின் ஊக்குவிப்பும் ஒத்துழைப்புமின்றி இது சாத்தியமில்லை" என்கிறார் சசிகலா.