Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - எம்புட்டு இருக்குது ஆசை?

அனுஷா... ஆதிரா... இனியா! - எம்புட்டு இருக்குது ஆசை?
பிரீமியம் ஸ்டோரி
News
அனுஷா... ஆதிரா... இனியா! - எம்புட்டு இருக்குது ஆசை?

டிஜிட்டல் கச்சேரி

``ஏய்  ஆதிரா... கொஞ்சம் உன் போனைத் தர்றியா?''

``ஏனாம்... எதுக்காம்?''

``ப்ளீஸ் செல்லம்... ஒரு செல்ஃபி எடுத்துட்டுக் கொடுத்துடறேன்.''

``அதுக்கு ஏன் என்னோட போன்... உன்கிட்ட போன் இல்லையா?''

``போனெல்லாம் இருக்கு. ஆனா, ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிருக்கேன்.''   

அனுஷா... ஆதிரா... இனியா! - எம்புட்டு இருக்குது ஆசை?

``ஒய் பேபி... என்ன ஆச்சு?''

``வாட்ஸ்அப்ல உனக்கு அனுப்ப வேண்டிய மேசேஜை நேத்து அவனுக்கு மாத்தி அனுப்பிட்டேன்.''

``ஏய், பொய் சொல்லாதே... அவனுக்கு அனுப்ப வேண்டிய மெசேஜைத்தான் நேத்து குரூப்ல மாத்திப் போட்டுட்டு பல்பு வாங்கினியா?''

``அச்சச்சோ... கண்டுபிடிச்சுட்டீங்களா?''
``அடி லூஸு... பெர்சனல் சாட்டிங் பண்ணும்போது கேர்ஃபுல்லா இருக்க வேணாமா?''

``இல்ல அனு... அவனும் அந்த குரூப்ல, அந்த நேரமா பாத்து சாட் பண்ணிட்டு இருந்தான். நான் அதைப் பெர்சனல் சாட்னு நினைச்சு குரூப்ல போட்டுட்டேன். ஈஈஈஈஈ... கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்.’’

``அசடு வழியுது. துடைச்சுக்கோ பேபி!''

``ச்சீ போடி!''

``அனு... நீ மட்டும் என்னவாம்? போன வாரம் வாய்ஸ் நோட்ல ஒரு பாட்டு பாடி குரூப்ல அனுப்பி விட்டியே... மறக்கமுடியுமா? ஹாஹாஹா...''

``ஓ... `எம்புட்டு இருக்குது ஆசை'யா?’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அனுஷா... ஆதிரா... இனியா! - எம்புட்டு இருக்குது ஆசை?``ஷான் ரோல்டன் - கல்யாணி நாயர் வாய்ஸ்ல செமையா இருக்கும் அந்தப் பாட்டு. ஆனா, அனு... அதை உன் வாய்ஸ்ல கேட்கும்போது... தாங்கமுடியலை. மன்னிச்சிடுப்பா!’’
``இனியா... திஸ் இஸ் டூ மச்!''

``சரி சரி... கூல். நம்மளை மாதிரி பிஸியா இருக்குறவங்க இந்த மாதிரி குழப்பத்துல தப்பு பண்றது சகஜம்தானே... இனிமே நாம அப்டேட் ஆகுறோமோ இல்லையோ, இந்த மாதிரி மிஸ்டேக்ஸ் இனி நடக்காத மாதிரி வாட்ஸ்அப்பே அப்டேட் ஆகப்போகுது!’’

``எப்படி?’’

``நாம தெரியாம ஒரு மெசேஜை மாத்தி அனுப்பிட்டா, அதை நாம யாருக்கு அனுப்பினோமோ, அவங்க சாட்டிங்லயும் நாம அனுப்பிய மெசேஜை டெலிட் பண்ற வசதி வரப்போகுது. அதுவரைக்கும் கேர்ஃபுல்லா இருங்க கேர்ள்ஸ்!’’

‘`ஓ... சூப்பரு!’’

‘`என்ன சூப்பருன்னு சொல்லிட்டு மொபைலை சார்ஜ்ல போட்டுட்டு ஃபேஸ்புக் பாத்துட்டு இருக்க?’’

``போன்ல சார்ஜ் இல்லடி கண்மணி.''    

அனுஷா... ஆதிரா... இனியா! - எம்புட்டு இருக்குது ஆசை?

``போன் வெடிச்சுட்டா காது கிழிஞ்சுடும் கண்மணி!''

``ஆமா ஆமா... எங்க அக்கா பொண்ணு செம சேட்டை. மொபைலை சார்ஜ் போட்டுட்டே பேசுறது, கிச்சனுக்குப் போய்க் காய்கறி நறுக்குறதுனு ஒரே சேட்டை பண்ணிட்டு இருந்தா. அக்காவுக்கும் இதேதான் சொல்லிட்டு வந்தேன். குழந்தைங்களைப் பார்த்துக்கிறதே செம சேலஞ்ச்தான் போல!’’

``அப்ப உங்க அக்காவுக்கு செம எனெர்ஜி தேவைன்னு சொல்லு.’’

``அதை ஏன் கேக்குற... குட்டிப் பொண்ணைப் பாத்துக்க முடியாம செம டயர்டு ஆகிடுறா.''

``அக்காவைத் தினம் மூணு பேரீச்சைப்பழம் சாப்பிடச் சொல்லு. இட்'ஸ் குட் ஃபார் ஹெல்த்!’’

``அதான் உன் சீக்ரெட் ஆஃப் எனெர்ஜியா ஆதிரா?''

``அழகின் ரகசியமும் அதாண்டி பொண்ணு!''

``ஐயோ... எனக்குக் காது கேட்கலை...''

``ஆமா ஆதிரா. போன் ஒயர் பிஞ்சு நாலு மாசம் ஆகுது!''

- கச்சேரி களைகட்டும்

அனுஷா... ஆதிரா... இனியா! - எம்புட்டு இருக்குது ஆசை?

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது, இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - எம்புட்டு இருக்குது ஆசை?

குழந்தைகளின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருக்கக்கூடாத 10 விஷயங்கள்!

அனுஷா... ஆதிரா... இனியா! - எம்புட்டு இருக்குது ஆசை?
அனுஷா... ஆதிரா... இனியா! - எம்புட்டு இருக்குது ஆசை?

தவறாக அனுப்பிய மெசேஜை திரும்பப்பெறலாம்  - அசத்தலான வாட்ஸ்அப் வசதிகள்!

அனுஷா... ஆதிரா... இனியா! - எம்புட்டு இருக்குது ஆசை?
அனுஷா... ஆதிரா... இனியா! - எம்புட்டு இருக்குது ஆசை?
அனுஷா... ஆதிரா... இனியா! - எம்புட்டு இருக்குது ஆசை?

தினசரி மூன்று பேரீச்சைப்பழம்...  தித்திப்பான பலன்கள்!