பழைமையான வரலாற்று நினைவுகளைத் தேடிப்பயணிப்பதே அலாதியான விஷயம்தான். தொடர்ந்துகொண்டே சென்ற எங்கள் மரபு நடைப்பயணம் அடுத்து நின்ற இடம், ஒரு சிறிய ஸ்ரீ முண்டகக்கண்ணியம்மன் கோயில். இன்றைய எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் மதில் சுவரை ஒட்டி அமைதியாக ஆரவாரமற்று இருக்கிறது.

ஆற்காடு நவாப்பால் கொடையாக வழங்கப்பட்ட இடத்தில் உள்ள இந்தக் கோயிலின் விமானம் ஒரு மசூதியைப்போலக் காட்சி தருகிறது. அடுத்துச் சென்ற இடம், இன்றைய எம்.ஜி.ஆர் ஜானகியம்மாள் கல்லூரி - அன்றைய சத்யா ஸ்டூடியோ. சி.வி.ராமன், எல்.எல்.பி - தமிழ் சினிமாத்துறையில் மௌனப் படங்கள் காலத்திலேயே `லலிதா சினிடோன்' என்ற சினிமா ஸ்டூடியோவை நிறுவியவர். அடையாற்றின் கரையில், அன்றைய மெட்ராஸின் எல்லையாக அமைந்த 25 ஏக்கர் `அமீர் பாக்' என்ற இந்த நிலத்தை, ஆற்காடு நவாப்பிடமிருந்து 150 ரூபாய் மாத வாடகைக்கு எடுத்து நேஷனல் தியேட்டர் லிமிடெட் என்ற பேனரில் `விஷ்ணு லீலா' என்ற படத்தை 1932-ல் தயாரித்தார். தொடர் நஷ்டம் காரணமாகச் செட்டிநாட்டைச் சேர்ந்த ஏ.எல்.அழகப்ப செட்டியார் மற்றும் சில பங்குதாரர்களுடன் சேர்ந்து `மீனாட்சி சினிடோன்' என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கினார் சி.வி.ராமன். 1934-ல் மீனாட்சி சினிடோன் தயாரித்த முதல் ஹிட் படம் `பவளக்கொடி'. எம்.கே.தியாகராஜ பாகவதர் என்ற சூப்பர் ஸ்டார் உதயமானது, மரங்கள் அடர்ந்த அடையாற்றின் கரையில்தான்.

இதே மரங்களால் பவளக்கொடி படக்குழுவினர் சந்தித்த இன்னொரு பிரச்னை, காக்கைகள். தினமும் படக்குழுவினர் உணவை வெட்டவெளியில் உண்டதைக் கண்ட காக்கைகள், படப்பிடிப்பு நடந்த நேரத்தில் கரைந்தும், குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தும் தொல்லை கொடுத்தன. அவற்றைச் சமாளிக்க துப்பாக்கியுடன் ஜோ என்பவர் நியமிக்கப்பட்டார். `பவளக்கொடி' படத்தில் காக்கை சுடும் ஜோவின் பெயரும் இடம்பெறுகிறது. 1946-ல் நெப்டியூன் ஸ்டூடியோவாக மாறிய மீனாட்சி சினிடோன், ஒருவழியாக எம்.ஜி.ஆரிடம் வந்து சேர்ந்து, 1956-ல் அவரது தாயின் பெயரில் `சத்யா' ஸ்டூடியோவாக ஆனது. காலமாற்றத்தில் கல்லூரியாக மாற்றமடைந்த இவ்விடத்தில் இப்போதும் `சத்யா ஸ்டூடியோ' எனும் பெயர்ப்பலகை அலங்கரிக்கிறது.

எல்ஃபின்ஸ்டோன் பாலத்தைத் தாண்டியதும் துர்காபாய் தேஷ்முக் சாலை எனப் பெயர் மாற்றம் கொள்ளும் இந்தச் சாலைக்கு, அந்தப் பெயர் வரக் காரணம், இந்தக் கல்லூரிக்கு நேர் எதிரில் உள்ள `துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனை'. அதன் வாயிலில் துர்காபாயின் நினைவாகக் குழந்தையை அரவணைக்கும் அன்னையின் சிலை ஒன்று நிறுவப்பட்டு இருக்கிறது. மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் வரிசையில் துர்காபாய் தேஷ்முக்கும் ஒருவர். 1921-ல் ராஜமுந்திரியில் நடந்த சுதேசிப் போராட்டத்தில் கலந்து கொண்ட பன்னிரண்டு வயது சிறுமி துர்காபாய் அங்கே காந்தியைச் சந்தித்ததன் விளைவு, படிப்பைத் துறந்து, தன் ஆங்கிலப் பாணி நாகரிகக் கவுன்களைத் தீயிட்டுக் கொளுத்தி, சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். 12 வயது முதல் காங்கிரஸ் போராளிகளுக்கு இந்தி கற்றுத்தந்த துர்காபாய், தன் வீட்டிலேயே தொடங்கிய பள்ளி - பாலிகா இந்தி பாடசாலை, இன்று ஆந்திர மகிளா சபாவாக உருமாற்றம் பெற்று இருக்கிறது. அதீத இந்திப் புலமை பெற்ற துர்காபாய், காந்தியின் ஆந்திர சுற்றுப்பயணங்களில் அவரது உரையை மொழிபெயர்க்கும் வாய்ப்பைப் பெற்றார். பள்ளிக் காலத்திலேயே காந்தியை வரவழைத்து, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள், இஸ்லாமியப் பெண்களுக்கென ஒரு தனிக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார் துர்காபாய். 1930-ல் மெட்ராஸின் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய காரணத்துக்காக, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட துர்காபாய், விடுதலை அடைந்ததும் சட்டம் படித்தார். அன்றைய சென்னையின் கிரிமினல் வழக்கறிஞர்களில் ஒருவராக அவர் வளர உதவியது அந்தச் சிறைவாசம்.

1952-ல் திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய இவர், 1953-ல் ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னரான சி.டி.தேஷ்முக்கை மணந்தார். முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி எனப் பல தலைவர்கள் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையின் மருத்துவப் பிரிவுகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். துர்காபாய் தொடங்கிய ஆந்திர மகிளா சபையின் அலுவலகம் இன்றைய ராஜ் பேலஸ் ஹோட்டலில் இயங்கி வருகிறது.

1950-ல் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான ராஜகுமாரி அம்ரித் கவுர், `ஏரோலைட்' என்ற பழைய பிரிட்டிஷ் கால பங்களாவை ஒரு லட்ச ரூபாய் நன்கொடையாக அளித்து ஆந்திர மகிளா சபாவுக்கு வாங்கித் தந்தார். வெங்கடாசலம் என்ற ஊறுகாய் அதிபரின் வீடான ஏரோலைட்டின் முன் கம்பீரமாக நிற்கிறது நூறாண்டுப் பழைமையான மிகப் பிரமாண்ட பாபாப் மரம். ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து வரவழைக்கப்பட்ட நூறாண்டு தாண்டிய சில மரங்களில் இதுவும் ஒன்று. சென்னையில் இன்றளவும் இவ்வகை மரங்கள் நான்கு மட்டுமே உள்ளன.

இப்போதுதான் எங்கள் குழு பசுமைவழிச் சாலையைத் தொடுகிறது. வெயில் சுட்டெரிக்கத் தொடங்குகிறது. வரிசைகட்டி நிற்கின்றன நம் மாண்புமிகு அமைச்சர்களின் வீடுகள். சட்டென ஒரு சிறிய திருப்பத்தில் நுழைந்ததும், கனமான காவல். `இருபது நபர்களுக்குத் துணைச் செயலர் அனுமதி உள்ளது' என்றதும், அனுமதிக் கடிதம் பார்த்துவிட்டு உள்ளே அனுமதித்தனர். அமைதியான உயர் பாதுகாப்புப் பகுதியில் நடந்தோம். கண்முன் வந்தது தமிழக அரசின் அண்ணா மேலாண்மை பயிற்சிப் பள்ளி அலுவலகம் இயங்கும் `காஞ்சி', முன்பு `தி கிராஞ்ச்'.

மிகவும் சிரமப்பட்டுத் தேடி, அதைவிட சிரமப்பட்டு அனுமதி வாங்கிய காஞ்சி எனும் தோட்ட வீடு முதலில் என்னைக் கவர்ந்தது, கூகுள் தேடலில் வந்த கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் காணொளி ஒன்றில் தான். 1930-ல் ஹாப்ஸ்டோன் ஸ்டோக்ஸ் மற்றும் அவரது மனைவி காணொளிப் படம் எடுத்த கிராஞ்ச் என்ற பங்களா, இன்றும் அதன் பொலிவு மாறாமல் மிளிர்கிறது. 1800-களில் கதரி மற்றும் கூமேஸ்வரர் கோயில்களும் ஒரு சாவடியும் நின்றிருந்த அவ்விடத்தில், 1853-ல் நார்ட்டன் துரை கட்டிய நார்ட்டன் தோட்டம் என்ற இந்த வீடு, 1907-ல் பெர்ஸி மேக்வீன் என்ற ஆங்கிலேய அதிகாரிவசம் வந்ததும் `தி கிராஞ்ச்' எனப் பெயர் மாற்றம் அடைந்தது. வளைந்த அழகிய மரத்தாலான படிக்கட்டுகள், வண்ணமயமான ஸ்டெய்ன்டு கண்ணாடி ஜன்னல்கள், வளைவுகள், மரத்தாலான தரை என்று தொலைந்துபோன ஒரு காலத்தைக் கண்முன் காட்டி நிற்கிறது இந்தக் கம்பீரமான கட்டடம்.

நடையின் இறுதி நிறுத்தம் - வசந்த விஹார். ஜி.கிருஷ்ணமூர்த்தி என்ற சிறந்த சிந்தனைவாதியின் இல்லமான வசந்த விஹார், அனைவரையும் வரவேற்கிறது. அமைதியான சோலை போன்ற தோட்டம், அதனுள் பூத்தும் காய்த்தும் கிடக்கும் தென் அமெரிக்க மரங்கள், நடுவே ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அமர்ந்து பேசும் ஒற்றைப் பாறை என்று ஆர்ப்பாட்டமின்றி இருக்கிறது இவ்விடம். பிஷப் கார்டன் என அழைக்கப்பட்ட இடத்தின் ஒரு பகுதியே இந்த வசந்த விஹார்.

அன்னி பெசன்ட் அம்மையாரால் `உலக ஆசிரியர்' என்று அழைக்கப்பட்டு, அதற்கென வளர்த்து எடுக்கப்பட்ட ஜிட்டு அனைத்தையும் ஒருநாள் உதறித் தள்ளிவிட்டு, தியோஸோஃபிகல் சொஸைட்டியில் இருந்து வெளியேறினார்.அவருக்கென1928-ல் அன்னி பெசன்ட் வாங்கிய இந்த இடத்தில், 1936-ல் தன் கன்னிப்பேச்சை ஆரம்பித்தார். அதன்பின் அமெரிக்காவிலும், சென்னையிலும் உலகெங்கும் பயணித்த ஜிட்டுவின் நினைவாக இயங்கும் நூலகம்தான் வசந்த விஹாரின் பொக்கிஷம். வித்தியாசமான கட்டமைப்புடன், அமைதியாக இருக்கும் இந்த நூலகத்தில் அனைவருக்கும் அனுமதி உண்டு.படிக்கக் கொட்டிக் கிடக்கின்றன புத்தகங்கள்.நாகலிங்கப் பூக்களின் வாசனையை நுகர்ந்தபடி வெளிவருகிறோம். ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய காட்சிகளும், கட்டடங்களும், மனிதர்களும் என வரலாற்றின் முந்தைய பக்கங்களைப் புரட்டிய இந்த மரபுநடையை இன்னொரு முறையும் நிகழ்த்த ஆசையாகத்தான் இருக்கிறது.பார்க்கலாம்!