Published:Updated:

`காரைக்குடி பள்ளியில் தமிழ் பழக வந்திருக்கும் அமெரிக்க ஜெஃப்ரி!

`காரைக்குடி பள்ளியில் தமிழ் பழக வந்திருக்கும் அமெரிக்க ஜெஃப்ரி!
News
`காரைக்குடி பள்ளியில் தமிழ் பழக வந்திருக்கும் அமெரிக்க ஜெஃப்ரி!

`காரைக்குடி பள்ளியில் தமிழ் பழக வந்திருக்கும் அமெரிக்க ஜெஃப்ரி!

`தமிழுக்கு மணமென்று பேர்' என்று பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மொழியின் சிறப்பைப் பாடியிருப்பார். மணமிக்க தமிழ் நாடு கடந்து ஒருவரை அழைத்து வந்திருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் 14 வயது ஜெஃப்ரி தமிழ் மீதான ஆர்வத்தால், தமிழ்நாட்டுக்கு வந்து அரசு உதவி பெறும் பள்ளியில் பயிற்சி எடுத்து வருகிறார் எனும் செய்தி மிகப் பெரிய ஆச்சர்யத்தை அளிக்கிறது அல்லவா! ஆங்கிலம் படிக்கும் ஜெஃப்ரிக்குத் தமிழ் மீது ஆவல் வந்த கதையைப் பார்க்கலாம். 

 ஜெஃப்ரின் பெரியப்பா ஜோசப்ரோஸிடம் பேசினோம். ``எங்க சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பக்கமிருக்கிற வலையம்பட்டி. என் தம்பி அன்னராஜ் தேவதாஸ், அமெரிக்காவில் செட்டிலாகி பத்தொன்பது வருஷமாச்சு. அங்கே விவசாயத்துறையில் அரசாங்க வேலையில் இருக்கார். ஜெஃப்ரினும் அவரின் தம்பி, ஜேடனும் அமெரிக்காவிலுள்ள அரசுப் பள்ளியில் படிச்சிட்டு இருக்காங்க. வீட்டில் தமிழ்ப் பேசினாலும் ஸ்கூலிலிலும் ஃப்ரெண்ட்ஸூம் இங்கிலீஷ் பேசுவதால் ஜெஃப்ரிக்கும் அதுவே ஈஸியாகப் பேச வருது. வருஷம் தவறாம, லீவுக்குக் குடும்பத்தோட இந்தியா வந்திருவாங்க. இங்க இருக்கிற சூழல் பிள்ளைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். திடீர்ன்னு ஒருநாள் போன் பண்ணி, காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியைப் பற்றி ஃபேஸ்புக் மூலமாத் தெரிஞ்சுகிட்டேன். அதனால அங்கே தமிழ் கத்துக்க வர்றேன்னு சொன்னார். நானும் சந்தோஷமா, `வா'னு சொன்னேன்" என்கிறார். 

மிகுந்த ஆர்வத்துடன் தமிழ் படிக்க வந்திருக்கும் ஜெஃப்ரின், அதற்கான பள்ளியைக் கண்டடைந்ததைப் பற்றி கூறுகையில், ``அப்பா, அம்மா தமிழ்ல பேசிக்கும்போது, எனக்கும் அப்படிப் பேச ஆசை வந்துடுச்சு. அதனால, ஃபேஸ்புக்கில் தேடினப்ப, ராமநாதன் செட்டியார் ஸ்கூலைப் பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். அப்பாவோடு ஃப்ரெண்டு மூலமாக இங்கே பேசி அனுமதி வாங்கினேன். அமெரிக்கா ஸ்கூலுக்கும் தமிழ்நாட்டு ஸ்கூலுக்கும் பில்டிங் அமைப்பிலிருந்து சிலபஸ் வரை நிறைய வித்தியாசம் இருக்குது. இப்பத்தான் கொஞ்சம், கொஞ்சமா தமிழ் எழுதிப் பழகறேன். எழுதப் படிக்கக் கத்துக்கிறதைவிட, ஸ்டூடன்ட்ஸோடு பேசுறப்பதான் நிறைய கத்துக்கிறேன். இந்த ஸ்கூல்ல உள்ள பசங்க என்னோட நல்லா ஒட்டிக்கிட்டாங்க. அமெரிக்கா பத்தி நிறைய கேள்வி கேட்பாங்க. இங்கே ஒருநாள் சத்துணவு சாப்பிட்டேன். நல்லா இருந்துச்சு. அமெரிக்கா ஸ்கூலேயும் ஃப்ரி லஞ்ச் இருக்கு. ஆனால், ரொம்ப ஏழையா இருக்கிறவங்களுக்கு மட்டும்தான். இங்கே இருக்கிற ஸ்டூடன்ஸ் ஒரு கம்யூனிட்டியாக ஒற்றுமையாக இருக்காங்க. அமெரிக்காவில் இப்படிப் பார்க்க முடியாது. அது ரொம்ப நல்ல விஷயம். தமிழை முழுசா எழுத, படிக்கக் கத்துக்கணுங்கிற எண்ணம், ஆசையா மாறிடுச்சு" எனக் கொஞ்சும் தமிழில் பேசுகிறார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆ.பீட்டர் ராஜாவிடம் பேசியபோது, ``2013 ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக இது உயர்ந்தது. அப்போது மாணவர்களின் எண்ணிக்கை 200 தான். இப்போது 1200 மாணவர்கள் படிக்கின்றனர். எங்கள் பள்ளியின் இணையத்தளத்தில் அனைத்துச்

செய்திகளையும் பதிவு செய்துள்ளோம். பள்ளிக்கான ஃபேஸ்புக் பக்கத்தில் பள்ளியில் நடக்கும் விழாக்கள், சாதிக்கும் மாணவர்கள் பற்றிய செய்திகள் என அனைத்தையும் தினந்தோறும் அப்டேட் செய்துவருகிறோம். இதையெல்லாம் பார்த்துத்தான் ஜெஃப்ரி எங்களைத் தொடர்புகொள்ள முடிவெடுத்திருக்கிறார். நாங்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றோம். பள்ளியின் அன்றாடப் பணிகள் பாதிக்காத வகையில் அவருக்குத் தமிழ் கற்றுத்தருகிறோம். பத்து நாள் பயிற்சிதான். ஏதேனும் ஒரு வகுப்பில் அமரச் செய்து, மாணவர்களோடு உரையாடச் செய்தோம். முதல்நாள் அவரோடு ஒட்டாத மாணவர்கள் அடுத்த நாளே நன்கு பழகிய நண்பர்களைப் போல மாறிவிட்டார்கள். ஜெஃப்ரினை விட, எங்கள் பள்ளி மாணவர்கள் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார்கள். அமெரிக்கா பற்றி ஏராளமான விஷயங்களைக் கேள்விகளாகக் கேட்டுத் துளைக்கின்றனர். ஜெஃப்ரி உயிர் எழுத்துகளும் அம்மா, ஆடு போன்ற சொற்களையும் எழுதப் பழகியுள்ளார். அதோடு, பள்ளியில் செய்யும் கைவினைப் பொருள்கள் செய்வதை ஆர்வத்துடன் பார்க்கிறார். இவரைப் போல குழுவாக வெளிநாட்டிலிருந்து பலர் வந்து, அரசுப் பள்ளியில் சில நாள்கள் பயிற்சி பெற வந்தால், நம் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையும் உற்சாகமும் கிடைக்கும்." என்கிறார். 

கண்டங்கள் தாண்டி வளர்பவர்களையும் ஈர்க்கும் அழகு மொழி தமிழ் என்பதில் சந்தேகமில்லை.