Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா!

அனுஷா... ஆதிரா... இனியா! - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுஷா... ஆதிரா... இனியா! - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா!

டிஜிட்டல் கச்சேரி

``இனியா கண்ணு... என்னடி செல்லம், ஃபேஸ்புக்ல உன் புரொஃபைல் பிக்சருக்கு ஹார்டின் எமோஜிஸ் அள்ளுது போல!’’    

அனுஷா... ஆதிரா... இனியா! - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா!

``அதெல்லாம் அப்டி அப்டிதான்!’’

``வர வர உன் மேல பொறாமையா இருக்கு இனியா!’’

``அடியேய்... உனக்குக்கூடத்தானே லைக்ஸ் அள்ளுது... என் மேல மட்டும் எதுக்கு இவ்ளோ பொறாமையாம்?’’

``வெறும் தம்ப்ஸ் அப் காட்டுற லைக்ஸ் எமோஜிக்கும், ஹார்டின் எமோஜிக்கும் வித்தியாசம் இல்லையா பொண்ணே?’’

``ஆமா... இப்ப எதுக்கு ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க?’’

``நீயே கேளு அனு... இந்த ஆதிராவுக்கு நான் ஹார்டின் வாங்குறதைப் பார்த்துப் பொறாமையாம்!’’

``இருக்காதா பின்னே? எனக்கும்தான் லைட்டா கண்ணு வேர்த்துச்சு. ஆனா, அதுக்காக ரொம்ப ஃபீல் பண்ணணும்னு அவசியம் இல்லை. ஃபேஸ்புக்ல நாம போடுற போட்டோஸ், ஸ்டேட்டஸ் எதுவா இருந்தாலும் அதுக்கு முன்னெல்லாம் லைக் பட்டனை மட்டும்தானே தட்டுவோம். ஆனா, இப்ப லைக்ஸ் மட்டுமல்ல... ஹார்டின், ஹாஹா, வாவ், ஆங்க்ரி, சோகம்னு வெரைட்டியா தட்டலாம்!’’

``அனு, மொக்கை போடாதேப்பா... இதெல்லாம் தெரிஞ்சதுதானே. இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற?’’

``அதாகப்பட்டது என்னன்னா... ஃபேஸ்புக் ஆராய்ச்சிப்படி சராசரியா ஒருத்தரோட பதிவுக்கு ஹார்டின் எமோஜிஸ்தான் அதிகமா வருதாம். அதுக்கடுத்தபடியா ஹாஹா, வாவ், சோகம்... ஆங்க்ரினு போகுது.’’   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அனுஷா... ஆதிரா... இனியா! - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா!

``அப்ப இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியானு சொல்லு!’’

``அதுசரி... இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும் ஓவியாவையும் பிக் பாஸையும் இழுக்காம எந்தப் பேச்சும் முடிய மாட்டேங்குதே... ஏன்?’’

``எல்லாத்துக்கும் பரணிதான் காரணம்.’’

``ஹாஹா...’’

``விழுந்து விழுந்து சிரிச்சுட்டேன்!’’

``பிக் பாஸ் பார்க்கப் பிடிக்குதோ இல்லையோ... அந்த புரோகிராம்ல பேசுற டயலாக்குகளை  நம்ம நெட்டிசன்ஸ் வைரல் ஆக்கிடறாங்க. உளவியல் ஆராய்ச்சி எல்லாம் செஞ்சுப் பார்த்தா, ஓவியாவுக்கு நம்ம மக்கள் வாரி வாரி ஓட்டுப் போடுறதுக்கும் அதான் காரணம்.’’

``ஆமாம் ஆமாம்... இதுக்குக்கூட அந்த பரணிதான் காரணம்.’’

``அய்யோ... என்னால முடியலை. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.’’

``அப்ப சீரியஸ் மேட்டர் பத்தி பேசலாமா?’’

``சென்னைல ஏரியாவுக்கு ஏரியா தண்ணிப் பிரச்னை. குடத்தைத் தூக்கிட்டு அலையுறோமே அதைப் பத்திப் பேசலாமா?’’

``இனியா, கொஞ்சம் தள்ளி நில்லு.’’

``எதுக்கு?’’

``நீ குளிச்சு எத்தனை நாள் ஆகுது கேர்ள்?’’

``ஆமா... இனியா. பெர்ஃப்யூம் வாசனை தூக்கலா இருக்கும்போதே யோசிச்சேன்.’’

``ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தாச்சா?’’

``ஆமா... அப்டிதான் கலாய்ப்போம்!’’

``சரி சரி போதும்... ஸ்ரீதேவியோட `மாம்’ படத்தைப் பத்தி பேசலாம்.’’

``கண்டிப்பா பேசவேண்டிய படம்தான்.’’

``ஸ்ரீதேவி, நவாஸுதின் சித்திக், சாஜல் அலி மூணு பேருமே படத்துல பின்னி எடுத்திருக்காங்க!’’

``ஏ.ஆர்.ரஹ்மானோட மியூசிக் செம!’’

``படம் பார்த்ததுல இருந்து இனிமே எதுவா இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லணும்னு தோணுது இனியா!’’   

அனுஷா... ஆதிரா... இனியா! - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா!

``வேலன்டைஸ் டே பார்ட்டிக்குப் போகுற சாஜல் அலியை கார்ல கடத்திட்டுப் போய் சின்னாபின்னமாக்கி சாக்கடையில தூக்கிப் போடுற கொடூரத்தைப் பார்த்தப்ப அழுதுட்டேன்!’’

``ஒரு பொண்ணைப் பாலியல் கொடுமை செஞ்ச பிறகு அவ இந்தச் சமூகத்துல நடமாடறதே கொடூரமானதுதான். இந்த படத்துல தன் மகளுக்காக ஸ்ரீதேவி ஒருபக்கம் போராட, இன்னொருபக்கம் துப்பறிவாளரா வர்ற நவாஸுதினும் போராடுறார். படம் முழுக்கவும் த்ரில், சென்ட்டிமென்ட்னு ஏதோ ஒருவிதத்துல படம் நம்ம கூடவே டிராவல் ஆகுது.’’

``இத்தனைக்கும் படத்துல ஸ்ரீதேவிக்குச் சித்தி ரோல்தான். ஆனாலும், தாய்க்குண்டான அத்தனை பரிதவிப்புகளையும் கொண்டுவந்து நடிப்புல வெளுத்து வாங்கியிருக்காங்க. மாஸ் பெர்ஃபாமன்ஸ்!’’

``இந்தப் படத்தைப் பார்த்தப்ப எனக்கு மம்முட்டி, நயன்தாரா நடிச்ச `புதிய நியமம்’ படம்தான் ஞாபகத்துக்கு வருது. அந்தப் படத்துலயும் தன்னைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்குனவங்களை நயன்தாரா பழிவாங்குற காட்சிகளைப் பார்த்தப்ப ஒரு பெண்ணோட வலியை உள்வாங்க முடிஞ்சது.’’

``பெண்ணுக்கு எதிரா நடக்குற குற்றங்களுக்கு எதிரா ஆண்கள்தான் தட்டிக்கேட்க கிளம்பி வரணும்கிற சினிமா விதிகளைத் தாண்டி, பெண்களே வலிமையோடு எழுந்து வருவது மாதிரியான திரைப்படங்கள் வருவதே பாராட்ட வேண்டிய விஷயம்தான்.’’

``யெஸ் யூ ஆர் ரைட்!’’

- கச்சேரி களைகட்டும்...

அனுஷா... ஆதிரா... இனியா! - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா!

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது, இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா!
அனுஷா... ஆதிரா... இனியா! - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா!

`மாம்’ படம் எப்படி?

http://bit.ly/2tKda6Z

அனுஷா... ஆதிரா... இனியா! - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா!
அனுஷா... ஆதிரா... இனியா! - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா!

ஓவியாவுக்கு ஓட்டுகள் குவிய காரணம் இதுதானா?

http://bit.ly/2udO18l

அனுஷா... ஆதிரா... இனியா! - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா!
அனுஷா... ஆதிரா... இனியா! - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா!

ஃபேஸ்புக்கில் நாம் காட்டும் முகம் இதுதான்!

http://bit.ly/2vFfsGc