Published:Updated:

``ஒன் சைடு லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை!’’ - கருணாநிதியின் ஹிட் ஒன் லைனர்ஸ்

கருணாநிதியின் ஒரு வரி பேச்சு அரசியல் அரங்கில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அப்படி அவர் பேசிய சில ஒன்லைனர்ஸ் மட்டும் இங்கே!

``ஒன் சைடு லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை!’’ - கருணாநிதியின் ஹிட் ஒன் லைனர்ஸ்
``ஒன் சைடு லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை!’’ - கருணாநிதியின் ஹிட் ஒன் லைனர்ஸ்

றைந்த முன்னாள் முதல்வர், தி.மு.க தலைவர் கருணாநிதி சட்டசபையிலும், செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் ஏராளமான ஒன்லைனர்களை உதிர்த்திருக்கிறார். அவருடைய ஒரு வரிப் பேச்சு அரசியல் அரங்கில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தும். அப்படி அவர் பேசிய சில ஒன்லைனர்ஸ் மட்டும் இங்கே!

``நான் மன்னனுமல்ல. ஸ்டாலின், இளவரசனுமல்ல! தி.மு.க சங்கர மடமும் அல்ல!''

``இன்னும் நிறைவேறவேண்டியவை நிறைய உள்ளன. அந்த நோக்கங்களையும் நிறைவேற்றிடத்தான் நான் இன்னும் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.”

``ஸ்டாலினுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துள்ளேன். அவர் எனக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வார் என்று  நம்புகிறேன்.''

``நான் இளமைத் துடுக்கோடு இருந்தபோது பிறந்தவன் அழகிரி. பக்குவப்பட்ட காலத்தில் பிறந்தவன் ஸ்டாலின். இருவரது நடவடிக்கையிலிருந்தும் அதைத் தெரிந்துகொள்ளலாம்'' 

``காலம் எனக்கு மருந்து போட்டுவிட்டிருக்கிறது. எனக்கு தேவை உங்கள் இதய சிம்மாசனம்தான். அதில் நான் இருக்கிறேன். ''

``எனக்குக் கழகம்தான் குடும்பம்... குடும்பம்தான் கழகம்!'' 

``புதியவர்களில் ஒருசிலர் இந்த இயக்கத்தின் மூலக்கொள்கைகளைப் புரிந்துகொள்ள சில காலம் ஆகலாம். அதை வைத்து, கொள்கை குறைந்துவிட்டதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.''

``காவிரிப் பிரச்னை முடிவு இல்லாமல் நீடித்துக்கொண்டே இருப்பது எனக்கு வேதனையைத் தந்துகொண்டிருக்கிறது.''

``தமிழன் என்பது, எப்படி நிரந்தரமானதோ, அதைப் போன்றதுதான் திராவிடமும் தமிழ் உணர்வும்.  தாய்ப்பாசத்துக்கு எப்படிக் காலநிர்ணயம் இல்லையோ, அதைப்போல் தமிழ் உணர்வுக்கும் காலநிர்ணயம் கிடையாது.”

``நான் இதுவரை யாரையும் (ஜெயலலிதா) எனக்குச் சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டது இல்லை.”

``(ஜெயலலிதாவிடம்) பிடித்த விஷயம் நடனம், நடிப்பு. பிடிக்காத விஷயம் காழ்ப்புஉணர்ச்சி அரசியல்.”

``தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் மேலும் சில ஆண்டுகள் நம்மோடு இருந்திருந்தால், ஆணவக் கொலைகளுக்குத் தமிழகத்தில் இடம் இல்லாமல் போயிருக்குமோ?”

``சூரியனோடு சேர்ந்து எழுந்தாலே சுறுசுறுப்பு மிகும். அதன் வழி ஆரோக்கியம் பெருகும். ஞாபக சக்தி மலரும்.'' 

``எழில் ரோஜாவை எருக்கம் பூ என்று கூறுவதால், அந்த ரோஜாவின் மணமோ, மதிப்போ குறைந்துவிடுவதில்லையே!''

``எனக்குத் தனிமை பிடிக்காது. எப்போதும் கூட்டத்தோடுதான் இருக்க வேண்டும்.''

``அண்ணன் எப்ப சாவான்.. திண்ணை எப்ப காலியாகும்னு சில கட்சித் தலைவர்கள் காத்திருக்கிறார்கள். அண்ணனும் சாக மாட்டான். திண்ணையும் காலியாகாது.''

``இது சங்கர மடம் அல்ல. இங்கு யாரையும் எந்தப் பதவிக்கும் நியமிக்க மாட்டேன்.''

``ஒன் சைடு லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை!’’

``ஆண்டவர்களை தேசிய உடைமையாக்கும் உத்தேசம் இல்லை. ஆண்டவன்தான் அனைவரையும் தேசிய மயமாக்கி ரட்சிக்க வேண்டும்!’’

``(கன்னியா) குமரியின் மீது கடைக்கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது!’’

``ஜெயலலிதா தொடர்ந்து மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி என்று சொன்னால், இனி நான் அவரை திருமதி ஜெயலலிதா என்றுதான் அழைப்பேன்' ''

 ``தமிழக அரசு விழாக்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் பரிசுப் பொருள்களை வாங்கக் கூடாது. அரசு விழாக்களை ஆடம்பரமாகவும் நடத்தக் கூடாது.''

``தமிழனுடைய உணர்ச்சியைத் தட்டிவிடும் வேலை இனியும் வேண்டாம். இது ஏதோ அதிகாரத்திலே அமர்ந்துவிட்ட காரணத்தால், கடந்த ஆட்சிக்காலத்தைப் போல ஆணவக் குரல் அல்ல. அடக்கமான குரல்தான். ''

``சன் டி.வி-யின் பங்குத் தொகை பிரிக்கப்பட்டு, எமக்குக் கிடைத்த 100 கோடியைப் பங்கிட்டுக்கொண்டோம். அதன் லாபம், கணக்கை நான் அறியவில்லை. ஆனால் பங்கீடு நடந்தபோது, அதில் பங்குப் பெற்றிருந்தோர் கையெழுத்துப் போட முன்வராத நிலையில், நான்தான் சமாதானம் செய்து, கசப்பு உணர்வு ஏற்படாத வகையில் நடந்தேறிட உதவினேன்.''