Published:Updated:

`பிள்ளைகளைப் படிக்க வைக்கணும்னு பழங்குடி மக்கள் உறுதியா இருக்கணும்!’’ `குரூப் 4’-ல் வென்ற படுகர் இன பிரீத்தி

`பிள்ளைகளைப் படிக்க வைக்கணும்னு பழங்குடி மக்கள் உறுதியா இருக்கணும்!’’ `குரூப் 4’-ல் வென்ற படுகர் இன பிரீத்தி
News
`பிள்ளைகளைப் படிக்க வைக்கணும்னு பழங்குடி மக்கள் உறுதியா இருக்கணும்!’’ `குரூப் 4’-ல் வென்ற படுகர் இன பிரீத்தி

`பிள்ளைகளைப் படிக்க வைக்கணும்னு பழங்குடி மக்கள் உறுதியா இருக்கணும்!’’ `குரூப் 4’-ல் வென்ற படுகர் இன பிரீத்தி

நீலகிரி மாவட்டம், படுகர் இனத்தைச் சேர்ந்த மாணவி பிரீத்தி, குரூப் 4 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம்பிடித்துச் சாதித்துள்ளார். நீலகிரி மாவட்ட அளவில் இதுவே முதல் முறை. மலையரசியின் மாணவர்களுக்கு முன்னோடியாக மாறியிருக்கிறார் பிரீத்தி.

``பிரீத்தி பற்றிச் சின்ன அறிமுகம்...''

``என் அப்பா கே.சுப்பிரமணி, ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஓட்டுநர். அம்மா சிந்தாமணி, தேயிலை தோட்டப் பணியாளர். என் அண்ணன் பொறியியல் பட்டம் பெற்று B.A. முடித்துவிட்டு IAS தேர்வுக்குத் தயாராகிவருகிறார். எங்கள் சொந்த ஊர், பாக்கோரை கிராமம், நான் பிறந்து வளர்ந்தது கன்னேரிமூக்கு கிராமம். இப்போது கோயம்புத்தூரில் செட்டில் ஆயிட்டோம். கோத்தகிரி C.S.I உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மீடியம்தான் படிச்சேன். மருத்துவர் ஆகணும்னு ஆசைப்பட்டேன், BDS கவுன்சலிங்கில் சீட்டு கிடைத்து, பாதை மாறியது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவையில் என் இளங்கலை பட்டத்தை 2016-ம் ஆண்டு பெற்றேன். என் பணி சமுதாயம் சார்ந்து இருக்க வேண்டும் என்று குரூப் 4 தேர்வுக்கு 2016 நவம்பரிலேயே விண்ணப்பித்தேன். தேர்வுக்குத் தயாராகாத நிலையில் எழுத முடியவில்லை. நம்பிக்கையை விடாமல் தொடர்ந்தேன். ஆகஸ்டு, 2017 குரூப் 2 A எழுதினேன். மார்ச் 2018-ல் தேர்ச்சிபெற்ற செய்தி வந்தது. இந்த வருடம் குரூப் 4 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தேன். இந்த வெற்றி, என் பெற்றோரையே சாரும்.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``உங்க குடும்பச் சூழ்நிலை எப்படி இருந்தது?''

``என்னைப் போன்ற பொருளாதாரம் குறைவான குடும்பத்தில், ஒரு டிகிரி முடிச்சாலே, `வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சா?'னு கேட்பாங்க. ஆனால், ``நீ மேலே படிம்மா, படிப்புத்தான் உன் எதிர்காலத்தை உருவாக்கும்'னு ஊக்கப்படுத்தி படிக்கவெச்சாங்க என் அப்பாவும் அம்மாவும். 10-ம் வகுப்பில் தாலுகாவில் முதலிடம், 12-ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் என என் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவங்களின் உழைப்பும் உறுதுணையும் இருக்கு.''

``IAS ஆவதுதான் உங்கள் கனவா?''

``படிப்பு என்னுடைய லட்சியம், பொழுதுபோக்கு எல்லாம். சமுதாயத்துக்காக என் பணி இருக்கணும்னு குரூப் 4 எழுதறதுக்கு தனியார் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். பெற்றோரிடம் படிப்புச் செலவுக்குப் பணம் கேட்க மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. குரூப் 4 தேர்வை முடிச்சுட்டு நான் பயிற்சி பெற்ற அகாடமியில் ரிசப்ஷனிஸ்டாக வேலைக்குச் சேர்ந்தேன். குரூப் 4ல பாஸ் ஆனாலும் என்னோட கவனம் எல்லாம் யூ.பி.எஸ்.சி மேலதான் இருக்கு. இப்போ, வேலை பார்த்துட்டேன் UPSC தேர்வுக்குத் தயாராகிட்டு இருக்கேன். சின்ன வயசுல என் பள்ளி ஆசிரியர்கள் சுப்பிரமணியன் சார், சுசிலா மேம் உதவினாங்க. குரூப் தேர்வுக்குப் பயிற்சி தந்த பயிற்சியாளர்கள் உதவினாங்க. முக்கியமாக என் அண்ணன் பிரசாந்தும் உதவினார். அவரும் UPSC தேர்வுக்குத் தயாராகி வர்றார்.''

``நீலகிரியில் குரூப் தேர்வுக்கான விழிப்புஉணர்வு இருக்கிறதா?''

``மற்ற மாவட்டங்களில் உள்ள அளவுக்கு விழிப்புஉணர்வு நீலகிரியில் இல்லை. தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் எனப் பழங்குடி மக்கள் உறுதியாக இருக்கணும். பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைப் படிச்சதுமே வேலைக்குப் போகணும்னு நினைக்காமல், இதுபற்றிய வழிகாட்டுதலைத் தெரிஞ்சுகிட்டு உதவியாக இருக்கணும்.''

``நீங்க தேர்வுக்குத் தயாரான அனுபவங்கள் பற்றி..?''

``தேர்வுக்குப் படிக்க லாங் டேர்ம் என்றும், ஷாட் டேர்ம் என்றும் பிரிச்சுக்கிட்டேன். லாங் டேர்மை 4 மாதங்களாகப் பிரிச்சு, ஒவ்வொரு மாசத்தின் முதல் நாளில் தேர்வுக்காக என்ன செய்யணும் என்பதையும், ஷாட் டேர்மை 1 மாதமாகச் சுருக்கி, ஒவ்வொரு நாளுக்கும் முன்பு தேர்வுக்காக என்ன செய்யணும் என்பதையும் திட்டமிட்டு முடிப்பேன். புத்தகத்தை மேலோட்டமாகப் படித்து முதலில் கான்சப்டைப் புரிஞ்சுப்பேன். அப்புறம், எதெல்லாம் மறந்துடறேனோ, அதையெல்லாம் தனியாக எழுதிவெச்சுப் படிப்பேன்.''

``குரூப் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குச் சொல்ல விரும்புவது?''

``முதலில் என்ன படிக்கணும்னு தெரியணும். அப்புறம் திட்டமிடல். எப்படிப் படிக்கிறோம் என்பதைவிட என்ன படிக்கிறோம் என்பது முக்கியம். புத்தகத்தைத் தேர்வுசெய்து படிக்கணும். பள்ளி புத்தகங்களை கரைச்சு குடிச்சிருக்கணும். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!''