Published:Updated:

கடிதம் வரும் கலைமாமணி வராது!

கடிதம் வரும் கலைமாமணி வராது!

கடிதம் வரும் கலைமாமணி வராது!

கடிதம் வரும் கலைமாமணி வராது!

Published:Updated:
##~##

''தமிழ் நாட்டில் கலைஞர்களுக்குப் பெரிய கௌரவம் இல்லை. மற்ற மாநிலங்களில் கலைஞர்களுக்குத்தான் முதல் மரியாதை. ஒரு கலைஞன் இறந்துட்டா, அன்னைக்கு அரசு விடுமுறை அறிவிக்கிற மாநிலங்களும் உண்டு. ஆனா, இங்கே கலைஞன் என்றாலே அது சினிமாக்காரங்கதான்!'' - வருத்தம் மேலிடப் பேசுகிறார் புகழ்பெற்ற வயலின் கலைஞர் நாகராஜன்.

 இவருக்கு 82 வயதாகிறது. கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் இவரை 'நைனா பிள்ளை’ என்று  அழைப்பார்களாம். மாடர்ன் தியேட்டர்ஸ் இசைக் குழு, கிருபானந்த வாரியார், இசை அமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், டி.ஆர்.பாப்பா, வைஜெயந்தி மாலா, சித்தூர் சுப்ரமணியன், மதுரை சோமு, நாட்டியக் கலைஞர் பாலசரஸ்வதி என இவர் பலரிடமும் பணியாற்றியவர். காஞ்சிபுரத்தில் தன் மகனுடன் வசிக்கும் இவரைச் சந்தித்தபோது அவர் பகிர்ந்துகொண்ட நினைவுகளில் இருந்து...

கடிதம் வரும் கலைமாமணி வராது!

''சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இசைக் கலைஞர்கள் சங்க நிகழ்ச்சி. எம்.ஜி.ஆர்-தான் சிறப்பு விருந்தினர். அவருக்கு மரியாதை தர எல்லா இசைக் கலைஞர்களும் எழுந்து நின்றதும், 'இசை, தெய்வத்துக்குச் சமமானது. அதை வளர்க்கும் கலைஞர்கள் என்னை மாதிரி சாதாரண மனுஷனுக்கு எல்லாம் எழுந்திருக்கக்கூடாது’ என்றார். முதல்வரான பிறகும் அவரின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்பது மகத்தான விஷயம்.  

'மாடர்ன்  தியேட்டர்ஸ்’ அதிபர் சுந்தரம் ஒரு பெர்ஃபக்ஷனிஸ்ட். வேலை முடிஞ்ச அடுத்த நிமிஷம் சம்பள கவரை கையில் கொடுத்துவிடு வார். போக்குவரத்துச் செலவும் கைக்கு வந்துடும். வீட்டில் அடுப்பைப் பத்தவைக்கச் சொல்லிட்டு நம்பிக்கையோடு வேலைக்குப் போகலாம். கலைஞர்கள் மேல்

கடிதம் வரும் கலைமாமணி வராது!

அவருக்கு அவ்வளவு மரியாதை. ஆனால், அதற்கு நேர் எதிரா பெரிய நடிகர்களிடம் கெடுபிடி காட்டுவார். ஒருமுறை ஸ்டுடியோவில் இவருடைய பிரத்யேக அறையைப் பயன்படுத்த பிரபல நடிகர் ஒருவர் விரும்பினார். உதவியாளர் மூலம் இந்தத் தகவல் வர... டென்ஷனான சுந்தரம், 'முடிஞ்சா நடிக்கச் சொல்லு. இல்லைனா எடுத்ததுவரை தூக்கிப் போட்டுட்டு வேறு ஒருத்தரைவெச்சு படத்தை முடிச்சுடுவேன்’ என்றார் கோபமாக.

மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து வெளியே வந்ததும் நடிகை வைஜெயந்தி மாலாவின் நடனக் குழுவில் சேர்ந்தேன். பெரிய நடிகை, நாட்டியத் துறையில் கொடி நாட்டியவர்னாலும் அந்த பந்தா துளியும் அவர்கிட்ட இருக்காது. சின்ன வயசுக்காரங்களா இருந்தாலும் மரியாதை தருவார்.

வாரியார்தான் என் பேசும் தெய்வம். கதாகாலட்சேப நிகழ்ச்சிகளில் தான் பேசப்போற தலைப்பை, நிகழ்ச்சி தொடங்குவதற்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்புதான் கேட்டுத் தெரிஞ்சுக்குவார். மேடையில் தலையைக் கவிழ்ந்தபடி தலைப்பை ஒட்டிய விஷயங்களை அஞ்சு நிமிஷம் மனசுல ஓட்டுவார். அவ்வளவுதான். எங்கே தொடங்கி எங்கே முடிக்கிறதுங்கிறதுவரை

கடிதம் வரும் கலைமாமணி வராது!

மனசுல தீர்மானம் பண்ணி மேடையில் பேசி அசத்துவார்.

என் பிள்ளைங்க ஆசைப்பட்டாங்களேனு கலைமாமணி விருதுக்கு விண்ணப்பிச்சேன். கிடைக்கலை. தொடர்ந்து விண்ணப்பிச்சிக்கிட்டே இருந்தேன். ஒவ்வொரு தடவையும், 'உங்கள் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது’னு கடிதம் வருமே தவிர, கலைமாமணி விருது வராது. போன வருஷம் 'கலைமாமணி’ அறிவிப்பில் என் பெயர் இருக்கானு ஆவலோடு பார்த்தேன். ஆனால் பட்டியலில், ரஜினி பொண்ணு உட்பட பலரோட பேரு இருந்துச்சு. எந்த அளவுகோலை வெச்சு கலைமாமணிக்குத் தேர்வு செய்யுறாங்கன்னே தெரியலை. வெறுத்துப்போய் இப்போ விண்ணப்பிக்கிறதையே விட்டுட்டேன். இளம் கலைஞர்களுக்கு விருது வழங்குவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், வாழும் காலத்தில் மூத்த கலைஞர்களுக்கு மரியாதை செய்யணும்னு யாரும் நினைக்கிறது இல்லை'' என்கிறார் நாகராஜன்.

'மூத்த கலைஞர்களைப் போற்றும் சமூகம்தான் முதிர்ச்சி அடைந்த சமூகம்’ என்பதை எப்போது நாம் உணரப்போகிறோமோ?

- எஸ்.கிருபாகரன்
படங்கள்: வீ.ஆனந்தஜோதி