Published:Updated:

ரோஜா மணத்தில் பினாயில்!

ரோஜா மணத்தில் பினாயில்!

ரோஜா மணத்தில் பினாயில்!

ரோஜா மணத்தில் பினாயில்!

Published:Updated:
##~##

குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே தொடங்கிய தொழில்தான். இன்று ஏழெட்டு மாவட்டங்களில் வேர்விட்டு, விழுதுவிட்டு வெற்றிச் சரித்திரம் படைத்து இருக்கிறார் கோவையைச் சேர்ந்த சுதா. 'டாக்டர் க்ளீன்’ பினாயில் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் இவர்.

 ''கல்யாணமான பிறகு வீட்டுல சும்மா இருக்கிறதுக்குப் பதிலா சொந்தத் தொழில் செய்யலாமேனு தோணுச்சு. 'எல்லா வீடுகள்லயும் பயன்படுத்துற மாதிரியான  பொருளை தயாரிக்கலாமே’னு ஐடியா கொடுத்தார் என் கணவர் சேகர். ரொம்ப யோசிச்சுப் பினாயில் தயாரிப்பில் ஈடுபட முடிவெடுத்தோம். ஆரம்பத்துல வெறும்

ரோஜா மணத்தில் பினாயில்!

5,000-ம்தான் முதலீடு. சுகாதாரம், ஆரோக்கியமான வாழ்வு முக்கியம்ங்கிறதால 'டாக்டர் க்ளீன்’னு பேர்வெச்சோம். எந்தச் சூழல்லயும் தொழில்ல தரத்தை மட்டும் குறைச்சிக்கக் கூடாது; அப்படி ஒரு நிலைமை வந்தா தொழிலையே விட்டுடணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு தயாரிப்புல இறங்கினேன்.

ரோஜா மணத்தில் பினாயில்!

ஆரம்பத்துல அக்கம்பக்கத்துல கடைகள் ஆர்டர் பிடிச்சு 10, 20 பெட்டி சப்ளை பண்ணினோம். அதில் கிடைச்ச லாபத்தைத் திரும்பவும் தொழில்லயே போட்டோம். இப்படியே எங்களோட முதலீடு சுமார்

ரோஜா மணத்தில் பினாயில்!

30,000த்தைத் தொட்டது. அப்புறம் கமிஷன் அடிப்படையில விற்பனைப் பிரதிநிதிகளை நியமிச்சோம். கையைக் கடிக்காம வருமானம் வந்தது.

சொந்தத் தொழில் செய்யும்போது நிறைய பிரச்னை வரும். ஆர்டர் நிறைய வர்ற நேரத்துல ரெண்டு மூணு பேர் ஒண்ணா லீவு போட்டுடுவாங்க. மின்வெட்டு வரும். எல்லாத்தையும் சாமர்த்தியமாக் கையாளக் கத்துக்கோணும். வேலை பார்க்கிறவங்கக்கிட்ட 'நாம எல்லோரும் ஒரே குடும்பம். தொழில் நல்லா நடந்தாத்தான் நாம எல்லோரும் நல்லா இருக்கலாம்’னு புரியவெச்சு, அவங்க கஷ்ட, நஷ்டங்கள்ல பங்கு எடுத்துக்கோணும். அப்பதான் அவங்களும் முழுமையான ஈடுபாட்டோட வேலை செய்வாங்க.

ஆர்டர் நிறைய வருதுனு கடன் வாங்கி சப்ளையை பெருக்கிடக் கூடாது. சப்ளை செய்யறதைவிட அதுக்கான பண வரவு எப்படி இருக்குங்கிறதுதான் முக்கியம். அதைப் பொறுத்துதான் உற்பத்தியை அதிகப்படுத்தணும். கொஞ்சம் பிரபலமான பின்னாடி கட்டாயம் நம்மோட பேக்கிங் கலர், ஸ்டைலை காப்பி அடிச்சு போலி தயாரிப்புகள் கடைகளுக்கு வரும். உடனே கோபப்படாம நிதானமா அவங்களை டீல் செய்யணும்.

ரோஜா மணத்தில் பினாயில்!

பினாயில் தயாரிப்புக்கு முக்கியமான பொருள் 'பைனாயில்’. இதுலதான் தரமான பினாயில் கிடைக்கும். சிலர் 'க்யூமின்’ங்கிற பெட்ரோலியப் பொருளைப் பயன்படுத்தி குறைஞ்ச விலையில அதிக அளவு பினாயிலை உற்பத்திச் செய்வாங்க. ஆனா, தரம் இருக்காது. ஒரே மாதிரியான தயாரிப்பையே வழங்காம, அதே சமயம் தரமும் குறையாம சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்யறது தொழிலுக்கு நல்லது. பினாயில்னாலே வெள்ளை நிறத்துல இருக்குறது ஆஸ்பத்திரியை ஞாபகப்படுத்தும். அதனால, நாங்க எலுமிச்சை மணத்தோட மஞ்சள் நிறம், ரோஜா மணத்தோட பிங்க் நிறம் கொண்டுவந்தோம். இன்னிக்கு கோவை உட்பட ஏழெட்டு மாவட்டங்கள்ல எங்க தயாரிப்பு நல்லா போகுதுங்க. சொந்த வீடு, பிள்ளைங்க படிப்பு, எதிர்கால சேமிப்புனு எல்லாத்தையும் இந்தத் தொழில்தான் கொடுக் குது. இதை எல்லாம்விட நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 பேருக்கும் மேல வேலை கொடுக்குறோம்கிற திருப்தி இருக்குங்க!'' நிறைவாகப் பேசுகிறார் சுதா.

- எஸ்.ஷக்தி, படம்: வி.ராஜேஷ்

ஊர்க் கூடி அழும் விழா!

ரோஜா மணத்தில் பினாயில்!

துவாரக யுகத்தில் அர்ச்சுனனுக்கும் நாகக்கன்னிக்கும் மகனாகப் பிறந்த அரவானை, யுத்தத்தில் களப்பலி கொடுத்து பாண்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சொல்கிறது மகாபாரதம்.

இதை நினைவுகூரும் வகையில் கோவை, குறிச்சியில் உள்ள அரவான் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் மூன்று நாட்கள் நடக்கிறது அரவான் திருவிழா. விழாவில் அரவானின் வரலாற்றை ஊர்ப் பெரியவர்கள் உருக்கமாகப் பாடுகிறார்கள்.

முதல் நாள் அரவானை அலங்கரித்து குளக்கரை விநாயகர் கோயிலில் தீர்த்தமாடி பொங்காளி அம்மனுக்கு மணம் முடித்து வைக்கிறார்கள். மறுநாள் அத்தி மரக்குச்சி மற்றும் மண்ணைக் குழைத்து அரவானுக்குப் புதிய முகத்தை வடிவமைக்கிறார்கள். மூன்றாம் நாள் அரவானை வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்று மாலையில் ஊர்க்கூடி அழுது, அரவானைக் களப்பலி இடுகிறார்கள். அரவானை முழுவதுமாகச் சிதைத்து குளத்தில் வீசும்போது, கண்ணீருடன் மௌனமாக முடிகிறது திருவிழா!

- ஜீவா