Election bannerElection banner
Published:Updated:

விலை மதிப்பில்லா சேவையில் வித்யா நிகேதன்!

விலை மதிப்பில்லா சேவையில் வித்யா நிகேதன்!

##~##

விதவைகள், முதியோர், ஆதரவற்ற குழந்தைகளைக்கூட  அரவணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கும் சமூகம், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மட்டும் ஏற்றுக்கொள்வது இல்லை. இவர்களுக்கான அமைப்புகளும் அரிது. பலசமயங் களில்  இவர்களுடைய குழந்தைகளும் பாலியல் தொழிலில் தள்ளப்படும் கொடுமைகளும் நிகழ்வது உண்டு. இந்த அவலத்தில் இருந்து குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கான அடிப்படை வசதி மற்றும் கல்வியைப் புகட்டி ஆதரவு அளித்துவருகிறது ஓசூரில் இயங்கும் வித்யா நிகேதன்!

 ''பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் குழந்தைகள் நிலை மிகவும் பரிதாபம். அதனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன் 12 பேர் சேர்ந்து இந்த அமைப்பைத் தொடங்கினோம். சட்டப் பிரச்னை, தொழிலுக்காக அவர்கள் இடம் மாறிக்கொண்டே இருப்பது போன்ற காரணங்களால் ஆரம்பத்தில் அவர்களைத் தேடிப்பிடித்து ஒருங்கிணைப்பது கஷ்டமாக இருந்தது. ஒருவழியாக அவர்களைக் கண்டுபிடித்து எங்கள் திட்டத்தில் சேர்க்க அணுகியபோது, அவர்கள் தங்களைப் பாலியல் தொழிலாளர்கள் என ஒப்புக்கொள் ளத் தயாராகவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடன் பேசி எங்களின் நோக் கத்தைப் புரியவைத்து, குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுக்க ஆரம்பித்த பிறகுதான் ஒத்துழைப்பு கொடுக்கத் தொடங்கினார்கள்'' என்றார் இதன் இயக்குநர் நாகராஜ்.

விலை மதிப்பில்லா சேவையில் வித்யா நிகேதன்!

அமைப்பின் செயலாளர் சரளா மற்றும் ஆசிரியை லலிதா ஆகியோர், ''ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் லாரி போக்குவரத்து அதிகம் இருக்கும். அத்துடன்  காட்டுப் பகுதி வேறு. அதனால், இயல்பாகவே இங்கு பாலியல் தொழிலும் அதிகம். அதனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று மையங்களை நடத்திவருகிறோம். எங்கள் சேவைத் திட்டத்தில் இதுவரை 153 பெண்கள் இணைந்து உள்ளனர். நான்குமுதல் 15 வயது வரை உள்ள 172 குழந்தைகளைஎங்கள் மையத்தின் விடுதிகளில் தங்கவைத்துப் பராமரிக்கிறோம்.

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவர்களில் 20 சதவிகிதம் பேர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட வர்கள். பாதிக்கும் மேற்பட்டோர் மது அருந்துப வர்களாகவும் இருக்கிறார்கள்.  

விலை மதிப்பில்லா சேவையில் வித்யா நிகேதன்!

அதனால் நாங்கள் இவர்களுக்குத் தொடர்ச்சியான மருத்துவச் சிகிச்சை அளிக்கிறோம். ஹெச்.ஐ.வி. குறித்த கலந்தாய்வு வகுப்புகளையும் எடுக்கிறோம். எல்லாவற்றையும்விட இந்தத் தொழிலில் ஈடுபட்டு இருந்த 45 பேரை இந்தத் தொழிலில் இருந்து மீட்டு, மாற்றுத் தொழில் செய்ய ஏற்பாடும் செய்துகொடுத்துள்ளோம். ஆனால், அப்படித் திருந்துபவர்களையும் புரோக்கர்களும், பழகிய வாடிக்கையாளர்களும் விடாமல் தொல்லை கொடுக்கிறார்கள். இதைக் காவல்துறையிடம் புகாராகக் கொண்டுசெல்கிறோம்.

விலை மதிப்பில்லா சேவையில் வித்யா நிகேதன்!

வாரம் ஒருநாள் இந்தப் பெண்கள், மையத் துக்கு வந்து தங்கள் குழந்தைகளுடன் நாள் முழுவதும் செலவிட்டுச் செல்கின்றனர். அப் போது அவர்கள் முகத்தில் காணக்கிடைக்கும் மகிழ்ச்சிதான், எங்கள் சேவைக்கான அர்த்தத்தைத் தருகிறது!'' என்கிறார்கள் புன்னகையுடன்!

கு.சக்திவேல், படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு