Published:Updated:

கல்வி முறையை மாற்றியமைக்கும் டெக்னாலஜி... இனி ஜாலியா படிக்கலாம்! #Holoportation

கல்வி முறையை மாற்றியமைக்கும் டெக்னாலஜி... இனி ஜாலியா படிக்கலாம்! #Holoportation
கல்வி முறையை மாற்றியமைக்கும் டெக்னாலஜி... இனி ஜாலியா படிக்கலாம்! #Holoportation

ஓடும் காரில் 3டி கேப்ரசிங் கேமராக்களைப் பொருத்தி, காரின் பின் சீட்டில் உங்களுக்கு அருகில் உங்கள் அமெரிக்க நண்பரை அமர வைத்து, பேசிக்கொண்டு போக முடியும். உலகம் சுருங்கலாம். ஆனால், இவ்வளவா?

பிள்ளைகளின் அமெரிக்கக் கனவுகளை நினைவாக்கி தன் பிள்ளைகளின் நினைவில் ஏங்கும் பெற்றோர்கள் இங்கே நிறைய பேர். இங்கிருந்த படியே தினமும் அரை மணி நேரம் மகனின் அமெரிக்க வீடுகளில் அமர்ந்து பேச முடியுமா; அங்கிருக்கும் தோட்டத்தில் பேரப் பிள்ளைகளோடு கொஞ்சி விளையாடத்தான் முடியுமா. இந்தக் கேள்விகளுக்கு ``முடியும்" என்று சொல்லும் தொழில்நுட்பம்தான் ஹோலோபோர்டேஷன். கல்வி, மருத்துவம் தொடங்கி பொழுதுபோக்கு வரை அனைத்துத் துறைகளையும் மாற்றி எழுத வரும் புது டெக்னாலஜி.

தொழில்நுட்பங்கள் நம்மைத் தினந்தோறும் வியப்புக்குள் அழைத்துச் செல்கின்றன. புறாவின் காலில் கடிதம் கட்டி செய்தி அனுப்பிய வரலாற்றில் தொடங்கி இன்று பிராட்பேண்டு மூலம் செய்திகளை உடனடியாக பிராட்காஸ்ட் செய்யும் அளவுக்குப் புரட்சிகள் வந்துவிட்டன. இப்படியாகத் தொழில்நுட்பம் பெருகி வரும் நிலையில் ``எழுத்துகளை மறந்து பென்சில் பேனாவுக்கு டாட்டா காட்டி, டிஜிட்டல் இந்தியாவுக்குள் என்ட்ரி கொடுக்கும் இன்றைய தலைமுறை அதிகம் விரும்புவது வீடியோ சாட்டிங்தான். அதற்கும் ஹலோ சொல்ல வருகிறது ஹோலோபோர்டேஷன் டெக்னாலஜி.

தொலைதூரத்தில் வாழும் நம் நண்பர்களையோ உறவுகளையோ பார்த்துப் பேச உதவியது 2டி தொழில்நுட்பம். ஆனால், அது அவர்களுடன் நேரில் பேசும் உணர்வை ஓரளவுக்கே தந்தது. அதுவே அவர்கள், 3டி ஆக நம்முன் தோன்றினால்?

ஒரு ஹாலிவுட் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தின் ஓப்பனிங் காட்சி போல இருக்கிறதா, ஆம். அதுவும் இனி நிஜத்தில் சாத்தியம்தான். இதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முயற்சி செய்ததன் விளைவு, 3டி கேப்சரிங் கருவி. இதன் மூலம் தூரத்தில் இருக்கும் இருவர் பக்கத்தில் உட்கார்ந்து உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். டில்லியில் இருக்கும் அரசியல் தலைவர் சென்னையில் இருக்கும் ஒரு தலைவரோடு பேச விமானம் பிடிக்கத் தேவையில்லை. இந்தத் தொழில்நுட்பத்தைப் பிடித்தாலே போதும்.

கல்வி முறையை மாற்றியமைக்கும் டெக்னாலஜி... இனி ஜாலியா படிக்கலாம்! #Holoportation

இதற்கு என்ன செய்ய வேண்டும்?


ஓர் அறையில் மைக்ரோசாஃப்ட் 3டி கேப்சரிங் கேமராக்களைப் பொருத்த வேண்டும். 2 கேமராக்கள் முதல் கிளாரிட்டிக்காக எத்தனை கேமராக்கள் வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளலாம். தெளிவான, யதார்த்தமான காட்சிகளைக் கணினி தொடர்ச்சியாகப் பதிவு செய்து முப்பரிமாண உருவங்களாக்கி, தகவல்களை கம்ப்ரஸ் செய்து எங்கே வேண்டுமோ அங்கு அனுப்புகிறது. 50 எம்.பி.பி.எஸ். இணைய வேகத்தில் ஒரு சில வினாடியில் நடக்கும் இந்த மாயாஜாலம் அறிவியலின் புதிய சாதனை. 

இந்தக் காட்சிகள் எங்கு விரிக்கப்பட வேண்டுமோ, அங்கே தலையில் மாட்டும் கண்ணாடி போன்ற ஹோலோலென்ஸ் ஒன்றைப் பயன் படுத்திப் பார்த்துக்கொள்ளலாம். 3டி கேமராவில் பிடிக்கப்படும் காட்சிகள் தொலைதூரத்தில் இருக்கும் நபர் பயன்படுத்தும் ஹோலோ லென்ஸ் வழியாகக் கொஞ்சம் கூடத் துல்லியம் சிதையாமல் முன்னால் வந்து நிற்கும். நாசா விஞ்ஞானியை மேடையில் பல பார்வையாளர்களுக்கு முன்பு வரவழைத்துப்  பேச வைத்து இந்தத் தொழில்நுட்பத்தை முதன் முதலில் விளக்கியது. இத்தொழில்நுட்பம் மூலம் கோள்கள் குறித்து மிகத் துல்லியமான தகவல்களைப் பெற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வித் துறையிலும் ஹோலோகிராபி பெரும் புரட்சியை ஏற்படுத்தவிருக்கிறது. ஒளி, ஒலி காட்சியாக 2டி ஸ்மார்ட் கிளாஸ், ஆசிரியர்களை விட இது ஸ்மார்ட்டாகப் பாடம் நடத்தும். கல்வித் துறையில் அடுத்த வெர்ஷன் ஹோலோகிராபி கல்விமுறைதான். 3டி காணொலியைப் பயன்படுத்தி, இருக்கும் இடத்திலிருந்து கொண்டே, உலகின் தலை சிறந்த ஆசிரியரிடம், பாடம் படிக்கலாம். ஒரு செல்லை வைத்துக்கொண்டு இருக்கும் இடத்தையே வகுப்பறையாக மாற்றி விடலாம்.

மொபைல் வீடியோ பார்த்து உணவு உண்ணும் குழந்தைகளுக்கு விளையாட்டாக ஏ.பி.சி.டி. கற்றுக்கொடுக்கலாம். சாக் பீஸுக்கும், கரும்பலகைக்கும் ஓய்வு கொடுத்து ஹோலோலென்ஸ் கல்விமுறை, ஒரு மொபைல் ஆப் மூலம் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தலாம். டவுட் என்றால் ஆசிரியர்களிடம் தயங்கித் தயங்கி நிற்க வேண்டாம். பாடம் புரியவில்லையா மொபைல் ஆப்-ஐ ஒரு க்ளிக் செய்தால் போதும். 

ஹொலோலென்ஸின் வரவு மருத்துவ துறையில் ஒரு மெடிக்கல் மிராக்கிள். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் 3டி தொழில்நுட்பம் மூலம் மனித உடலைப் பற்றி முழுவதுமாய் கண்களால் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். முப்பரிமாண தோற்றத்தில் தோன்றும் மனித உடலைத் தொட்டு அறுத்து ஆராய்ச்சி செய்து மாணவர்கள் கற்றுக்கொள்ள பர்மிஷன் கொடுக்கும் இந்த டெக்னாலஜி தான் ஹோலோபோர்டேஷனின் ஹைலைட். அறுவை சிகிச்சையின் போதும் மனித உடலைக் கண்காணிப்பில் வைக்கவும் ஹோலோபோர்டேஷன் பயன்படுகிறது.

தூரத்தில் இருக்கும் இசை ஜாம்பவான்களிடம் இசை கற்க வேண்டுமா? அவர்களை இந்தத் தொழில்நுட்பம் மூலம் அழைத்து 3டி கேப்ரசிங் கேமராக்களில் வருகின்ற காட்சிகளை மினியேச்சராக மாற்றி அவர்களை ஸ்டூலில் அமர வைத்து பியானோ வாசிக்கச் சொல்லி இசை கற்றுக்கொள்ளலாம். இதயத் துடிப்பு முதல் இசை வரை கற்று கொடுக்கும் இந்தத் தொழில்நுட்பம் கல்வி முறையில் ஒரு கலர்ஃபுல் சேஞ்ச்.

உலகில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் ஹோலோகிராபியைப் பாடமாக அறிமுகப்படுத்தி விட்டன. அரிசோனா பல்கலைக்கழகத்தில் ஹோலோகிராபி இமேஜிங் என்றும் ஹோலோகிராபி அண்ட் டிபராக்டிவ் ஆப்டிக்ஸ் என்றும் பாடப்பிரிவுகள் எதிர்கால தொழில்நுட்பமான ஹோலோகிராபி அவசியம் பற்றி பேசுகின்றன. இங்கும் 5 வருடத்திற்கு முன் இருந்த இன்ஜினியரிங் நிலையை இன்னும் சில நாட்களில் ஹோலோகிராபி பிடித்தாலும் பிடிக்கும்.

ஓடும் காரில் 3டி கேப்ரசிங் கேமராக்களை பொருத்தி, காரின் பின் சீட்டில் உங்களுக்கு அருகில் உங்கள் அமெரிக்க நண்பரை அமர வைத்து,  பேசிக் கொண்டு போக முடியும். உலகம் சுருங்கலாம். ஆனால், இவ்வளவா?

அடுத்த கட்டுரைக்கு