Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - உலகநாயகினு நெனப்பா?

அனுஷா... ஆதிரா... இனியா! - உலகநாயகினு நெனப்பா?
பிரீமியம் ஸ்டோரி
News
அனுஷா... ஆதிரா... இனியா! - உலகநாயகினு நெனப்பா?

டிஜிட்டல் கச்சேரி

``மழை வரும்போதெல்லாம் உன் ஞாபகம் வருதே...

உன் ஞாபகம் வரும்போதெல்லாம் மழையும் வருதே!

மழையில் நனைவதால்

அனுஷா... ஆதிரா... இனியா! - உலகநாயகினு நெனப்பா?

ஜீவன் துளிர்க்குதா?

இல்லை, நம் ஜீவன் துளிர்க்கவே

மழை வந்து நனைக்குதா?’’

``இனியா குட்டி என்ன பண்றீங்க?’’

``ட்வீட் போடப் போறேன்...’’

``மனசுக்குள்ள உலகநாயகினு நெனப்பா?’’

``ஏன், எதுக்கு இப்படி ஒரு டவுட்டு?’’

``இல்லை... எனக்கெல்லாம் கமல் போடுற ட்வீட்ஸ்தான் புரியாது... இப்ப நீ எழுதுறதும்!’’

``புரியாதோர்க்கு புரியா பல செய்திகளைப் புரியவைக்க இயலா நேரத்தில்... புரியாமல் போவது குறித்தெல்லாம் புரிந்தே கடந்து செல்க...’’

``ஏம்மா... ஏன்?’’

``இன்னிக்கு ஒரு முடிவோடதான் இருக்கே போல!’’

``ரெண்டும் பேரும் இன்சல்ட் பண்றீங்க... இதெல்லாம் நல்லதில்லை மக்களே!’’

``நீ ஒரு காமெடி பீஸுன்னு ஒப்புக்கோ இனியா!’’

``நீங்க கொஞ்சம் ஷட்டப் பண்ணுங்க.’’

``நாங்க ஷட்டப் பண்ணிக்குறோம். நேத்து எதையோ வீடு முழுக்க உருட்டிப் போட்டு தேடிட்டு இருந்தியே... உண்மையைச் சொல்லு, உன் பாய் ஃப்ரெண்ட் கொடுத்தது எதையாவது தொலைச்சுட்டியா?’’

``ம்க்கும்... அவனை என் பர்த்டேவுக்குக்கூட மீட் பண்ணலை. இதுல சும்மா கலாய்க்காதீங்க. என்னோட ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸைக் காணோம். அதான் தேடிட்டு இருந்தேன்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அனுஷா... ஆதிரா... இனியா! - உலகநாயகினு நெனப்பா?

``என்னடா கொஞ்ச நாளா வண்டியை எடுக்காம பஸ்ல வர்றியேன்னு பார்த்தேன். இதான் விஷயமா?’’

``ஆமாம்... அதைவிடுங்க. ஆதிராவோட கண்ணு ஏன் லைட்டா வீங்கி இருக்கு?’’

``நைட் முழுக்க முழிச்சு...’’

``நைட் முழுக்க கண்ணு முழிச்சு... அந்த விளையாட்டைத்தான் விளையாடினியா பொண்ணே?’’

``அய்யய்யோ... அந்தப் பாழாப்போன விளையாட்டை விளையாடுற அளவுக்கு நான் என்ன லூஸா?’’

``போன வாரம்தான் இதைப்பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். கடைசியில அங்க சுத்தி, இங்க சுத்தி தமிழ்நாட்லயும் எட்டிப் பார்த்துருச்சு.’’

``கிட்ஸ் யாராச்சும் மொபைல்போன் யூஸ் பண்ணாங்கன்னா... பேரன்ட்ஸ் அவங்களைக் கண்காணிக்கணும்.’’

``அனு, நாம் ஏன் இதைப் பத்தி ஒரு அவேர்னஸ் புரோகிராம் நடத்தக் கூடாது..?’’

``கண்டிப்பா நடத்தலாம். சிறியவங்க முதல் பெரியவங்க வரை எல்லாருமே மன அழுத்தத்துல இருக்காங்க. நாலு பேர்கிட்ட பேசித் தீர்த்துக்க முடியாத பிரச்னைகள் இருக்குறதாலதான் இப்படி டெக்னாலஜியை தப்பா யூஸ் பண்றாங்க.’’

``உண்மைதான் அனு. மன அழுத்தத்தில் இருந்து எப்படி விடுபடலாம்னு வழிகாட்டுற நிறைய கேட்ஜெட்ஸ் மார்க்கெட்ல இருக்கு. ஆனா, அதையெல்லாம் தெரிஞ்சுக்காம வெறும் நெகட்டிவ் விஷயங்கள்ல மட்டும் கவனம் செலுத்துறது மனசுக்கு வருத்தமா இருக்கு!’’

``கூல் கேர்ள்ஸ்... உங்ககிட்ட ஒரு குட் நியூஸ் சொல்ல மறந்துட்டேன்...’’

``குட் நியூஸா... என்ன என்ன?’’

``பெரியம்மா பொண்ணுக்குப் போன வாரம் குட்டி ஏஞ்சல் பொறந்திருக்கா!’’

``வாவ்... சூப்பர்!’’

``அவளுக்கு என்ன பெயர் வைக்கலாம்னு சொல்லுங்க.’’

``ஆகஸ்ட்டுல பொறந்த குழந்தைக்கு `ஆகஸ்ட்’னு பேர் வைக்கலாம்ல...’’

``மணிக்கொரு தரம் நீ ஒரு லூஸுன்னு நிரூபிக்காத இனியா!’’

``அடியேய்... ஃபேஸ்புக் நாயகன் மார்க்குக்கு ஆகஸ்ட் மாசம் 28-ம் தேதி பெண் குழந்தை பிறந்திருக்கு. அவளுக்கு அவர் ‘ஆகஸ்ட்’னுதான் பேரு வெச்சிருக்காரு.’’

```காதுல பூ சுத்தாத கண்ணு!’’

``நம்பு செல்லம். அந்தப் பேரு நமக்கெல்லாம் வெறும் மாசம்தான். ஆனா, அமெரிக்காவுல அந்தப் பேருக்குப் பின்னால ஸ்மால் ஹிஸ்டரி இருக்காம்.’’

``சரி, ஏதோ கருத்தா பேசுற மாதிரிதான் தெரியுது. இருந்தாலும் தமிழ்ப் பெயர் சொல்லுங்க. அக்காவுக்கு வாட்ஸ்அப் பண்ணணும்.’’

``எனக்குத் தெரிஞ்சு உலகத்திலேயே... இந்த ஒரு பேருதான் நல்ல பேருனு நினைக்கிறேன்.’’

``என்ன பேரு?’’

``இனியா.’’

``அனு, என்னால முடியலை... அவளை இப்ப சேர்ந்து அடிக்கலாம் வா!’’ 
 
``மீ... எஸ்கேப்!’’

- கச்சேரி களைகட்டும்...

அனுஷா... ஆதிரா... இனியா! - உலகநாயகினு நெனப்பா?

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது, இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - உலகநாயகினு நெனப்பா?

மார்க் ஜுக்கர்பெர்க் குழந்தையின் பெயருக்குப் பின்னால் இவ்வளவு பெரிய ஆராய்ச்சியா?

http://bit.ly/2eJA6i3

அனுஷா... ஆதிரா... இனியா! - உலகநாயகினு நெனப்பா?

மனஅழுத்தத்தில் இருந்து உங்களைக் காப்பாற்றும் 8 கேட்ஜெட்ஸ்!

http://bit.ly/2gtZVXe