Published:Updated:

``வாழ்க்கைல எப்பவும் ஹேப்பியா இருக்கிறது.... ஈஸி... ஆனா, கஷ்டம்!’’ பிரேம்ஜி #LetsRelieveStress

``வாழ்க்கைல எப்பவும் ஹேப்பியா இருக்கிறது.... ஈஸி... ஆனா, கஷ்டம்!’’ பிரேம்ஜி #LetsRelieveStress
``வாழ்க்கைல எப்பவும் ஹேப்பியா இருக்கிறது.... ஈஸி... ஆனா, கஷ்டம்!’’ பிரேம்ஜி #LetsRelieveStress

``வாழ்க்கைல எப்பவும் ஹேப்பியா இருக்கிறது.... ஈஸி... ஆனா, கஷ்டம்!’’ பிரேம்ஜி #LetsRelieveStress

டிப்பு, இசை, ஆன்மிகம், ஜாலி பார்ட்டி என விழித்துக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம் துருதுருவென எதையாவது செய்துகொண்டிருக்கும் ரங்கோலி இளைஞர் நடிகர் பிரேம்ஜி. அவரிடம், ``டென்ஷனே இல்லாம எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கீங்களே, எப்படி?" என்று கேட்டோம்.  

``நான் எந்த விஷயத்துக்கும் பெருசா டென்ஷனாக மாட்டேன். ஏன்னா நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை, அதான் காரணம். ஆனா, டெய்லி யாராவது ஒருத்தர் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலைனு கேட்கறாங்க. அதுதான் எனக்கு செம டென்ஷனாவுது. 

மேல்நாட்டு அறிஞர் ஒருத்தர் ஒரு பொன்மொழி சொல்லியிருக்கார்... `கல்யாணத்தைப் பொறுத்தவரை அதைப் பண்ணிக்கிட்டவங்க, எப்படா அதுலேருந்து வெளியே வருவோம்னு நினைக்கிறாங்க. கல்யாணமாகாதவங்க அதுக்கு உள்ள எப்போ போவோம்னு நினைக்கிறாங்க'! இதைத்தான் நான் அடிக்கடி நினைச்சுக்குவேன். 

வாழ்க்கையைப் பத்தி எந்தவித எதிர்பார்ப்பும் எனக்குக் கிடையாது. ராயப்பேட்டை கேம்பிரிட்ஜ் ஸ்கூல்லதான் படிச்சேன். படிக்கிற காலத்துலயே நான் ஆவரேஜ் ஸ்டூடன்ட்தான். அப்போ டென்த், ப்ளஸ் - டூ எக்ஸாம் சமயத்துல கொஞ்சம்போல டென்ஷன் வரும் அதுக்கப்புறம் அது தன்னால போயிடும். ப்ளஸ் டூ கூட நான் ஃபெயில்தான். எந்த டென்ஷனும் ஆகலை. அரியர்ஸகூட திரும்ப நான் எழுதலை. 

அதற்கு அப்புறம் நான் ஒரு பொண்ணைத் துரத்தி துரத்தி லவ் பண்ணினேன். அந்தப் பொண்ணைத்தான் மேரேஜ் பண்ணிக்கணும்னு நினைச்சேன். அப்புறம் செட்டாகாமப் போயிடுச்சு. இந்த ரெண்டு விஷயமும்கூட பெருசா எனக்கு டென்ஷனையோ ஸ்ட்ரெஸ்ஸையோ கொடுக்கலை. `லைஃப் ஈஸ் லைக் தட்' னு போயிக்கிட்டே இருப்பேன்.

பொதுவா, டே டு டே லைஃப்ல டென்ஷன் எப்போ வரும்னு பார்த்தா, 7 மணி ஃப்ளைட்டுக்கு 5 மணிக்குப் புறப்பட்டிருப்போம். வழியில ஒரே மழை. டிராஃபிக் ஜாம்ல மாட்டிக்கிடும்போதுதான் பயங்கர டென்ஷனாகும். எனக்குத் தேவையான, நான் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல பாதிப்புன்னா எனக்கு டென்ஷன் வராது. என்னால மத்தவங்களுக்குப் பாதிப்பு வருதுன்னா மட்டும்தான் டென்ஷனாவேன்.  

என்  மனசுக்கு என்ன பிடிக்குதோ அதை மட்டும்தான் செய்வேன். என்னைப் பொறுத்தவரை இரவு பகல் கிடையாது. நேரம் கிடையாது நாள்காட்டி கிடையாது. 

எப்போ தூக்கம் வருதோ அப்போதான் தூங்குவேன். எப்போ பசிக்குதோ அப்போதான் சாப்பிடுவேன். எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிச்சிக்க மாட்டேன். இப்போ நீங்க எங்கிட்ட மதியம் 3 மணிக்குப் பேசுறீங்க. காலையில படுத்தவன் இப்போதான் எந்திரிச்சேன். 

வெளிநாட்டுப் படங்கள் அதிகம் பார்ப்பேன். இசையில ஆர்வம் ஜாஸ்தி. புத்தகம் அதிகம் படிக்க மாட்டேன். ஆடியோவா நல்ல பல கருத்துகளைக்கேட்பேன். ஃபேஸ்புக், ட்விட்டர்ல ரொம்ப ஆர்வமா இருப்பேன். அப்புறம், சென்னை - 28 டீம்  ஃப்ரெண்ட்ஸ்ங்க எல்லாருமே இன்னமும் ரெகுலரா சந்திச்சுப் பேசிக்கிட்டுதான் இருக்கோம். அடிக்கடி பார்ட்டி பண்ணுவோம். அதுல ரிலாக்ஸாயிடுவேன்.  நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கிற மாதிரியான ஸ்ட்ரெஸ் ரிலீஃப் வேற என்ன இருக்கபோவுது? 

ஆன்மிகத்துல ஈடுபாடு ரொம்ப ஜாஸ்தி. அடிக்கடி திருவண்ணாமலை, மதுரைனு கிளம்பிப் போயிடுவேன். போனவாரம் கூட அண்ணன் குழந்தைக்கு மொட்டை போட மதுரைக்குப் போயிட்டு வந்தேன். அப்புறம் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவைத் தெரிஞ்சிக்க விரும்புவேன். அதுக்கான தேடல் மட்டும்தான் என்கிட்ட ரொம்ப இருக்கு. 

ஜோதிடம், கிரகங்கள் பத்தியும் அதிகமா தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கேன். அது தொடர்பான `யூ டியூப் லிங்க்'ஸைப் பார்ப்பேன். வாழ்க்கையைப் போரடிக்காம வெச்சிக்கிறதுலதான் நம்ம ஹேப்பினெஸ்ஸே  இருக்கு'' என்று சொல்லிச் சிரிக்கிறார் நடிகர் பிரேம்ஜி. 

அடுத்த கட்டுரைக்கு