Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - உங்களுக்குப் பொறாமை கேர்ள்ஸ்!

அனுஷா... ஆதிரா... இனியா! - உங்களுக்குப் பொறாமை கேர்ள்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷா... ஆதிரா... இனியா! - உங்களுக்குப் பொறாமை கேர்ள்ஸ்!

டிஜிட்டல் கச்சேரி

அனுஷா... ஆதிரா... இனியா! - உங்களுக்குப் பொறாமை கேர்ள்ஸ்!

டிஜிட்டல் கச்சேரி

Published:Updated:
அனுஷா... ஆதிரா... இனியா! - உங்களுக்குப் பொறாமை கேர்ள்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷா... ஆதிரா... இனியா! - உங்களுக்குப் பொறாமை கேர்ள்ஸ்!

``அய்யோ, காதுல கூடை... பயமாயிருக்கு இனியா!’’

``ஜிமிக்கி கம்மல்... ஜிமிக்கி கம்மல்.’’

``இனியா, நீ மலையாளக் கரையோரம் ஒதுங்கினதுகூட தப்பில்ல. ஆனா, இப்படி ஜிமிக்கியைக் கூடை சைஸுக்கு காதுல மாட்டிக்கிட்டு, பாட்டுப் பாடி டான்ஸ் ஆடாதே... பயமா இருக்கு!’’

``ஏய், ஃபேஸ்புக்ல கல்பனா அக்கா `ஜிமிக்கி கம்மல்’ பாட்டுக்கு சிட்டிங் பொசிஷன்ல டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்களே... அந்த வீடியோவைப் பார்த்தியா?’’

அனுஷா... ஆதிரா... இனியா! - உங்களுக்குப் பொறாமை கேர்ள்ஸ்!

``பார்த்தேன்... பார்த்தேன். உன்னோட கம்மலைவிட கல்பனா கம்மலே தேவலை. ஒரு படத்துல கவுண்டமணி ரெண்டு காதுலயும் வாழைப்பூவைச் செருகிட்டு காமெடி பண்ணுவாரே... அந்த மாதிரி இருக்கு. நீயும் உன் கம்மலும்!’’

``இப்ப அதான் உங்க பிரச்னையா? கேரளா பெண்கள் ஓணம் பண்டிகைக்கு `ஜிமிக்கி கம்மல்’ங்கிற மலையாளப் பாட்டுக்கு டான்ஸ் ஆடி வைரல் ஆக்கியிருக்காங்க. அந்தப் பாட்டுல ஆடின ஷெரில்ங்கிற ஒரு பொண்ணுக்கு நம்ம பசங்க தீவிர ரசிகராகிட்டு வர்றானுங்க. இதெல்லாம் பாக்குறப்ப லைட்டா `பொசசிவ்னஸ்’ வருதுல்ல...’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுஷா... ஆதிரா... இனியா! - உங்களுக்குப் பொறாமை கேர்ள்ஸ்!

``ஏய், லூஸுப் பொண்ணே... நம்ம பசங்க யார்னு நமக்குத் தெரியாதா என்ன? நேத்து வரைக்கும் `ஓவியா... ஓவியா’ன்னு இருந்தாங்க. இன்னிக்கு `ஷெரில்... ஷெரில்’னு நம்மைக் கலாய்ச்சுட்டு இருக்காங்க. நாளைக்கு `இனியா... இனியா’னுகூட சொல்லிட்டு, `இனியா ஆர்மி’யை ரெடி பண்ண மாட்டாங்களா என்ன?’’

``ம்ம்ம்... இதுக்குப் பேருதான் பகல் கனவு இனியா!’’

``உங்களுக்குப் பொறாமை கேர்ள்ஸ்!’’

``அன்னபெல்லி-கிரியேஷன் படம் பார்க்கணும்னு சொன்னியே... பார்த்துட்டியா இனியா?’’

``இல்ல ஆதிரா. அதுல அப்படி என்ன ஸ்பெஷல்..?’’

``பேய்ப்படமே ஸ்பெஷல்தானே... அதுவும் இது இங்கிலீஷ் பேய்... படம் முழுக்க அந்தப் பேய் படுத்துற பாட்டுக்குச் சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிச்சுப்போச்சு!’’

``பேய்ப்படத்துக்குப் போய் யாராச்சும் சிரிப்பாங்களா?’’

``சில நேரங்கள்ல `எவ்ளோ அடிச்சாலும் வலிக்கலையே’னு சொல்வோம்ல... அந்த மாதிரிதான். படத்துல பயமுறுத்த அதிரிபுதிரி சீன்ஸ் வரும்போதெல்லாம் பயத்தைக் காட்டிக்கக் கூடாதுனு `கெக்கபெக்கே’னு சிரிச்சு வெச்சோம்.’’

``ஹாஹாஹா... அப்படின்னா, நான் இப்பவே அந்தப் படத்தைப் பார்க்கப் போறேன்!’’

``அதுக்கு நீ தியேட்டருக்குப் போகணும்னு அவசியமில்லை...’’

``பின்னே?’’

``கண்ணாடியைப் பாரு இனியா!’’

``உன்ன்ன்ன்ன்னை...’’

``ஹாஹாஹா... அச்சு அசலா பேயே நீதான்!’’

``இன்னிக்கு நான் சேலை கட்டிக்கிட்டு, காதுல கம்மல் மாட்டிக்கிட்டு, தத்தித் தத்தி எவ்ளோ மெதுவா நடந்து வர்றேன்... இந்த அப்பாவிப் பொண்ணை ஏன் கிண்டல் பண்றீங்க?’’

``அய்யோ அப்பாவிப் பொண்ணே... சேலையில தத்தித் தத்தி நடக்கிறது சூப்பர் இல்ல. சேலை கட்டிக்கிட்டு மாரத்தான்ல ஓடுறதுதான் சூப்பரோ சூப்பர்!’’

``ஆமாம். ஜெயந்தினு ஒரு லேடி சேலை கட்டிக்கிட்டி மாரத்தான்ல ஓடி எல்லோரோட கவனத்தையும் ஈர்த்திருக்காங்க. முடிஞ்சா அந்த மாதிரி அட்வெஞ்சர் பண்ணி புரூஃப் பண்ணு பார்ப்போம்!’’

``ஙே... ஆமா, ஆப்பிள் போன் வாங்கலாம்னு யோசிக்கிறேன். நீ என்ன நினைக்கிறே அனு..?’’

``ஹலோ... டாபிக் மாத்திட்டு எஸ்கேப் ஆக ஐடியாவா?’’

``ஆப்பிள் கம்பெனில `ஆப்பிள் வாட்ச்’ முதல் `ஐபோன் X’ வரை புதுசுப் புதுசா நிறைய மாடல்களை மார்க்கெட்ல விட்டிருக்காங்க. ரேட்டுகூட கிட்டத்தட்ட ஒரு லட்சம்தானாம். இப்பவே வாங்கிட்டா காலேஜ்ல கெத்து காட்டலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க..?’’

``ஆதிரா... இந்த இனியா என்கிட்ட நேத்து கடலை மிட்டாய் வாங்க பத்து ரூபாய் கடன் வாங்கியிருந்தா. எப்ப திருப்பித் தருவானு கேட்டுச் சொல்லு!’’

``ஈ ஈ ஈ ஈ ஈ ஈ...’’

- கச்சேரி களைகட்டும்...

அனுஷா... ஆதிரா... இனியா! - உங்களுக்குப் பொறாமை கேர்ள்ஸ்!

அசத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது, இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - உங்களுக்குப் பொறாமை கேர்ள்ஸ்!

தமிழ் சினிமாவில் நடிக்கத் தயார்!’ - ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷெரில் கலகல பேட்டி

http://bit.ly/2yaGyqt

அனுஷா... ஆதிரா... இனியா! - உங்களுக்குப் பொறாமை கேர்ள்ஸ்!

“சேலை கட்டிக்கொண்டு 100 கி.மீ பயிற்சி செய்தேன்!” - மாரத்தானில் சாதித்த 

http://bit.ly/2x6om2S

அனுஷா... ஆதிரா... இனியா! - உங்களுக்குப் பொறாமை கேர்ள்ஸ்!

ஆப்பிள் வாட்ச் முதல் ஐபோன் X வரை...

http://bit.ly/2x5QS4I

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism