Published:Updated:

காந்தி கார் மதுரைக்கு வந்துச்சே, பார்த்தீங்களா..? வின்டேஜ் கார் ஷோ

ஷோவுக்கு வந்திருந்த கார்கள்லயே 1935 மோரிஸ் மேக்தான் ரொம்ப பழசு. பழசா இருந்தாலும் இந்தக் கார் 10 கிலோ கோல்டைவிட விலை அதிகம்!

காந்தி கார் மதுரைக்கு வந்துச்சே, பார்த்தீங்களா..? வின்டேஜ் கார் ஷோ
காந்தி கார் மதுரைக்கு வந்துச்சே, பார்த்தீங்களா..? வின்டேஜ் கார் ஷோ

`வி.ஐ.பி' படத்துல தனுஷ் அந்தச் சின்ன மோஃபாவுல போகும்போது, `ஆடி’ கார்ல போறவங்ககூட `ஆ’ன்னு வாய் பிளந்துப் பார்ப்பாங்க. கூகுள்ல குட்டிக்கரணம் போட்டு தேடியிருந்தாலும் அந்த மாதிரியான மாடல்களைக் கடையிலயோ, நேர்லயோ பார்க்க முடியாது. ஆனா, மதுரை ஃபார்ச்சூன் பாண்டியன் ஹோட்டல்ல நடந்த, `வின்டேஜ் கார் அண்ட் பைக் ஷோ'வுக்குப் போயிருந்தா நிச்சயமா பார்த்திருப்பீங்க! கிட்டத்தட்ட 30 கார்கள், 22 பைக்குகள் உறுமிக்கிட்டு வந்து நமக்கு சர்ப்ரைஸ் கொடுக்கக் காத்திட்டிருந்தன. ஒரு ரவுண்டு பார்த்துட்டு வந்தோம்.

ராயல் என்ஃபீல்டு பைக்கோட வெறித்தனமான லவ்வர்களுக்கு, பெரிய விஷூவல் ட்ரீட் வெச்சிருந்தாங்க. 1947-ல ஆரம்பிச்சு 1981 வரைக்கும் இருக்கிற எல்லா ராயல் என்ஃபீல்டு பைக்குகளும் வரிசைக்கட்டி நின்னுட்டு வெல்கம் பண்ணிட்டிருக்க, கொஞ்சம் தள்ளிப்போனா மகாத்மா காந்தி படம் இருந்தது. காந்தியைத் தெரியும்... அவரோட கார் உங்களுக்குத் தெரியுமா? 1937-ல வந்த `மோரிஸ் 8 டூரர்’ (Morris 8 tourer) தான் காந்தியோட காராம்! இப்போ அது, தமிழ்ப்புலவர் நாவலூர் சோமசுந்தர பாரதியார் குடும்பத்துல இருக்கு. 1942-ல காந்தி இந்தக் கார்லதான் மதுரையைச் சுற்றினாராம்.

``இது... அதுல..?” எனச் சில வாய்ஸ். என்னதுனு பார்த்தா, சூப்பர் ஹிட் இந்திப் படமான `பாபி’ ஃபேமஸ், `ராஜ்டூத் ஜி.டி.எஸ் மாடல் (Rajdoot GTS Model)' நின்னுட்டு இருந்தது. அந்தப் படத்தைப் பார்த்த யாருமே இந்தப் பைக்கை அவ்ளோ சீக்கிரம் மறந்திருக்க மாட்டாங்க. இப்போ ராஜ்டூத் ஜி.எஸ்.டி-னு சொன்னா தெரியுறதைவிட `பாபி' பைக்னாதான் நிறைய பேருக்குத் தெரியுது.

ஷோவுக்கு வந்திருந்த கார்கள்லயே 1935 மோரிஸ் மேக்தான் ரொம்ப பழசு. ஓல்டா இருந்தாலும் இந்தக் கார் 10 கிலோ கோல்டைவிட விலை அதிகம்! மோரிஸ் கார் இப்பவும் ஓடிட்டுதான் இருக்கு. `ஒரு வீக்கெண்ட் ப்ளான் போடலாம்! ஆர் யூ ரெடி!' எனக் கேட்டுவிட்டு வந்தோம்.

`வேர்ல்டு வார்ல, குண்டு போட்டாங்க... சண்டை போட்டாங்க'னு எல்லாருக்கும் தெரியும். வேர்ல்டு வார்-2ல யூஸ் பண்ணின பைக்ஸ் நம்ம எத்தனை பேருக்குத் தெரியும்? வேர்ல்டு வார்ல யூஸ்பண்ணின 1942 BSA, 1944 ராயல் என்ஃபீல்டு, 1945 மேட்ச்லஸ், 1953 A.J.S பைக்குகளும் இங்க அட்டெண்டன்ஸ் போட்டிருந்தன. வரலாறு முக்கியம் பாஸ்!

ஷோவுக்கு வந்த கார்-பைக்குகளைப் பற்றிச் சொல்லிட்டே போகலாம். ``இப்படி ஒரு ஷோ பண்ண, உங்களுக்கு எப்படி ஐடியா வந்தது''னு மதுரை பாண்டியன் ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் டாக்டர் வாசுதேவன்கிட்ட கேட்டோம்.

``நாங்க 1914 பென்ஸ் 8/20 ரன்அபௌட் டூரர் காரை மீட்கப் போனப்போதான் இந்த ஐடியாவே வந்துச்சு. அந்தக் கார்தான் இப்போ இந்தியாவோட ஓல்டெஸ்ட் பென்ஸ். இந்த ஷோ, நாங்க முதல் தடவை பண்றப்போ, 10 காரும் 5 பைக்கும்தான் இருந்துச்சு. இப்போ 30 காரும்  20-க்கு அதிகமான பைக்கும் வந்திருக்கு. அந்த அளவுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்குது. ஒவ்வொரு வாகனத்துக்கும் தனி வரலாறு இருக்கு. அந்த வரலாறை மறக்காம மக்கள்கிட்ட கொண்டுபோறதுதான் எங்கள் நோக்கம்!”னு பேச்சை முடித்தார்.

ஆனா, ``கார் ஓனருக்கு இதுல என்ன லாபம்? வின்டேஜ் கார் மெயின்டனன்ஸ் கஷ்டமாச்சே...”னு கேட்டு முடிப்பதற்கு முன்பே அதுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார் கார் கலெக்டர் தியாகராஜன்.

``மெயின்டனன்ஸ் நிச்சயமா கஷ்டம்தான். மெக்கானிக்ஸ்கூட சீக்கிரத்துல கிடைக்க மாட்டாங்க. பெயின்டர்கூட இப்போ குறைஞ்சிட்டாங்க. ஆனா, வெளிய ஓட்டிட்டுப் போறப்போ திரும்பிப் பார்க்காத முகங்களே கிடையாது. மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருக்கு. ஹேப்பிதான்!” - சிம்பிளாகச் சொல்லி முடித்தார்.

மதுரை மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!