Published:Updated:

கடவுளின் தேசத்தை மனிதத்தால் மீட்க 13 எளிய வழிகள்!

கடவுளின் தேசத்தை மனிதத்தால் மீட்க 13 எளிய வழிகள்!
கடவுளின் தேசத்தை மனிதத்தால் மீட்க 13 எளிய வழிகள்!

இதுவரை சந்தித்திடாத பெருந்துயரைச் சந்தித்திருக்கிறது கேரளம். மழை கொண்டுவந்த துன்பத்தை எல்லாம் மனிதம்கொண்டு துடைத்தெறிகிறார்கள் மக்கள். இளைஞர்கள், உணவுப் பொட்டலங்களையும் உடைகளையும் எடுத்துக்கொண்டு கேரளா விரைகிறார்கள். கேரள மீனவர்கள், தங்கள் உயிரைத் துச்சமாக்கி மற்றவர்களை மீட்கிறார்கள். பிஞ்சு குழந்தைகள்கூட தங்கள் உண்டியல் சேமிப்பை அள்ளித் தருகிறார்கள். பல திசைகளிலிருந்தும் குவியும் உதவிகளை எல்லாம் சரியான முறையில் கொண்டுசேர்க்க, தீவிர முயற்சி மேற்கொள்கிறார்கள் கேரள அரசுத் தரப்பினர். பலரும், தங்கள் உதவியை எப்படிக் கேரள மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்கான தெளிவான வழியைத் தேடுகிறார்கள். கேரள மக்களுக்கு உதவி செய்வதற்கு சாத்தியமான 13 வழிமுறைகள் இதோ:

1) கேரள முதலமைச்சரின் பேரிடர் மீட்பு நிவாரண நிதிக்கு நேரடியாகப் பணம் அனுப்புதல்: 

கேரள முதலமைச்சரின் பேரிடர் மீட்பு நிவாரண நிதியின் அதிகாரபூர்வ இணையதளம் - இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் செலுத்த விரும்பும் தொகையை பணமாகவோ காசோலையாகவோ (Cheque), வரவோலையாகவோ (D.D) கொடுக்கலாம் அல்லது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமும் கொடுக்கலாம். வரவோலை அல்லது காசோலையை நேரடியாக அனுப்ப விரும்புவோர்...

The Principal Secretary (Finance) Treasurer,

Chief Minister’s Distress Relief Fund,

Secretariat, Thiruvananthapuram – 1. 

ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்காண தகவல்:

Account number: 67319948232
Bank: State Bank of India
Branch: City branch, Thiruvananthapuram.
IFS Code: SBIN0070028
PAN: AAAGD0584M
Name of Donee: CMDRF 

2) `Rapid Response' அமைப்பின் வழியே 20 மருத்துவ முகாம்கள் மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கும் குழுவின் மூலம் உதவுதல்.

பேரிடர் காலங்களில் நேரடியாகக் களமிறங்கி உதவும் அமைப்பு  `Rapid Response'. இந்திய அளவில் இதுவரை பல்வேறு உதவிகளை மேற்கொண்டுள்ளது அந்த அமைப்பு. தற்போது கேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களில் 20 மருத்துவக் குழுக்கள் இந்த அமைப்பின்மூலம் செயல்படுகிறார்கள். மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள இடங்கள் பலவற்றில் 40,000 உணவுப்பொட்டலங்கள், 8,000 பால் மற்றும் பிஸ்கட் அடங்கிய பைகள் ஆகியவற்றை வழங்கிவருகிறார்கள்.

இந்த அமைப்பின் மூலம் உதவி செய்ய விரும்புவோர், இங்கே க்ளிக் செய்யவும். 

3) மக்களுக்கு அடிப்படைத் தேவையான பொருள்களை எர்ணாகுளம், கண்ணூர் மற்றும் இடுக்கி அரசு அலுவலர்களுக்கு அனுப்பி உதவுதல்:

எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் `அன்போடு கொச்சி' என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஒரு முன்னெடுப்பை நடத்திவருகிறது. #DoForKerala

கண்ணூர் மாவட்ட ஆட்சியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் பொருள்களை அனுப்பவேண்டிய முகவரியைப் பதிவிட்டுள்ளார். Control Room, Collectorate, Kannur – 670002, Phone no. 9446682300, 04972700645.

இடுக்கியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர், District Collector Idukki, Idukki Collectorate, Painavu PO, Kuyilimala, Idukki – 685603. இந்த முகவரிக்குத் தங்கள் பொருள்களை அனுப்பலாம். 

4) `GOONJ' முன்னெடுப்பின் மூலம் உதவுதல்:

களத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து GOONJ முன்னெடுப்பு மூலம் நிதி உதவி அளிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

5) அமேசான் இந்தியாவின் உணவுத் தேவைக்காகப் பங்களிப்பு செய்திடுதல்:

அமேசான் நிறுவனம் ஹபிடட் பார் ஹ்யூமனிட்டி அண்டு வேர்ல்டு  விஷன் நிறுவனத்துடன் இணைந்து போர்டல் ஒன்றை உருவாக்கி உதவிசெய்கிறார்கள். அவர்கள் போர்டலில் இணைந்து உதவிசெய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

6) மாவட்டவாரியான ஹெல்ப்லைன் நம்பர்:

7) விகடனின் 'கேரளாவுக்கு கைகொடுப்போம்' :

ஒவ்வொரு இயற்கைச் சீற்றத்தின் போதும் விகடன் தன் வாசகர்களின் கோடிக்கணக்கான கரங்களோடு இணைந்து துயர் துடைத்து வருகிறது. விகடனுடன் இணைந்து நீங்கள் உதவி செய்ய கீழ்கண்ட முறையில் பணம் அனுப்பலாம்.

Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் கனரா வங்கி சேமிப்பு கணக்கு எண் 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IFSC CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.

வெளிநாட்டு வாசகர்கள் எங்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோட்: IDIB000C032, ஸ்விப்ட் கோட்: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்:   DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்

8) சேவா கிச்சன் மூலம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல்:

பல வருடங்களாக தனிநபரின் பசிப்பிணியைப் போக்கச் செயல்பட்டுவரும் `சேவா கிச்சன்', வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் நோக்குடன் செயல்பட்டுவருகிறது. அவர்களுடன் இணைந்து செயலாற்ற, இங்கே க்ளிக் செய்யவும்.

9) The Peace Movement மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, போர்வை போன்றவை வழங்குதல்:

பீஸ் சாரிட்டபிள் டிரஸ்ட்-ன் முன்னெடுப்பான `The Peace Movement' கோட்டயத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றுடன் இணைந்து அடிப்படை உதவிகளை மக்களுக்குச் செய்கிறார்கள். அரிசி, சர்க்கரை, போர்வைகள், புதிய உடைகள் போன்றவற்றை வழங்குகிறார்கள். அவர்களுடன் இணைந்து உதவ, 

Address:  NEARBY MART MERCANTILES PVT. LTD

A/C No.: 37829088709

SBI MC ROAD ETTUMANOOR

IFSC CODE: SBIN0010113

Kohler Kottayam, 
J.square centre, 
Opp. Sulabha Hyper Market, 
Kottayam, Kerala.  Ananthu Vasudev at (+91)-9947790008

10 பெங்களூரு மக்கள் `THE BETTER INDIA' உடன் இணைந்து உதவிசெய்ய.

`THE BETTER INDIA'வின் முகவரிக்கு நீங்கள் கொடுக்க விரும்பும் உணவு, உடை, சானிட்டரி நாப்கின் உள்ளிட்டவற்றை வழங்கலாம். அவர்கள் அதை, பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொண்டு சேர்ப்பர். 

11 ) பெங்களூரு மக்கள் `YOUNG WORKERS COLLECTIVE' உடன் இணைந்து செயல்பட...

`YOUNG WORKERS COLLECTIVE' அமைப்பு கேரள மழை வெள்ளத்துக்காகத் தொடங்கியுள்ள முன்னெடுப்பில் இணைந்து பணியாற்றலாம். 

12) பாதிக்கப்பட்ட மக்களுக்கு  கேரள அரசுடன் இணைந்து VOLUNTEER ஆகச் செயல்பட :

கேரள அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன்னார்வத்துடன்  உதவ விரும்புபவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது. அதில் இணைந்து பணியாற்ற விரும்புவோர். இங்கே க்ளிக் செய்யவும். 

13) PAYTM மூலம் உதவி செய்ய: 

PAYTM ஆப் மூலம் கேரள மழை வெள்ளத்துக்கு நேரடியாக உதவிசெய்ய வகை செய்யப்பட்டுள்ளது. அதில் இணைந்து உதவி செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

கேரள மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு வரலாறு காணாதது. பாலின்றி குழந்தைகளும் வாழ்வாதரப் பொருள்களின்றி பெண்களும் பெரிதும் அவதிப்பட்டுவருகின்றனர். செல்போன்கள் மூலம் தங்களின் ஆபத்தை உலகுக்குத் தெரியப்படுத்துகிறார்கள். பொருளாதாரம், சொந்த உறவுகள் எனப் பலவற்றை இழந்து தவிக்கிறார்கள்.

கடவுளின் தேசத்தை மனிதத்தால் மீட்டெடுப்போம்!