Published:Updated:

ஸ்போர்ட்ஸ் சாதன மார்க்கெட்டில் 60 சதவிகித பங்கு... தந்திரக்கார `நைகீ’ உருவான கதை!

ஸ்போர்ட்ஸ் சாதன மார்க்கெட்டில் 60 சதவிகித பங்கு... தந்திரக்கார `நைகீ’ உருவான கதை!

ஸ்போர்ட்ஸ் சாதன மார்க்கெட்டில் 60 சதவிகித பங்கு... தந்திரக்கார `நைகீ’ உருவான கதை!

ஸ்போர்ட்ஸ் சாதன மார்க்கெட்டில் 60 சதவிகித பங்கு... தந்திரக்கார `நைகீ’ உருவான கதை!

ஸ்போர்ட்ஸ் சாதன மார்க்கெட்டில் 60 சதவிகித பங்கு... தந்திரக்கார `நைகீ’ உருவான கதை!

Published:Updated:
ஸ்போர்ட்ஸ் சாதன மார்க்கெட்டில் 60 சதவிகித பங்கு... தந்திரக்கார `நைகீ’ உருவான கதை!

விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, விருப்பமான அணி வென்றுவிட்டால் கொண்டாடும் ரசிகர்களும், எதிர்பார்ப்பைத் தகர்த்து பிடித்த அணி தோற்றுவிட்டால் கண்ணீர் சிந்தும் வெறித்தனமான ரசிகர்களும் தேடித் தேடி வாங்கும் பொருள்களுள் ஒன்று `ஷு'. அதிலும், பெரும்பாலான மக்களின் ஃபேவரைட் பிராண்டு, `நைகீ (Nike) என்று சட்டெனச் சொல்லிவிடலாம். விளையாட்டு சாதன மார்க்கெட்டில் 60 சதவிகித பெரும் பங்கை தன்வசம் வைத்துள்ள நைகீயில் அப்படி என்னதான் இருக்கிறது?!


BRS டூ நைகீ:
அமெரிக்காவிலுள்ள ஓரிகான் பல்கலைக்கழகத்தில் `டிராக் மற்றும் ஃபீல்டு கோச்சாக (Track and Field Coacher)' பணியாற்றியவர் பில் பவர்மேன். இவர், தனது முன்னாள் மாணவன் ஃபில் நைட்டுடன் (Phil Knight) இணைந்து உலகையே திரும்பிப் பார்க்கச்செய்த அதிசயம்தான், நைகீ. தனது முதுகலை படிப்பு ப்ராஜெக்ட் சம்பந்தமாக ஃபில் நைட், பவர்மேனை சந்தித்த தருணம்தான் தரமான ஷூக்களை தயாரிப்பதற்கான எண்ணம் உருவாக அடித்தளமானது.


1964-ம் ஆண்டு, ஜப்பானிய ஷூ தயாரிப்பாளர் Onitsuka Tiger-ன் விளையாட்டுப் பொருள்களை விற்பனை செய்யும் டிஸ்ட்ரிபியூட்டராக, `ப்ளூ ரிப்பன் ஸ்போர்ட்ஸ் (Blue Ribbon Sports)' எனும் நிறுவனத்தைத் தொடங்கினர் பவர்மேன் மற்றும் நைட். ஆரம்பகாலத்திலேயே, சுமார் எட்டாயிரம் டாலர் மதிப்புள்ள பொருள்களை விற்றுத் தந்தார் நைட். புதிய பொருள்களுக்கான தேவைகளையும் டைகரிடம் ஆர்டர் செய்தனர். சில நாள்களிலேயே விற்பனை சூடுபிடித்த நிலையில், ஜெஃப் ஜான்சன் எனும் தனி விற்பனையாளரை இணைத்துக்கொண்டனர். அதைத் தொடர்ந்து ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்கள் விற்பனை ஆனது. இதன்பிறகே 1971-ம் ஆண்டு, பொருள்களை விற்கும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸாக மட்டுமல்லாமல், தரமான விளையாட்டுப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனமாக உருவெடுத்தது. முதன்முதலில் நைகீ ஷூ பிறந்ததும் அன்றுதான். இதைத் தொடர்ந்து, 1978-ம் ஆண்டு, BRS நிறுவனம், `நைகீ, இங்க் (Nike, Inc)' என்றானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


அது என்ன `நைகீ?'
கிரேக்கப் புராணங்களின்படி, `நைகீ' என்பது கிரேக்க மக்கள் வணங்கும் `சிறகுள்ள பெண் கடவுள்'. எதிலும் வெற்றியைக் குறிக்கும் இந்தப் பெயரையே நைகீ, இங்க் பார்ட்னர்ஸ் அனைவரும் விரும்பிச் சூட்டியுள்ளனர். 


`நைகீ' என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது `டிக்' சின்னம்தான். இதை வடிவமைத்தவர் பவர்மேனின் மாணவியான கெரோலின் டேவிட்ஸன். 1971-ம் ஆண்டு, வெறும் 35 டாலருக்கு வடிவமைத்த இந்த வடிவத்தின் பெயர், `சுவூஷ் (Swoosh)'. இதுவும், நைகீ கடவுளிடமிருந்து தோன்றிய இன்ஸ்பிரேஷன்தான் என்று கூறுகிறார் கெரோலின்.


தந்திரக்கார நைகீ:
தங்களின் தனிப்பட்ட ஸ்ட்ரேடஜி மற்றும் மக்களின் தேவைகளை புரிந்து செயல்பட்டதே, பத்து மில்லியன் டாலர் விற்பனையிலிருந்து 270 மில்லியன் டாலர் விற்பனை செய்யும் மாபெரும் நிறுவனமாக மாறியதற்கு காரணம். வியாபார ஓட்டத்துக்காக மட்டுமல்லாமல் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் ஓட்டத்தின் தேவைகளை முதலில் ஆராய்ந்து, அவர்களுக்கேற்றதுபோல் தரமான ஷூக்களை தயாரித்தனர். இவர்கள் உருவாக்கிய `ஏர் சோல் ஷூ (Air Sole Shoe)' வரலாற்றின் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. 


இவர்களின் வெற்றிக்கு மற்றுமொரு காரணம், விளம்பரங்கள். 1976-ம் ஆண்டு, ஷூக்களின் படம் ஏதுமில்லாத முதல் பிரின்ட் விளம்பரம் வெளியானது. புகைப்படம் இல்லையென்றாலும், விளையாட்டுக்கும் நைக்கீக்கும் வலுவான சம்பந்தம் இருப்பதுபோன்ற வார்த்தைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தது. இதைத்தொடர்ந்து 1982-ம் ஆண்டு, முதல் TVC விளம்பரம் வெளியானது. இது உலகளவில் மாபெரும் ஹிட் அடித்தது. `Just Do It' எனும் ஸ்லோகம், மக்களிடையே விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.


90களில், பிரேசிலிய தேசிய கால்பந்து அணிக்கு, சீருடை வடிவமைத்து. ஷூக்களுக்கு பேர்போன நைகீ, மற்ற விளையாட்டுப் பொருள்களுக்கும் போட்டியாளராகக் களமிறங்கியது. 1995-ம் ஆண்டு, நைகீ விளம்பரங்களின் தாக்கம் உலக மக்களிடையே அதிகமாக இருந்தது. தற்போது ஷூ மட்டுமல்லாமல், விளையாட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தயார் செய்யும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism