Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - யாச்சே யாச்சே... யாச்சே யாச்சே

அனுஷா... ஆதிரா... இனியா! - யாச்சே யாச்சே... யாச்சே யாச்சே
பிரீமியம் ஸ்டோரி
News
அனுஷா... ஆதிரா... இனியா! - யாச்சே யாச்சே... யாச்சே யாச்சே

டிஜிட்டல் கச்சேரி

"யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி...

யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி...

உன் ஆசை சொல்லாலே...’’

``வாவ்... ஆதிரா பாட ஆரம்பிச்சிட்டா.’’

``நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையின்முன் பார் பிம்பம்...’’

``இனியா கொஞ்சம் நிறுத்து... அடுத்து நானு...’’

``யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே...

யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே...’’

``அனுஷா ... நாம மூணு பேரும் ஏன் காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல சிங்கிங் காம்படிஷன்ல கலந்துக்கக் கூடாது?’’

``கலந்துக்கிட்டா மெர்சலா இருக்கும்ல.’’

``இல்ல... இல்ல... தெறிச்சு ஓடிடுவாங்க.’’

அனுஷா... ஆதிரா... இனியா! - யாச்சே யாச்சே... யாச்சே யாச்சே

‘`சரி... கலாய்ச்சுட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணாம தீபாவளி பர்சேஸ்ஸுக்குக் கிளம்பலாம்... கமான் கேர்ள்ஸ்.’’

``ஏய் போடி. காலெல்லாம் வலிக்குது. நாம ஏன் இந்த வருஷம் ஆன்லைன்ல பர்ச்சேஸ் பண்ணக் கூடாது?’’

``வருஷம் முழுக்கவும் ஆன்லைன்லதானே  பர்ச்சேஸ் பண்றோம். தீபாவளிக்காச்சும் கூட்டத்தோட கூட்டமா போயிட்டு வருவோம். அந்த அனுபவமே ஜாலியா இருக்கும்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அனுஷா... ஆதிரா... இனியா! - யாச்சே யாச்சே... யாச்சே யாச்சே

``ஏய் ஆமா... அக்கா பொண்ணுக்கு, குழந்தை பிறந்திருக்குனு சொன்னேன்ல... குட்டிப் பொண்ணுக்குத் தீபாவளிக்கு டிரஸ் எடுத்துத் தரணும்... கம்பெனி கொடுங்க கேர்ள்ஸ்.’’

``கேட்க மறந்துட்டேன். குட்டிச் செல்லம் எப்படி இருக்கா?’’

``சூப்பரா இருக்கா. என்ன... அக்காதான் ரொம்ப டயர்டா இருக்கா. அவளுக்குத் தாய்ப்பால் கொடுக்கிறதுல ஏதோ பிரச்னைன்னு சொல்லிட்டு இருந்தா...’’

``டாக்டரைப் போய் பார்த்தாங்களா?’’

`` ம்... பார்த்துட்டு வந்துட்டா. தாய்ப்பாலுக்கு நல்ல ஹெல்த்தியான ஃபுட்ஸ் எடுத்துக்கிறதோட நல்லா தூங்கணும்னு சொல்லியிருக்காங்க.’’

``பெண்கள்னாவே  தாய்மை ஒரு பேரனுபவம்ல.’’

``நிஜம்தான். அக்காவைப் பார்க்கிறப்பதான் நம்ம அம்மாக்கள் பத்தி யோசிக்கத் தோணுது. ஒரு குழந்தையை வளர்க்க எவ்ளோ கஷ்டப் படுறாங்க... இல்லே.’’

‘`இதெல்லாம் நிறைய ஆண்களுக்குப் புரியவே மாட்டேங்குதே. பொண்ணுங்களை வெறும் புள்ளப் பெத்துக்குற மெஷினாதானே பார்க்கிறாங்க?’’

``ஹாஹா... என்ன இனியா, நீ கூட சீரியஸா ஃபெமினிசம் பேச ஆரம்பிச்சுட்டே?’’

``ஏய்... இதுக்குப் பேரு பெண்ணியம் இல்லை. இங்கே நிறைய பேருக்குப் பெண்ணியத்துக்கான அர்த்தம் என்னன்னுகூட தெரியலை. அதாவது ஆண்களை அவமதிக்கறதும் அவங்களை அடிமைப்படுத்துறதும்தான் பெண்ணியம்னு நிறைய பேரு நினைச்சுட்டு இருக்காங்க. நிஜம் என்னன்னா, ஆண்கள் நமக்கு எதிரியல்ல... ஆணும் பெண்ணும் சமம். இதைப் புரிஞ்சிக்கிட்டா போதும்.’’

‘`வெயிட்... இனியா... இன்னும் தெளிவா சொல்லணும்னா கருத்துக் கண்ணம்மாவோட ஃபேஸ்புக் பேஜ்ஜை நான் ஷேர் பண்றேன்.’’

``அங்கே கண்ணம்மாக்கள் ராஜ்ஜியம்தானா?’’

``ஹாஹா... கண்ணம்மாக்கள் தனிக்கட்சி இல்லப்பா. கூட்டணிதானாம்.’’

‘`சரி கண்ணம்மா... உன் பாய் ஃப்ரெண்ட் உனக்குத் தீபாவளிக்கு எதுவும் வாங்கித் தரலையா. அதான் இப்படி படபடன்னு பேசிக்கிட்டு இருக்கியா?’’

‘`அடியேய்... அவன் எனக்கு வாங்கித் தராட்டியும் நான் அவனுக்கு வாங்கித் தருவேன். பொண்ணுங்கதான் பசங்களை எதிர்பார்த்துட்டு இருக்கணும்கிற ரூல்ஸை பிரேக் பண்ணுவோம்.’’

``ஆமா ஆமா... அம்மா கொடுக்கிற பாக்கெட் மணியில பாய் ஃப்ரெண்ட்ஸுக்கு கிஃப்ட் பண்ணலாமே... தப்பில்லையே.’’

``அது இருக்கட்டும்... ஓவியா போல ஹேர்கட் பண்ணப் போறேன்னு சொன்னியே... எப்ப உன்ன அப்படி பார்க்கிறதாம்?’’

``இப்போதைக்கு அந்த ஐடியாவைத் தள்ளி வெச்சுட்டேன். நமக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கட்டுமே... எதுக்கு காப்பி அடிக்கணும்?’’

``உனக்கு விஷயம் தெரியுமா...

காஞ்சனா-3 படத்துல லாரன்ஸ்கூட ஓவியா நடிக்கப் போறாங்களாம்.’’

``ஏஞ்சல் பொண்ணுக்குப் பேய் சீன் கொடுக்காம இருந்தா சரிதான்.’’

``ஓவியா பேய் கெட்டப்ல வந்தாகூட நம்ம `ஓவியா ஆர்மி’ பசங்க பயப்படாம `வாவ் ஓவியா’னு சிரிச்சுதான் வெப்பாங்க.’’

``ஹாஹாஹா.’’

``ஓவியா மேல இவ்ளோ ஜெலஸ் ஆகாது இனியா...’’

‘`இனியாதான் கெத்து. நோ.. காம்ப்ரமைஸ்!’’

- கச்சேரி களைகட்டும்...

அனுஷா... ஆதிரா... இனியா! - யாச்சே யாச்சே... யாச்சே யாச்சே

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது, இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - யாச்சே யாச்சே... யாச்சே யாச்சே

``நாங்க ஆண்களுக்கு எதிரியல்ல!” பெண்ணிய மீம்ஸ்ஸில் கலக்கும் ‘கருத்து கண்ணம்மா.’

http://bit.ly/2fwbyJw

அனுஷா... ஆதிரா... இனியா! - யாச்சே யாச்சே... யாச்சே யாச்சே

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குறைந்தபட்சம் ஐந்து மணி நேரம் தூங்க வேண்டும்!

http://bit.ly/2x0oD9c

அனுஷா... ஆதிரா... இனியா! - யாச்சே யாச்சே... யாச்சே யாச்சே

‘காஞ்சனா - 3’ திரைப் படத்தில் ஓவியா!

http://bit.ly/2fVtzle