Published:Updated:

விசிலு பறக்கும் பாரு!

விசிலு பறக்கும் பாரு!
பிரீமியம் ஸ்டோரி
விசிலு பறக்கும் பாரு!

மு.பிரதீப் கிருஷ்ணா

விசிலு பறக்கும் பாரு!

மு.பிரதீப் கிருஷ்ணா

Published:Updated:
விசிலு பறக்கும் பாரு!
பிரீமியம் ஸ்டோரி
விசிலு பறக்கும் பாரு!

ன்னதான் எல்லா விளையாட்டுகளுக்கும் `இந்திய அணிகள்’ இருந்தாலும்... `நம்ம தமிழ்நாட்டு டீம்ங்க’

விசிலு பறக்கும் பாரு!

என்று சொல்லும்போது எப்பவுமே கெத்துதான். அதனால்தான், வடநாட்டு தோனி தலைமை தாங்கினாலும் தடைபெற்றுத் திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸுக்காகத் தமிழ்நாடே காத்திருக்கிறது. அபிஷேக் பச்சன்தான் ஓனர் என்றாலும் சென்னையின் எஃப்சி கால்பந்தாட்ட அணிக்குப் பேராதரவு தருகிறோம். பேட்மின்டனில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி நமக்குச் செல்லம்தான். இதோ இப்போது கபடியிலும் கால்தடம் பதித்து வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறது தமிழ் தலைவாஸ். அடுத்த சுற்றுக்குத் தயாராக இருக்கிற அணிகளின் கரன்ட் அப்டேட்! 

விசிலு பறக்கும் பாரு!

ஸ்மேஷர்ஸ் சிந்து!

 `சென்னை ஸ்மேஷர்ஸ்’, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் தமிழ்நாட்டு பேட்மின்டன் அணி. நாமதான் இப்போ நடப்பு சாம்பியன். ஸ்மேஷர்ஸ் அணியின் உயிர்நாடி, ஒலிம்பிக் சில்வர் மெடலிஸ்ட் சிந்து. சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம், ஏலத்தில் அவர்கள் கையாண்ட உத்திகள்தான். பொறுமையாகக் காத்திருந்து சிந்துவை வெறும் 39 லட்சம் ரூபாய்க்கு வாங்கினர். ஆண்கள் பிரிவில் இந்திய நட்சத்திர வீரர் காஷ்யப்பை வாங்கினர். கடந்த சீஸனில் சென்னை தவிர்த்து மற்ற ஐந்து இடங்களில் போட்டி நடந்தது. ஆனால், வரும் டிசம்பரில் தொடங்கும் மூன்றாவது சீஸன்  சென்னையிலும் நடப்பதால், விருந்து காத்திருக்கிறது. இறுதிப்போட்டியும் சென்னையில்தான் நடக்க இருக்கிறது. நல்ல ஃபார்மில் இருக்கும் சிந்துவைத் தக்கவைத்துக்கொண்டு, கடந்த ஆண்டைப் போலவே ஏலத்திலும் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், இந்த சீஸனிலும் சென்னை ஸ்மேஷர்ஸ் அணிதான் சாம்பியனாகும்!

சூப்பர் மச்சான்ஸ்!

சூப்பர் கிங்ஸ் இல்லாத காலங்களில் சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது ‘சூப்பர் மச்சான்ஸ்’தான். சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியை அப்படிதான் செல்லமாக அழைக்கிறார்கள் ரசிகர்கள். ஐ.எஸ்.எல். கால்பந்துத் தொடரின் இரண்டாவது சீஸனின் சாம்பியன். சி.எஸ்.கே-வுக்கு தோனி `தல’ என்றால், சென்னை அணியின் `தல’ பயிற்சியாளர் மார்கோஸ் மத்தராஸி. இப்போது புதிய பயிற்சியாளராக இங்கிலாந்தின் ஜான் கிரகரி வந்திருக்கிறார். வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் மெத்தனம் காட்டிவருவதாலும், கேரளா, கொல்கத்தா போன்ற அணிகள் நட்சத்திர வீரர்களைச் சேர்த்து பலப்படுத்தி வருவதாலும் சென்னை அணிக்கு இந்த முறை போட்டி மிகவும் கடினமாக இருக்கும். சரியான வீரர்களை விரைந்து ஒப்பந்தம் செய்தால் மட்டுமே, மற்ற அணிகளுக்குச் சவால்விட முடியும்.
விசிலு பறக்கும் பாரு!

விசிலு பறக்கும் பாரு!

இரண்டு ஆண்டுகள் தடை முடிந்து மீண்டும் ஐ.பி.எல். களத்தில் கெத்து வாக் போடவுள்ளது சி.எஸ்.கே. அடுத்த ஐ.பி.எல்-லைப் பொறுத்தவரையில்  வீரர்கள் ஏலம் முதலிலிருந்து நடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தோனி, ரெய்னா, அஷ்வின், ஜடேஜா, பிராவோ போன்ற வீரர்கள் ஏலத்தில் வருவது உறுதி. ஏற்கெனவே `தோனி நிச்சயம் சென்னை அணிக்கு ஆடுவார்’ என்று உரிமையாளர் சீனிவாசன் ஓப்பன் டாக் கொடுத்திருக்கிறார். ஏலத்தில் எவ்வளவு தொகை போனாலும் `தல தோனி’ சென்னை அணிக்கு வந்தே தீருவார் என்று நம்பலாம். ஆனால், அது மற்ற இந்திய வீரர்களை வாங்குவதில் சிக்கலை ஏற்படுத்தலாம். சென்னை அணி, நிச்சயம் தங்களின் பழைய வீரர்களைத்தான் அதிகம் குறிவைக்கும். டி.என்.பி.எல். தொடரில் கலக்கிய நட்சத்திரங்கள் வாஷிங்டன் சுந்தர், அபராஜித், சாய் கிஷோர் முதலானவர்களை ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளது. அவர்களும் வந்தால் நிச்சயமாக சேப்பாக்கத்தில் விசிலு பறக்கும்!

விசிலு பறக்கும் பாரு!

தலைவாஸ் ரெடி!

புரோ கபடி லீகின் நான்கு சீஸன்களுக்குப் பிறகு தமிழ் மண்ணுக்குத் வந்திருக்கிறது கபடி! சச்சின் அணியை வாங்க, கமல்ஹாசன் அணியின் விளம்பரத் தூதராக, களம் காணும் முன்பே பிரபலமடைந்தது `தமிழ் தலைவாஸ்’. முதல் சீஸனிலேயே நட்சத்திரங்களை வாங்கி வெற்றியைக் குறிவைக்காமல், இளம் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பையும் வழங்கியது தமிழ் தலைவாஸ் அணி. இந்த சீஸனில் விளையாடும் 12 அணிகளில், வீரர்களின் சராசரி வயது குறைவாக உள்ள அணி, தமிழ் தலைவாஸ். 1994-ம் ஆண்டு ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர் கே.பாஸ்கரன்தான் பயிற்சியாளர். அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் மட்டுமே பெருமளவில் புரோ கபடி லீக் அனுபவம் உள்ளவர். இந்த சீஸனில் பெரிய அளவு சோபிக்காவிட்டாலும் இந்த அனுபவம் நிச்சயம் அடுத்த சீஸனில் கைகொடுக்கும். முதல் தொடரில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு நட்சத்திரங்களை வாங்காமல், இந்திய வீரர்களை, குறிப்பாகத் தமிழக வீரர்களை நம்பி களம் இறங்கிய காரணத்துக்காகவே தமிழ் தலைவாஸ் அணிக்கு சல்யூட்!