பிரீமியம் ஸ்டோரி

ப்பனை என்பது முகத்துக்குப் போடும் மேக்கப் மட்டுமல்ல, உச்சி முதல் பாதம் வரை அவரவர் விருப்பத்துக்குத் தகுந்தவாறு முழுமையாக மாற்றுவது. மணநாளில் மணமகளை அலங்கரிக்கும் பணியில் 11 ஆண்டு கால அனுபவம் பெற்ற விஜி.K.N.R சென்னையில் Bronzer Makeover எனும் நிறுவனத்தை நடத்திவருகிறார். செலிபிரிட்டி, சினி ஸ்டார் எனப் பிரபலங்களின் மோஸ்ட் வான்டட் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான இவர், நிகழ்ச்சிக்கும் இடத்துக்கும் தகுந்தவாறு ஆடை, அணிகலன்கள் என மொத்த அலங்காரத்தையும் சிறப்பாகச் செய்து மணமகளைத் தேவலோக மங்கையாகவே மாற்றிவிடுபவர்.
மணமகள் அவுட்லுக்கில் இன்றைய ட்ரெண்டிங் குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் விஜி.

பிரைட்டா ஒரு பிரைடல் லுக்!

வட இந்தியா மற்றும் முஸ்லிம் மணமகளுக்கு...

வட இந்தியப் பெண்களுக்கான தோற்றத்தில் உடை, நகையோடு மேக்கப்பும் ரிச்சாக இருக்க வேண்டும். நெற்றியை மறைக்கும் அளவுக்குப் பெரிய நெற்றிச் சுட்டி இப்போதைய ட்ரெண்டு. இதை உபயோகிக்கும்போது நெற்றியில் பொட்டு வைக்காமல் இருக்க வேண்டும். சிலர் பொட்டு வைப்பது சம்பிரதாயம் என வைக்கச் சொல்வார்கள். அப்படி வைக்கும்போது கண்ணுக்கு உறுத்தாத அளவுக்குச் சிறிய பொட்டாக வைத்துக்கொள்ளலாம். குறிப்பாக ‘நாட்’ எனப்படும் இந்த வகை மூக்குத்தியுடன் நெற்றிச்சுட்டியும் பிரமாண்டமாக இருந்தால் கண்டிப்பாகப் பொட்டு வைப்பதைத் தவிர்க்க வேண்டும். வட இந்தியத் திருமண நிகழ்வுகளான சங்கீத் மற்றும் மெஹந்தி விழாக்களுக்கு ஏற்ற சரியான தோற்றம் இதுதான். முகத்துக்கான மேக்கப்பில் கண்களை உறுத்தும் நிறங்கள் இல்லாமல், அதேநேரம் கண்கள் மற்றும் உதட்டுக்கான மேக்கப்பை மட்டும் ஹைலைட் செய்துவிடுவோம். மேட் ஃபினிஷ் மற்றும் க்ளாஸி என இரண்டுவிதமான மேக்கப்பும் இத்தோற்றத்துக்குப் பொருந்தும். அதேபோல் இது, வட இந்தியப் பெண்கள் மட்டுமில்லாமல் முஸ்லிம் மணமகளுக்கும் ஏற்ற தோற்றமாகும்.

பிரைட்டா ஒரு பிரைடல் லுக்!

கிளாமர் லுக்...

நார்த் இண்டியன் மற்றும் ட்ரெண்டியான பெண்கள் சற்று கிளாமரான தோற்றத்தை விரும்புகின்றனர். மெகா சைஸ் நெற்றிச்சுட்டிக்குப் பதில் மீடியம் சைஸ் அல்லது சிறிய பெண்டன்ட் போன்ற நெற்றிச் சுட்டி உபயோகித்தால் கண்களை உறுத்தாமல் நீட் லுக் கொடுக்கும். நெற்றின் ஒருபக்்கம் மட்டும் மெல்லிய கற்றை முடியை விடுவது கூடுதல் அழகு. லிப்ஸ்டிக் மட்டுமில்லாமல் மொத்த மேக்கப்பும் மேட் ஃபினிஷிங்காக இருப்பது அழகு. கன்னங்களில் நேச்சுரல் கலர் பிளஷ்ஷர் பெஸ்ட் சாய்ஸ். மொத்தத்தில் எலிகென்ட் லுக்கில் அசத்தலாம்.

பிரைட்டா ஒரு பிரைடல் லுக்!

டூ இன் ஒன் லுக்...

வட இந்தியப் பெண்களுக்கு மட்டுமில்ல, தென்னிந்தியப் பெண்களுக்கும் பிடித்த உடையாக மாறிவிட்டது லெஹெங்கா. இப்போதைய மணமகளின் ட்ரெண்டும் இதுதான். இந்த உடைக்கு வட இந்தியா மற்றும் தென்னிந்தியா என இரண்டு கெட்டப்புகளும் சாத்தியமே. வித்தியாசமான ஸ்டைலில் ஒரு கொண்டை, செயின் மாடல் நெற்றிச்சுட்டி மற்றும் செயின் அட்டாச்டு மூக்குத்தி வளையம் என நார்த் மற்றும் சவுத் ஸ்டைல் ஃப்யூஷனாக செய்து பிரமாதப்படுத்தலாம். இந்தத் தோற்றத்துக்கு க்ளாஸி மற்றும் மேட் ஃபினிஷ் என இரண்டு வகையான மேக்கப்பும் பொருத்தமாக இருக்கும்.

பிரைட்டா ஒரு பிரைடல் லுக்!

மகாராஷ்டிரா - தென்னிந்தியா ஃப்யூஷன்

மராட்டிய மணமகளுக்கான அவுட்லுக்கான இதில், அடர்வண்ண சேலைக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் பிளவுஸ். இது ட்ரெடிஷனல் மகாராஷ்டிரா ஸ்டைல். வித்தியாசமான வடிவத்தில் நெற்றிச்சுட்டி மற்றும் மூக்குத்தி, கைகளில் கடா டைப் வளையல்கள், கால்களில் ஒன்றுக்கு இரண்டு கொலுசுகள் என நெற்றியில் தொடங்கி பாதம் வரை அத்தனை நகைகளுமே கொஞ்சம் ரிச்சாக இருக்கும்படி தேர்ந்தெடுக்க வேண்டும். புதுவிதமான தோற்றத்தில் தனித்துத் தெரியவிரும்பும் வித்தியாச விரும்பிகளுக்கான மேக்கப் இது. இத்தோற்றத்துக்கு க்ளாஸி ஃபினிஷ் மேக்கப்பை விட மேட் ஃபினிஷ் பெஸ்ட் சாய்ஸ். ட்ரெடிஷனல் வட்ட வடிவப் பொட்டுதான் நிறைவைத் தரும்.

பிரைட்டா ஒரு பிரைடல் லுக்!

தமிழ் மணமகளுக்கான தோற்றம்...

முகூர்த்தத்தைப் பொறுத்தவரை நவநாகரிகப் பெண்ணாக இருந்தாலும், பாரம்பர்ய தோற்றத்தில் இருக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், ஜிமிக்கி, ஆரம், வளையல், ஒட்டியாணம் என சில நகைகளைப் பாரம்பர்யமாகவும் நெற்றிச்சுட்டி, மூக்குத்தி, நெக்லஸ், வங்கி போன்றவற்றைச் சற்று வித்தியாசமாகவும் தேர்ந்தெடுத்து, மணமகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய முடியும். முகூர்த்தம் காலை நேர நிகழ்வு என்பதால் மேக்கப்பைச் சற்று மிதமாகவும், உதடுகளைச் சிவப்பு போன்ற பிரைட் கலரிலும் தேர்ந்தெடுத்தால், கூடுதல் ஈர்ப்புக் கிடைக்கும். மேட் ஃபினிஷிங் மேக்கப் பெஸ்ட் சாய்ஸ்.

பிரைட்டா ஒரு பிரைடல் லுக்!

தெலுங்கு மணப்பெண்ணுக்கான தோற்றம்...

தெலுங்கு மணமகளுக்கு உடை, மேக்கப், நகைகள் என அனைத்துக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படும். நகைகளைப் பொறுத்தவரை முன்பக்கம் வகிடு  எடுக்காத ஹேர் ஸ்டைலுக்கேற்ற செயின் வடிவ நெற்றிச்சுட்டி,  ரெட், கிரீன், வொயிட் ஸ்டோன் மற்றும் முத்துகள் பதித்த ஹெவி பெண்டட் வைத்த மாலைகளும், மேக்கப்பைப் பொறுத்தவரை, கான்டோர் எனப்படும் மேக்கப் ட்ரிக் மூலம் செய்யப்படும்  பவர் பேக்டு மேக்கப்பாக இருப்பது  அவசியம். கண்களை ஷார்ப்பாக காட்டும் வகையில் ஐ மேக்கப்பும், பளிச் நிற லிப்ஸ்டிக்கைத் தொடர்ந்து  கடைசியாக ட்ரெடிஷனல் வட்ட வடிவ பொட்டை வைத்தால் வைப்ரன்ட் லுக்கில் மணமகள் ஜொலிப்பார்.

பிரைட்டா ஒரு பிரைடல் லுக்!
பிரைட்டா ஒரு பிரைடல் லுக்!

ட்ரெண்டியான  மணப்பெண்ணுக்கு...

இளவண்ணப் புடவைகளுக்கு கான்ட்ராஸ்டு நிறத்திலான ஹெவி ஒர்க் செய்யப்பட்ட பிளவுஸ்தான் இப்போதைய திருமண ட்ரெண்டு. மாலை நேர நிகழ்வுகளுக்கான இந்தத் தோற்றத்துக்கு, ஃபேன்சி டிசைனில் மிளிரும் தங்க நகைகள் அல்லது குந்தன் கற்கள் மின்னும் தங்க நகைகள், மீனாகாரி நகைகள், வைர நகைகள் என அனைத்துமே பொருந்தும். முகம் முழுவதும் சமமாகப் பரவக்கூடிய ஏர் பிரஷ் முறையில் செய்யக்கூடிய மேட் ஃபினிஷ் மேக்கப், மணமகளுக்கு மேக்கப் போட்டதே தெரியாதவாறு இயற்கை அழகைத் தரும்.

- யாழ் ஸ்ரீதேவி
மாடல் : வித்யா பிரதீப்
படங்கள் : ஜீவன் போட்டோகிராபி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு