வாழ்வின் கனவுகள் வானவில்லை உடுத்திக்கொள்ளும் வைபவம், திருமணம். அந்த விழாவில் பெண்ணின் அழகையும் நாணத்தையும் மெருகூட்டுவது... மெஹந்தி!

வட இந்தியத் திருமணங்களின் முக்கிய அங்கமாகத் திகழும் மெஹந்தி நிகழ்வு, இப்போது தமிழ்த் திருமணங்களுக்கும் அழகு சேர்க்கின்றன. மணப்பெண்ணின் மகிழ்வைக்கூட்டும் மெஹந்திக்குப் பின்னே மகிழ்வைத் தாண்டிய மருத்துவக் காரணங்களும் உள்ளன. உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் மெஹந்தி வைக்கும்போது, அது மணப்பெண்ணின் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. மெஹந்தியின் நறுமணம் தலைவலியைக் குணப்படுத்தவல்லது என்று நம்பப்படுகிறது. பெண்ணுக்குக் கை கால்களில் மெஹந்தி வைப்பது கருப்பைக்கு நன்மை அளிப்பதாக யுனானி மருத்துவத்தில் கூறப்படுகிறது. ‘மருதாணி செவக்கப் பிடிச்சா, போற வீட்டுல உன்னை எல்லோருக்கும் பிடிக்கும்’ என்பது பெண்ணுக்குச் சொல்லப்படும் விளையாட்டு ஆரூடம்.

இந்தியாவெங்கும் ஏராளமான மெஹந்தி டிசைன்கள் வசீகரித்துவரும் நிலையில், தமிழ்த் திருமண மரபுகளை மெஹந்தியாக வரைந்து கவனிக்க வைக்கிறார் கோவையைச் சேர்ந்த சரண்யா. ‘`எனக்கும் இப்போ மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமாகிடுச்சு. நானே விட நினைச்சாலும் மெஹந்தி என்னை விடாதுபோல... அத்தனை பொண்ணுங்க எனக்காக வெயிட்டிங்!’’ என்று கெத்தாக ஆரம்பிக்கிறார் சரண்யா...

‘`மதுரை எனக்குச் சொந்த ஊர். அப்பாவுக்கு அரசு வேலையில் கிடைச்ச பணி மாறுதல்களால, நிறைய ஊர்கள்ல வசிக்கிற அனுபவம் கிடைச்சது.
எம்.பி.ஏ ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன், எம்.பி.ஏ பார்மா பிசினஸ் முடிச்சிருக்கேன். ஆனால், ஓவியம் வரைவதில் எனக்கிருந்த ஆர்வம்தான், என்னை மெஹந்திக்குள்ளே இழுத்துவந்தது.

வடமாநிலங்களில் நான் வேலை பார்த்தப்போ, நார்த் இண்டியன் மெஹந்தி பேட்டர்ன்ஸை கத்துக்கிட்டேன். பார்ட் டைமா மெஹந்தி போடவும் ஆரம்பிச்சேன். அதுல என் க்ரியேட்டிவிட்டியும் சேர, நான் போடும் மெஹந்தி டிசைன்கள் எக்ஸ்க்ளூ சிவ்வாக மாறின. தென்னிந்தியக் கலாசாரத் தையும் திருமணச் சடங்குகளையும் வெளிப்படுத்தும் மெஹந்தி டிசைன்களை வரைய ஆரம்பிச்சேன். அதுவரை மெஹந்தியில் மணமக்கள் பெயர், முகம்னு பார்த்துட்டு இருந்த மக்கள், தாலி கட்டுறது, மெட்டி போடுறதுனு காட்சிகளாக நான் வரைஞ்சப்போ ரொம்பவே சர்ப்ரைஸ் ஆனாங்க. ஒரு கோயிலுக்குச் சாமி கும்பிடப் போனாகூட, கோபுரத்தில் இருந்து சிலைகள் வரை அதன் வடிவமைப்பை என் மனசு ஸ்கேன் பண்ணிக்க, என் விரல்கள் அவற்றை மெஹந்தி டிசைன்களில் வெளிப்படுத்த ஆரம்பித்தன.

இதுவரை 80 பிரத்யேக மெஹந்தி டிசைன்களை உருவாக்கியிருக்கேன். 100 டிசைன்கள் உருவாக்கினதுக்கு அப்புறம் பேடன்ட் வாங்கப் போறேன். தவிர, வித்தியாசமான சூழல்கள்ல நெகிழ் வான விஷயங்களை மெஹந்தி ஆர்ட்டா மாற்றிக் கொடுக்கறேன். பெருமைக்காக சொல்லல... அடுத்த வருஷம் வரைக்கும் எனக்கு மெஹந்தி ஆர்டர்கள் புக்டு.

என்னால மறக்கவே முடியாத கஸ்டமர், ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்சலின். இப்போ என் தோழியும்கூட. ‘சரண்யா மெஹந்தி ஆர்ட்’ முகநூல் பக்கத்தில் என் டிசைன்களைப் பார்த்துட்டு, அவங்க இந்தியா வந்தப்போ பட்டுச்சேலை உடுத்திட்டு வந்து மெஹந்தி போட்டுட்டுப் போனாங்க. மறுபடியும் இந்தியாவுக்கு வந்து, என்கிட்ட மெஹந்தி போட்டுக்கிறதா சொல்லியிருக்காங்க.

படிச்ச படிப்புக்கான வேலை பார்த்ததைவிட, மெஹந்தி போடும் போதுதான் சந்தோஷமா உணர்றேன். மெஹந்தி கோனைக் கையில் பிடிச்சதும், மனம் முழுக்க புது டிசைனைக் கொண்டுவரத் துடிக்கும். மனதில் வரைந்து பார்த்ததையெல்லாம் விரல்கள் உள்ளங்கையில் செதுக்கும். என் ஆர்வம்தான் அர்ப்பணிப்போடு இந்தக் கலையைக் காதலிக்க வைக்குது.

என்னோட மற்றொரு ஸ்பெஷாலிட்டி, மிரர் இமேஜ் மெஹந்தி டிசைன்ஸ். அதாவது, ஒரு கையில் வரைந்த டிசைனின் கண்ணாடி பிம்பத்தை மறு கையில் வரைவேன். மணமகளுக்கு தன் வருங்காலக் கணவரின் முகத்தை அவரோட உள்ளங்கையில் வரைந்து கொடுக்கும்போது, அவர் கண்களில் மின்னும் வெட்கமும், சொல்லும் நன்றியும் ஸோ க்யூட்தான் போங்க.

நான் பயன்படுத்தும் மெஹந்தி கோன்களை நானே தயாரிக்கிறேன். மருதாணி இலையை உலர்த்தி பொடியாக்கி, நிறம், மணம் கூட்ட சில இயற்கைப் பொருள்கள் சேர்த்துச் செய்ற இந்த மெஹந்தியால் அலர்ஜி போன்ற எந்தப் பிரச்னையும் ஏற்படாது.

டிசைன், வரையச் செலவிடும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து திருமண மெஹந்திக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்படும். குறைந்தபட்சம் ஆறாயிரத்தில் இருந்து பன்னிரண்டு ஆயிரம் வரை மெஹந்திக்குச் செலவழிக் கிறாங்க. கொடுக்கும் பணத்தைவிட அதிக திருப்தியையும் அழகையும் நிச்சயமா மணப்பெண் உணர்வாங்க!”

சரண்யாவின் திருமணத்துக்கு மெஹந்தி போடுவது யாரோ?!

- யாழ் ஸ்ரீதேவி

படங்கள்: தி.விஜய்