Published:Updated:

``ஸ்விம் பண்ணினோம்னா உடம்பு, மனசு ரெண்டுமே லேசாயிடும்'' - நடிகர் அருண் விஜய்! #LetsRelieveStress

``ஸ்விம் பண்ணினோம்னா உடம்பு, மனசு ரெண்டுமே லேசாயிடும்'' - நடிகர் அருண் விஜய்! #LetsRelieveStress
``ஸ்விம் பண்ணினோம்னா உடம்பு, மனசு ரெண்டுமே லேசாயிடும்'' - நடிகர் அருண் விஜய்! #LetsRelieveStress

என்னதான் பிசினஸ் நண்பர்கள்னு இருந்தாலும் ஃபேமிலியோடு இருக்கிறதுதான் அவரோட முதல் சாய்ஸ். காரணம் விழாக்கள், விசேஷ நிகழ்ச்சிகள்ல உறவுகளோடு இருக்கும்போது நம்ம சந்தோஷம் இரண்டுமடங்காகும். 

டிகர் அருண் விஜய்,  விஜயகுமாரின் மகன். எல்லோரிடமும் இயல்பாகப் பழகும் குணம் உள்ளவர். எந்தவித பந்தாவும் இல்லாமல் திரை உலகில் வலம் வருபவர். 'முறை மாப்பிள்ளை' தொடங்கி, நடித்து வரும் அவருக்கு மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்'  25 - வது படம். அவரது கரியரில் 'இயற்கை', 'தடையறத் தாக்க', 'என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. அவரிடம் அவருக்கு மன அழுத்தம், மன இறுக்கம் தந்த தருணங்கள் அதிலிருந்து அவர் வெளிப்பட்ட விதம் பற்றிக் கேட்டோம்.

'' சினிமா மாதிரியே என் மனசுக்கு ரொம்பவும் நெருக்கமான இன்னொரு விஷயம் 'ஸ்கை டைவிங்'. வானவெளியில விமானத்துல பறக்கும்போது 18,000 ஆயிரம் அடி உயரத்துல இருந்து ஃபாராசூட் துணையுடன் குதிக்கிற சாகச விளையாட்டு எனக்கு ரொம்ப புடிச்ச விஷயம். 10 வருஷத்துக்கு முன்னாலயே இதற்கான பயிற்சியை லண்டன்ல எடுத்துக்கிட்டேன். 

வாழ்க்கை நொடிகளால் ஆனதுங்கிற புரியவைக்கிற விளையாட்டு. என்கூட 27 பேர் பயிற்சியில் சேர்ந்தாங்க 20 பேர் பல காரணங்களால அதைவிட்டுட்டாங்க. ஏழு பேர்தான் முழுசா கோர்ஸை முடிச்சோம். நான் 2012 லேயே இதுக்கான லைசென்ஸை வாங்கி வெச்சிருக்கேன். அதனால, லண்டன், துபாய் மலேசியா, தாய்லாந்து போகும்போது ஸ்கை டைவிங் பண்ணுவேன். ஒருமுறை வானத்திலிருந்து  ஸ்கை டைவ் பண்ண கிட்டத்தட்ட 25 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும். 

2016 - ல் 'என்னை அறிந்தால்' படம் முடிஞ்ச நேரம். ஒருமுறை தாய்லாந்துல அப்படி ஸ்கை டைவ் பண்ணும்போது ஃபாராசூட்டுடன் குதிச்சிட்டேன். ஆனா, காத்து ரொம்ப வேகமா அடிக்கவே 'ட்ராப் ஜோன்'ல இறங்க வேண்டிய இடத்தை விட்டு, அருகாமையிலிருக்கிற நகரம் சார்ந்த இடத்துக்கு வந்துடுச்சு.காத்து பலமா இருந்தா எதிர் திசையில நம்மை இயக்கிக்கொண்டு இறங்க வேண்டும். தரையில் விழுந்ததும் தரையை உயர்த்தி புரள வேண்டும். 

பத்து பதினைஞ்சு விநாடிகள்... குடும்பத்துல உள்ளவங்க முகமெல்லாம் வந்து போச்சு. அப்புறம் என்னோட டிரெய்னர் சொல்லிக்கொடுத்தது மாதிரியே செஞ்சேன்.  தரையில் விழுந்து புரண்டு உருண்டேன். உடம்பிலும் கையிலும் சின்னச்சின்ன சிராய்ப்புகள் அதோடு தப்பிச்சேன்.  அதற்குப்பிறகுதான் அந்த விளையாட்டை நான் அதிகம் நேசிக்கிறேன். இதுவரை 69 முறை ஸ்கை டைவிங் பண்ணியிருக்கேன். இதுல கிடைக்கிற சந்தோஷம் த்ரில் எல்லாமே நம்மால விவரிக்கமுடியாதது. 

இந்த மனோபாவம்தான் சினிமாவுல எனக்கு ஏற்படுற தோல்விகளைத் தாங்க உதவுது. மகிழ்திருமேனி இயக்கிய 'தடையறத் தாக்க' என்னோட கரியர்ல ரொம்ப முக்கியமான படம். ஆனா, அது கொஞ்சம் சரியா போகலை. மக்கள்கிட்ட அதைக்கொண்டு போய் சரியா சேர்க்க முடியலை. ஆனா, டிவியில பார்த்துட்டு நிறையபேர் பாராட்டினாங்க. 

எப்பவுமே நான் எனக்கு தோல்வி வந்துச்சுனா எனக்கு நானே என்னை மோட்டிவேட் பண்ணிக்கிட்டு திரும்ப பெரிய உற்சாகத்தோட கிளம்புவேன். அதுதான் எனக்கிருக்கிருக்கிற பெரிய பலம்.  அதுதான் என்னுடைய ஸ்ட்ரெஸ் பஸ்டர்.         

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு படம் ரிலீஸாவது, சக்ஸ்ஸ் ஆவது, அடுத்து என்ன பண்ணப்போறோம்ங்கிறதே பெரிய ஸ்ட்ரெஸ்தான். அதேமாதிரி சினிமா, ஃபேமிலி இரண்டையும் பேலன்ஸ் பண்ணிக்கொண்டு போவதும் ஒரு வகை டென்ஷன்தான். 
  வீட்டுல உள்ளவங்க அவங்க சில நிகழ்ச்சிகளின்போது நாமகூட இருக்கணும்னு நினைப்பாங்க. ஆனா, நம்மால அந்த மாதிரி சமயத்துல அவங்ககூட இருக்கமுடியாம ஷூட்டிங்ல் இருக்கவேண்டியதா இருக்கும். இப்போ உதாரணமா குடும்பத்துல ஒருத்தங்களோட பர்த் டேயை செலிபிரேட் பண்றப்போ நாம அவங்கக்கூட இருக்கமுடியாம போகும். 
 அந்த மாதிரி நேரங்கள்ல  அதுக்குப்பிறகு ஃபேமிலியோட வெளியில ஒரு டிரைவ் போயிட்டு வருவேன். அவங்களோடு அதிக நேரத்தைச் செலவு செய்வேன். அப்பாக்கிட்ட (நடிகர் விஜயகுமார்)  இருந்து கத்துக்கிட்ட ஒரு பழக்கம் இது. 

'என்னதான் பிஸினெஸ் நண்பர்கள்னு இருந்தாலும் ஃபேமிலியோடு இருக்கிறதுதான் அவரோட ஃபஸ்ட் சாய்ஸ். காரணம் விழாக்கள் விசேஷ நிகழ்ச்சிகள்ல உறவுகளோடு இருக்கும்போது  நம்ம சந்தோஷம் இரண்டுமடங்காகும். 

அதுவும் என் பசங்க ஆர்ணவ் (6 வயது), பூர்வி ( 9 வயது) இவங்களோடு குழந்தையோடு குழந்தையா மாறி விளையாடுறதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பாட்டு டைம்ல 'ரெஸ்டாரென்ட் விளையாட்டு' விளையாடுவோம். பசங்க ஹோட்டல் வெயிட்டர், கேஸியர் ,  நான் குக், என் ஒய்ஃப் சாப்பிட வர்ற கஸ்டமர் னு ஆளுக்கு ஒரு ரோலை செலக்ட் பண்ணி விளையாடுவோம். 

பசங்க டிபன் ஆர்டர் எடுத்துக்கிட்டுப் போயிட்டு அவங்கக் கேட்டதை வாங்கிட்டு வந்து சர்வ் பண்ணணும். யார் வேணும்னாலும் எந்த ரோல் வேணும்னாலும் பண்ணலாம். ஆனா, அதுல ஒரே கண்டிஷன் சிரிக்காம பண்ணணும். சிரிச்சாங்கன்னா அவங்க அவுட். 
இதுல சரியா பண்ணலைன்னா வெயிட்டர் ஆயிடணும். குழந்தைங்கக்கூட விளையாடும்போது அவங்க அவங்க ரோலைத் தெளிவா பண்ணிடுவாங்க நமக்குதான் சிரிப்பு வந்துடும். இதுமாதிரி டாக்டர் பேஷன்ட், டீச்சர் ஸ்டூடன்ட் விளையாட்டு விளையாடுவோம். நமக்கு இருக்கிற எப்பேர்ப்பட்ட டென்ஷன், ஸ்ட்ரெஸ் எல்லாமே காணாம போயிடும். 

பசங்களைக் கூட்டிக்கிட்டு நீச்சல்குளத்துக்கு  ஸ்விம் பண்ண போறது ரொம்ப முக்கியமான ஸ்ட்ரெஸ் பஸ்டர். ஸ்விம் பண்ணிணோம்னா உடம்பு, மனசு ரெண்டுமே ரொம்பவும் லேசாயிடும் உடம்புல உள்ள உஷணம் சமநிலைக்கு வந்து சீராயிடும். அப்போ மனசு ஃப்ரெஸ்ஸா திங் பண்ணும்.

இதைத் தாண்டி ஜிம்முக்குப் போயிடுவேன். பொதுவா, நான் காலையிலயோ மாலையிலயோ ஜிம்முக்குப் போறதைவிட, நைட் டயத்துல போய் மணிக்கணக்கா எக்ஸர்சைஸ் செய்வேன். யாரும் இல்லாதப்போ நான் என் டிரெய்னர் மட்டும்தான் இருப்போம். அப்போ எக்ஸர்சைஸ் செய்யும்போது  மனசுக்குள்ள ஒரு குஷி பொறந்திடும். நீண்டநேரமும் எக்ஸர்சைஸ் செய்ய முடியும். நிறைவாவும் எக்ஸர்சைஸ் செய்யமுடியும்'' என்று கூறிக்கொண்டே கிளம்பினார் ஜிம்முக்கு.

அடுத்த கட்டுரைக்கு