Published:Updated:

`எல்லாக் கோயில்களும் எல்லாருக்கும்...' - கடவுளின் தேசத்தில் மனிதர்களின் பேரன்பு!

`எல்லாக் கோயில்களும் எல்லாருக்கும்...' - கடவுளின் தேசத்தில் மனிதர்களின் பேரன்பு!
`எல்லாக் கோயில்களும் எல்லாருக்கும்...' - கடவுளின் தேசத்தில் மனிதர்களின் பேரன்பு!

வெள்ளம் சூழ்ந்த 50 வீடுகளைச் சுத்தம் செய்வதுதான் அப்போதைய முதல் முன்னுரிமையாக இருந்தது. அங்கு இருக்கும் மக்கள், தயங்கித் தயங்கி `கோயிலையும் சுத்தம்செய்ய முடியுமா?'ன்னு கேட்டாங்க” என்றவர் கொஞ்சம் அமைதியாகி தொடர்ந்தார்.

``எங்களுடைய நாதன், எங்களோடு சோதிக்கும் இ-யுகத்துக்கு எந்த செய்து என்று. பறையாம் வேண்டிட்டு யான் இங்கு வந்திறங்கியது” - தொலைபேசி மூலம்தொடர்புகொண்டதும், வெட்கப்பட்டு முதலில் பேச மறுத்து அவசரமாகப் பேசிவிட்டு, ``இது ஒரு பெரிய காரிய அல்லா. பெரிய காரியம் ஆக்கவேண்டா'' என்று பேசி முடித்துக்கொண்டார் ஷபீர்.

கேரள வெள்ளத்தில் களமிறங்கி வீடுகளின் சிதிலங்களை, கோயில்களை சுத்தம் செய்துகொண்டிருக்கும் முக்கம், மன்னார்காடைச் சேர்ந்த இரண்டு இஸ்லாமிய இளைஞர் குழுக்களில் ஒருவர்தான் ஷபீர். வயநாட்டைச் சேர்ந்த வென்னியோடே ஸ்ரீமஹாவிஷ்ணு கோயிலையும், மலப்புரத்தில் அமைந்திருக்கும் கோயிலையும் சுத்தமாக்கியிருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். 

`சாஸ்தா கோயில் மூழ்கியதற்கு பெண்களை அனுமதித்ததுதான் காரணம்' என்று சிலரும், `மாந்திரிக முறையும் சாத்தான் வழிபாடும் காரணம்' என வேறு சிலரும் சமூக வலைதளங்களில் அபத்தமாகப் பேசிக்கொண்டிருக்கும் இதே வேளையில்தான், பொறியாளரான நஜுமுதீனைத் தொடர்புகொள்ள முடிந்தது.

``வெள்ள நிவாரண முகாம்களில் இருக்கிறோம். இப்போ இந்த செல்போன் சார்ஜை வீணாக்க முடியாது. அதனால இந்தக் குழுவுல நான் மட்டும் பேசறேன்” என்று தொடங்கினார். ``திங்கட்கிழமை காலையில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக நாங்க வயநாடு புறப்பட்டு வந்துட்டோம். வென்னியோட்டுக்கு வந்து எப்படியெல்லாம் உதவ முடியும் என்பதை முதலில் ஆய்வுசெய்தோம். வெள்ளம் சூழ்ந்த 50 வீடுகளைச் சுத்தம் செய்வதுதான் அப்போதைய முதல் முன்னுரிமையாக இருந்தது. அங்கு இருக்கும் மக்கள், தயங்கித் தயங்கி `கோயிலையும் சுத்தம்செய்ய முடியுமா?'ன்னு கேட்டாங்க” என்றவர் கொஞ்சம் அமைதியாகி தொடர்ந்தார்.

எதுக்காக தயக்கம் `எத்தனை பேரை மொத்தமாக இழந்துவிட்டோம். இந்த நேரத்தில் வேலைசெய்யத் தயங்குபவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது. கோயில் நிர்வாகிகள் சம்மதம் கொடுத்தா, இந்த வேலையை சந்தோஷமா செய்துகொடுக்குறோம்'னு சொன்னோம். சிலர் மட்டுமே பூஜை செய்யும் கர்ப்பக்கிரகத்தையும் நாங்கள் சுத்தம் செய்தோம். மக்களுக்குத் தயக்கமே இல்லை. கோயில் நிர்வாகிகளும் நன்றி சொன்னாங்க. திருச்சூர்ல இந்து மடத்துல, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி இருக்காங்க. இதுதான் யதார்த்தம். இது எப்பவும் தொடரணும். இந்த ஒற்றுமை, எப்போதுமே நிலைப்பதைத்தான் மக்கள் எல்லோரும் விரும்புவாங்க” என்னும் உள்ளடக்கத்தைப் படபடவென மலையாளத்தில் பேசி முடித்தார், அமீரக வேலைக்கு விடுமுறை முடிந்து புறப்பட இருக்கும் நஜுமுதீன். 

மாதவிடாய்க் காலத்தில், தீட்டுப்பட்டதாகப் பெண்களை ஒதுக்கிவைக்கும் மத நடைமுறைக்கு, நேபாள அரசு தடைவிதித்துள்ளது. மீறி பெண்கள் மீது இந்த மூடநடைமுறையைத் திணித்தால் மூன்று மாத சிறை மற்றும் 3,000 ரூபாய் அபராதம் என்றும் அறிவித்திருக்கிறது. தீட்டைக் காரணமாக வைத்து ஒதுக்கிவைக்கப்பட்டபோது அந்தப் பெண்களுக்கு நிகழ்ந்த விபத்தும், அநீதியும் நிறைந்த கதைகள் ஏராளம். அங்கும் சமூகத் தலைவர்கள், பெரியவர்கள், மத போதகர்கள் என்னும் பெயரில் எதிர்மறை, குரூர மனிதர்கள் வாழவே செய்கிறார்கள். வெள்ளம் வரும் என்பார்கள். இயற்கை எந்த வகையில் சீறினாலும், அதற்கு இவர்களின் கற்பனை நடைமுறைகளை தகர்த்ததுதான் காரணம் என்பார்கள். 

சுவாசிக்கும் அனைவருக்கும் கரங்களை நீட்டியே வைத்திருப்பவர்கள் எல்லோரும், கடவுளின் தேசத்தைச் சேர்ந்தவர்கள்தாம். கடவுளின் இருப்பைக் குறித்த விவாதங்கள் யாவும், இந்த அன்பின் வெம்மையில் தேவையற்ற பொருளாய் ஆகிப்போகும். 

அடுத்த கட்டுரைக்கு