Published:Updated:

சக்சஸ் சாக்லேட்!

சக்சஸ் சாக்லேட்!

சக்சஸ் சாக்லேட்!
##~##
சு
ய தொழிலில் நம்பிக்கையோடு ஈடுபட்டால் சாதனைகள் சாத்தியம்தான் என்பதற்கு சுந்தரமூர்த்தியே உதாரணம்! சென்னை தரமணி கெமிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் கணிதவியல் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது வீட்டிலேயே சொந்தமாக சாக்லேட் தயாரித்து விற்று நல்ல வருமானம் ஈட்டுகிறார்.  ''ரிட்டையர்டு ஆன பிறகு சும்மா இருக்கப் பிடிக்கலை. என் மனைவி ரமாமணிக்கு சாக்லேட் செய்யத் தெரியும். அவங்ககிட்ட இருந்து நானும் கத்துக்கிட்டேன். விதவிதமான டிசைன், ருசியான ஃப்ளேவர், சுகாதாரமான கிச்சன் அமைஞ்சா யாரும் சாக்லேட் தயாரிக்கலாம்!  
சக்சஸ் சாக்லேட்!

சிகாகோவுல படிக்கிற என் பொண்ணு, சாக்லேட்டுகளுக்கான சாம்பிள்கள் அனுப்புவா. அந்த டேஸ்ட்டுக்கு இங்க நல்ல மார்க்கெட் இருக்கு. விசேஷ நாட்கள்ல கிலோ கணக்கில் ஆர்டர் குவியும். அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஐ.டி. காலேஜ் கேன்டீன், கிண்டி சுத்துவட்டாரப் பள்ளிகளுக்கு நான் சைக்கிள்லயே போய் சாக்லேட் கொடுத்துட்டு வர்றேன். பால், முந்திரி, பாதாம், லாலிபாப், சாக்கோ ட்ரீட், ரைசிங் டார்க்னு ஏகப்பட்ட வெரைட்டிகள் கொண்டுவர்றோம். சுக‌ர் ஃப்ரீ சாக்லேட்டும் உண்டு. அதேபோல‌ ப‌ழ வகைகளைக் கலந்தும்  சாக்லேட் த‌யாரிக்கிறோம்.

சில வாடிக்கையாளர்கள் 'இந்த வடிவத்தில் சாக்லேட் வேணும்’னு அவங்களா ஒரு டிசைன் சொல்வாங்க. அந்த டைப் அச்சு தேடிப்பிடிச்சு வாங்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். இந்த மாதிரியான வாய்ப்புகளைச் சமாளிச்சுட்டா... சாக்லேட் தயாரிப்பு நல்ல பலன் தரும்!'' -  ஒரு சாக்லேட் பாரை உடைத்து ருசி பார்க்கக் கொடுத்துவிட்டு சிரிக்கிறார் சுந்தரமூர்த்தி.

சக்சஸ் சாக்லேட்!

- பா.பற்குணன்
படங்கள்: கா.கார்த்திக்

அடுத்த கட்டுரைக்கு