Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குதே!

அனுஷா... ஆதிரா... இனியா! - ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குதே!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுஷா... ஆதிரா... இனியா! - ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குதே!

டிஜிட்டல் கச்சேரி

``டேய் தம்பி, ரோஸ்மில்க் வாங்கித் தரேன்டா!’’

அனுஷா... ஆதிரா... இனியா! - ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குதே!``அடுத்து என்னன்னு நான் சொல்றேன்...’’

``உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்... அதானே!’’

``அடிப்பாவிங்களா... ஒரு சினிமா டயலாக்கைப் பேசிப் பார்த்துட்டு இருந்தேன். அது உங்களுக்குப் பொறுக்காதே!’’

``சினிமா டயலாக் தப்பில்ல செல்லம்... ஆனா, அதை யாருகிட்ட பேசிட்டு இருந்தேனு மட்டும் சொல்லு பார்ப்போம்...’’

``இப்ப என்னதான் உங்க பிரச்னை? இந்தக் காதல் கண்மணி லவ் மூட்ல இருந்தா உங்களுக்கெல்லாம் பொறுக்காதே!’’

``அய்யோ, உன் காதலைக் கண்டு நாங்கெல்லாம் மெர்சலாகிட்டோம் புள்ள!’’

`` `மெர்சல்’ படத்துல தளபதியும் ஐஸூவும்  சூப்பர்ல!’’

``கரெக்ட் ஆதிரா. நான்தான் ஐஸூ... அவன் தளபதி!’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அனுஷா... ஆதிரா... இனியா! - ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குதே!

``இப்ப எதுக்குடி இனியா வெறுப்பேத்துற?நீ அவசர அவசரமா கார்னர் சீட் புக் பண்ணிட்டு `மெர்சல்’ படத்துக்கு எஸ்கேப் ஆனப்பவே தெரியும். இப்படியெல்லாம் டயலாக் பேசி எங்களைக் கொல்லப்போறேனு!’’
``டயலாக் மட்டுமில்ல... பாட்டும் பாடுவேன்!’’

``அனு... சீக்கிரம் காதைப் பொத்திக்கோ!’’

``மாச்சோ என்னாச்சோ
அவ touch-இட்டா உயிர் in to two ஆச்சோ
 மாச்சோ match ஆச்சோ
 அவ speak-கிட்டா குயில் கீச்சோ...’’


``இனியா ப்ளீஸ்... முடியலை. உன் கண்கள்ல ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குறது தெரியாம மாட்டிக்கிட்டோம்.’’

``இனிமே நான் ரொமான்டிக் மூட்ல இருக்குறப்ப டிஸ்டர்ப் பண்ணுவீங்களா?’’

``இனியா கண்கள்ல தெரியுறது ஹார்ட்டின் இல்ல. கான்டாக்ட் லென்ஸ். நல்லா உத்துப் பாரு...’’

``அட, ஆமாம். என்ன செல்லக்குட்டி... புது ஸ்டைலா?’’

``ஆமாம் டார்லிங்ஸ். கண்ணாடியைவிட இதான் பெஸ்ட்னு தோணுச்சு. அதான் வாங்கிட்டேன். நமக்கு அழகு, கம்ஃபர்ட் ரெண்டும் முக்கியம்ல!’’

``ஆஹான்!’’

``ஆன்லைன் பர்ச்சேஸ்ல இனியாவை அடிச்சுக்க முடியாது !’’
``ஆமா... நீ ஆன்லைன்ல ஆர்டர் பண்றதையெல்லாம் வாங்கி வைக்கிறதுதான் உங்க அம்மாவுக்கு முழு நேர வேலையா இருக்கும் போல!’’

``இனிமே அதுக்கு அவசியம் இருக்காது. ஸ்மார்ட் லாக்கை வீட்ல ஃபிக்ஸ் பண்ணிட்டா போதும்... ஆன்லைன் கம்பெனியி லேருந்து டெலிவரி பண்றவங்க வீட்டுக்கு வர்றப்ப, கேமரா மூலமா டிடெக்ட் பண்ணி தானாவே கதவு திறந்துடும். அப்புறம் டெலிவரி முடிஞ்சதும் கதவு சாத்திக்கும்.’’

``இதென்ன மேஜிக் மாதிரி இருக்கு!’'

``சில்லாக்கி டும்!’’

``அனு... இந்த இனியா எப்பவும் இப்படித்தான். எதையாவது கதையடிச்சு விட்டுட்டு இருப்பா... நாம தீபிகாவைப் பார்க்கப் போலாமா?’’

``தீபாவளிக்குப் பட்டாசு வெடிச்சதுல உடம்பெல்லாம் தீக்காயம். நல்லவேளை பெரிய ஆபத்தில்ல.’’

``பக்கத்துல ஒரு பக்கெட் முழுக்க தண்ணி இருந்ததாலதான் அவ அன்னிக்கு தப்பிச்சா.’’

``நாம் என்னதான் படிச்சாலும், இந்த மாதிரி ஒரு எமர்ஜென்சி டைம்ல எப்படி காப்பாத்துறதுன்னு தெரியாம பல நேரங்கள்ல தடுமாறிடுறோம்.’’

``உண்மைதான் அனு. உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல்ல, முதலுதவி கொடுக்குறதுக்கு போதுமான பயிற்சியை நமக்கு பிராக்டிக்கலா யாரும் கத்துக்கொடுக்கறதில்லை.’’

``விடு ஆதிரா... போன வாரம் முழுக்க நியூஸ் சேனல்ஸ் எல்லாம் பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு.’’

``சரி, கூல் பேபி... தீபிகா வீட்டுக்குக் கிளம்பலாம்.’’

- கச்சேரி களைகட்டும்...

அனுஷா... ஆதிரா... இனியா! - ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குதே!

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது, இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குதே!

னி ஆளில்லா வீடுகளிலும் கதவைத் திறந்து டெலிவரி செய்யும் அமேசான்!
http://bit.ly/2zaY7e6

அனுஷா... ஆதிரா... இனியா! - ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குதே!

தீ பற்றிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்..? முதலுதவி முதல் சிகிச்சை வரை A டு Z
http://bit.ly/2lldLNM

அனுஷா... ஆதிரா... இனியா! - ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குதே!

ண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ்... எது பெஸ்ட்?
http://bit.ly/2yVvY9D