Published:Updated:

''வீட்டில் சொல்லாத கைகலப்பு ரகசியம்..."

என் ஊர்: நுங்கம்பாக்கம்

''வீட்டில் சொல்லாத கைகலப்பு ரகசியம்..."

என் ஊர்: நுங்கம்பாக்கம்

Published:Updated:
''வீட்டில் சொல்லாத கைகலப்பு ரகசியம்..."
##~##
மிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், தன்னை செதுக்கி வளர்த்த நுங்கம்பாக்கத்தைப் பற்றி மனம் திறக்கிறார் இங்கே...

''பூர்வீகம் ஆந்திரா. ஆனா, பிறந்து வளர்ந்தது எல்லாம் நுங்கம்பாக்கம், கார்ப்பரேஷன் 2-வது தெரு வீட்டில் தான். வள்ளுவர் கோட்டம், டென்னிஸ் ஸ்டேடியம், சாஸ்திரி பவன், பத்ம சேஷாத்ரி பள்ளி, லயோலா காலேஜ்னு நுங்கம்பாக்கம்தான் என்னைத் தாலாட்டிய தொட்டில்.

''வீட்டில் சொல்லாத கைகலப்பு ரகசியம்..."

பஸ் ஸ்டாண்டில் இருந்து கொஞ்ச தூரம் நடந்தால், தி.நகர். முரசொலி அலுவலக மேம்பாலம் ஏறி இறங்கினால், கோடம்பாக்கம். பாம் குரோவ் ஹோட்டலைக் கடந்தால், அண்ணா சாலை... இந்தப் பக்கம் லயோலா தாண்டினால், பூந்தமல்லி நெடுஞ்சாலைனு எப்பவும் பரபரப்பா இருக்கிற பகுதிகளால் சூழப்பட்டு இருந்தாலும், அதற்கான எந்த அறிகுறியுமே இல்லாமல் அமைதியாக இருப்பது நுங்கம்பாக்கத்தின் சிறப்பு. மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள சாஸ்திரி பவன், மகாலிங்கபுரம்-புஷ்பா நகரை ஒட்டியுள்ள தமிழக அரசின் டென்னிஸ் ஸ்டேடியம் எல்லாம் நுங்கம்பாக்கத்தின் பெருமை பேசுபவை.

''வீட்டில் சொல்லாத கைகலப்பு ரகசியம்..."

வள்ளுவர் கோட்டம், சுதந்திர தினப் பூங்கா, அருகிலேயே ஒரு அம்மன் கோயில். இதுதான் எங்கள் பள்ளியின் சுற்றுவட்டாரம். சுற்றுலாப் பயணிகள், அடிக்கடி நடக்கும் கண்காட்சிக்கு வரும் பிரபலங்கள், பார்வையாளர்கள், அரசு விழாக்கள் என எப்போதும் பரபரப்பாக இயங்கும் வள்ளுவர் கோட்டம்.  

''வீட்டில் சொல்லாத கைகலப்பு ரகசியம்..."

டேபிள் டென்னிஸ் பயிற்சி நேரம் போக கிரிக்கெட், பேஸ்கட் பால் விளையாடிக்கொண்டு இருப்பேன். ஒருமுறை கிளாஸைக் கட் அடித்துவிட்டு சுவர் ஏறிக் குதித்து சுதந்திர தினப் பூங்காவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தோம். என் ராசி நான் அடித்த பந்து, பிரின்சிபால் அறைக்குள் விழுந்துவிட்டது. எனக்கு அடியும் விழுந்தது. அதை இப்பவும் சொல்லிச் சொல்லிக் கிண்டல் அடிப்பார்கள் என் நண்பர்கள்.

''வீட்டில் சொல்லாத கைகலப்பு ரகசியம்..."

எங்கள் தெருவில் இருக்கும் டீக்கடைதான் எங்கள் கேங்கின் டாப் ஸ்பாட். லீவு விட்டாச்சுன்னா அங்கேயே பழியாக்கிடப்போம். ஆனால், எவ்வளவு நேரம் இருந்தாலும் ஒரு ஆளுக்கு ஒரு டீக்கு மேல் வாங்க மாட்டோம். சமயங்களில் நாள் முழுக்க நின்னுட்டு ஒரே ஒரு டீதான் வாங்கியிருப்போம். அடிச்சு துரத்தாத குறையாக, 'உங்களுக்கு வேற வேலை வெட்டியே இல்லையா? இடத்தைக் காலி பண்ணுங்கப்பா’னு அதட்டி விரட்டு வார் டீக்கடைக்காரர். கலகலன்னு கலாய்ச்சுக்கிட்டே இருப்போம். அப்படி ஒரு கலாய்ப்பு, ஒரு சமயம் கைகலப்பானதும் உண்டு. அதை இன்றுவரை நான் வீட்டில் சொன்னது இல்லை.

லயோலாவில் சேர்ந்த பிறகு வேறொரு உலகத்துக்குள் நுழைந்தது போல் இருந்தது. லயோலாவைக் கல்லூரி எனச் சொல்வதைவிட, உலகின் மினியேச்சர் எனச் சொல்லலாம். இங்கு வராண்டாகூட வகுப்பறையாகும். வகுப்பு நேரம் போக மீதி நேரங்களில் லயோலா அருகில் உள்ள 'குக்கீஸ் காபி ஷாப்’பில் இருப்பேன். வீட்டுக்குப் போகவே மனசு இருக்காது. எப்படியோ காமர்ஸ் படித்து முடித்தேன். இன்று லயோலாவும் நிறைய மாறிவிட்டது. நானும் முன்னாள் மாணவன் ஆகிவிட்டேன். ஆனாலும், இன்றும் அங்கு படிப்பதாகவே உணர்கிறேன். பயிற்சி மற்றும் போட்டிகளுக்காக வெவ்வேறு நாடு களுக்குப் போவேன். அப்போதெல்லாம் மனசில் 'நீங்க திருந்தவே மாட்டீங்கடா?’ என்று கோப முகம் காட்டும் பிரின்சிபால், 'இன்னும் எவ்வளவு நேரம்தான் ஆறிப்போன டீயை உறிஞ்சிக்கிட்டே இருப்பீங்க?’ என அலுத்துக்கொள்ளும் டீக்கடைக்காரர், சுதந்திர தினப் பூங்கா வாசலில் பட்டாணி விற்கும் பெரியம்மா என, நுங்கம்பாக்க நினைவுகளே மேலோங்கும். திடுக்கிட்டு விழிப்புத் தட்டினால்,  'அந்தக் கனவு இன்னும் கொஞ்ச நேரம் நீடித்திருக்கலாமே!’ என மனம் ஏங்கும். அந்த ஏக்கம் கனவில் மட்டும் அல்ல... நினைவிலும் உண்டு!'' 

  • 2004&ல் கோலாலம்பூர் காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு, முதல் தங்கம் வென்று தந்த பெருமை பெற்றவர்!
     
  • 2004&ம் ஆண்டு அர்ஜுனா விருது பெற்றிருக்கிறார் சரத் கமல்!
     
  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பணிபுரியும் இவருடைய ஸ்பான்சரும் அதே நிறுவனம்தான்!
     
  • மனைவி ஸ்ரீபூரணி. ஒரே மகள் சுயாஷா! 

- இர.ப்ரீத்தி
படங்கள்:வி.செந்தில்குமார்