Published:Updated:

விபத்தில்லா விமானம்!

விபத்தில்லா விமானம்!

விபத்தில்லா விமானம்!
விபத்தில்லா விமானம்!
விபத்தில்லா விமானம்!

'விமான விபத்துக்களை தடுப்பதற்கான நவீன தொழில்நுட்பம்!’-  தேசிய அளவில் சிறந்த கண்டுபிடிப்புக்கான அங்கீகாரம் பெற்ற சென்னை மாணவி மேனகாவின் சாதனை இது!

''செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிருக்கேன். விமான விபத்தைத் தடுக்க உதவும் சாஃப்ட்வேர்தான் என் கல்லூரி புராஜெக்ட். மோசமான வானிலை, பறக்கும் பாதை குளறுபடிகள்தான் விமான விபத்துகளுக்கான முக்கியக் காரணங்கள். ஒரு விபத்து எதனால் நேர்ந்தது என, தற்போது இருக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிக்க ரொம்ப நாட்கள் ஆகு மாம். இதன் சிக்கலான வடிவமைப்பும் இதற்கான சோதனைக்கூடங்கள் உலகில் ஏழு இடங்களில் மட்டும் இருப்பதும்தான் அதற்குக் காரணம். இதைத் தவிர பறக்கும் பாதையைக் காட்ட, அதை ஒழுங்கு செய்ய பைலட்டுக்கு உதவும் கருவிகள் அனைத்தும் குழப்பியடிக்கும் பைனரி சிஸ்டத்தில் அமைக்கப்பட்டு உள்ளதும் விபத்துக்கான முக்கியக் காரணம்.  

##~##

உதாரணத்துக்கு, சென்னை விமான நிலையம் என்றால் 'சென்னை’ எனக் குறிப்பிடாமல் அதை ஓர் எண் மூலம் குறிப்பிடுவார்கள். இதேபோல்தான் உலக நகரங்களுக்கு எண்கள் ஒதுக்கி இருப்பார்கள். இதற்குப் பதிலாக, நேரடியாக அந்தந்த ஊர்களின் பெயர்களையே குறிப்பிடும் என்னுடைய மென்பொருளை விமானத்தில் பொருத்திவிட்டால் தாங்கள் இருக்கும் இடம், செல்லும் பாதையை விமானிகள் எளிதாக அறிந்துகொள்ள முடியும். விமானச் சோதனை நடத்தும் 'துளு’ நிறுவனத்திடம் என் கண்டுபிடிப்புப் பற்றி சொன்னபோது, பல கட்ட சோதனைக்குப் பிறகு 'இது சாத்தியம்தான்’ என்று அறிவித்தனர். தவிர உலகின் அனைத்து விமான ஓடுதளங்களின் குறியீட்டு எண் உள்ளிட்ட தகவல் களை ஆய்வுக்கு அளித்தனர். இந்த மென்பொருளை வடிவமைக்க 33 ஆயிரம் லைன் 'ஜாவா’ கோடிங்குகளைப் பயன்படுத்தி உள்ளேன்!'' சந்தோஷமாகப் பேசுகிறார் மேனகா.

பா.பற்குணன்,
படங்கள்: கா.கார்த்திக்

அடுத்த கட்டுரைக்கு