Published:Updated:

வாழவைக்கும் சென்னைக்கு ஜே!

வாழவைக்கும் சென்னைக்கு ஜே!

வாழவைக்கும் சென்னைக்கு ஜே!

வாழவைக்கும் சென்னைக்கு ஜே!

Published:Updated:
##~##

சென்னையின் சமீப அடையாளங்களில் ஒன்று... வட இந்தியத் தொழிலாளர்கள்! சென்னையின் சகல திசைகளிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள் இவர்கள். அதிலும் கூலித் தொழிலாளியாக இருக்கும் ஆண்களுக்குச் சளைக்காமல் எல்லை தாண்டி வந்து பணிபுரிந்துகொண்டு இருக்கிறார்கள் 'சர்க்கஸ் சாயல்’ பெண்கள்!

வாழவைக்கும் சென்னைக்கு ஜே!

அஸ்ஸாம், மணிப்பூர் என வடகிழக்கு மாநிலப் பெண்களான இவர்கள், கண்ணியமான சீருடை அணிந்து அழகு நிலையங்கள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் என எல்லா இடங்களிலும் சேவைசெய்துகொண்டு இருக்கிறார்கள். மற்ற நேரங்களில் நடிகைகளுக்குச் சவால் விடும் இறுக்க நெருக்கமான ஆடைகள் அணிந்து, சென்னை வீதிகளில் வலம் வருகிறார்கள். இவர்களுடைய சென்னை வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று அறிந்துகொள்ள, ஒரு ஹாஸ்டலுக்கு  விசிட் அடித்தோம்.

''ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கமிட்மென்ட். ஆனா, எங்களுக்கு ஓவர் கமிட்மென்ட்ஸ். அதான் 10-ம் கிளாஸ் பாஸ் பண்ண கையோட சென்னைக்கு ட்ரெயின் ஏறிட்டோம்!'' - தெளிவாகத் தமிழ்ப் பேசும் நீத்தா, சென்னைக்கு வந்து ஏழு வருடங்கள் ஆகிறதாம். ஹிந்தி, மணிப்பூரி என மற்றவர்களின் கலவையான பேச்சை நமக்கு மொழிபெயர்த்தார்.

''எங்களுக்கு அழகு உணர்ச்சி ஜாஸ்தி. அதனாலேயே எங்களால் சுலபமா பியூட்டி பார்லர்களில் வேலைக்குச் சேர முடியுது. மத்தவங்க எப்படினு தெரியலை... நான் சென்னையில்தான் செட்டில் ஆகப்போறேன். என் பாய் ஃப்ரெண்டைச் சந்திச்ச மெரினா பீச்தான் இங்கே எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம்!'' என்று வெட்கப்படுகிற பிரதானாவைத் தொடர்கிறார் பிபியானா. (நல்லா வெச்சிருக்காங்கப்பா பேரு!)

வாழவைக்கும் சென்னைக்கு ஜே!

''மெரினா, பெசன்ட் நகர், கோல்டன் பீச்னு சென்னையில் எல்லா பீச்சும் எங்களுக்குப் பிடிக்கும். பெசன்ட் நகர் அஷ்ட லட்சுமி கோயில் ரொம்பவே இஷ்டம். தமிழ்ப் படம் அதிகம் பார்க்க மாட்டோம். ஆனா, டி.வி.பார்ப்போம். நாங்க எல் லாரும் விஜய் ஃபேன்ஸ். 'டாடி மம்மி வீட்டில் இல்ல’ எங்களுக்குப் பிடிச்ச பாட்டு.  பிடிச்ச படம் 'கில்லி!'' விஜய்யைச் சிலாகிக்கிறார் பிபியானா.

வாழவைக்கும் சென்னைக்கு ஜே!

''கல்யாணப் பொண்ணுக்கு மேக்-அப் போட வரும்போது கவனிப்போம். உங்க பாய்ஸ் வேட்டி கட்டுற ஸ்டைலே தனிதான். ஆனால், எங்களைப் பார்த்ததும் கமென்ட் அடித்து கிண்டலடிக்கிறது  பிடிக்காது. இந்தியாவுல மத்த நகரங்களை விட சென்னையில்தான் பார்லர்கள் அதிகம். அதனால் எங்களுக்கு இங்கேதான் வாய்ப்புகளும் அதிகம். அதுவும் போக சென்னை ரொம்பப் பாதுகாப்பான நகரம்!'' என்கிறார் நமீதா.

''நல்லா பாருங்க... நான் தமிழ்ப் பொண்ணு மாதிரியே இருக்கேன்ல!'' என, 7ஆம் அறிவு டாங்லீ எஃபெக்ட்டில் ஆரம்பித்தார் ரெஜினா. ''சென்னை வர்றதுக்கு முன்ன திருப்பதில வேலை பார்த்தேன். அங்க சாப்பாடு சரியில்லை. இங்க பிரமாதமான சாப்பாடு. ஆனா, ஒரு சந்தேகம்... சாதத்தை எப்படி கொழம்புல ஊறவெச்சு பிசைஞ்சு சாப்பிடுறீங்க? எனக்குத் துப்பட்டா ஒழுங்கா போட்டுக்கக் கத்துக் கொடுத்ததே தமிழ்ப் பொண்ணுங்கதான்!'' என்று பூரிக்கிறார் ரெஜினா.

''எங்க ஊர்ல வேலைவாய்ப்புகள் பெருசா இல்லை. 10-ம் கிளாஸுக்கு மேல படிக்க வசதியும் இல்லை. இங்க அழகு அழகா டிரெஸ் பண்ணிட்டு நல்ல சாப்பாடு சாப்பிட்டுட்டு வசதியா இருக்கோம். ஆனா, எங்க ஊர்ல இருந்தவரை நல்ல டிரெஸ் போட்டதே இல்லை. சின்ன வயசில் நாங்க போட்டுக்கணும்னு ஆசைப்பட்ட டிரெஸ் எல்லாம் இப்பப் போட்டு சந்தோஷப்படுறோம். ஊருக்குப் போகும்போது இங்கே இருந்து நிறைய டிரெஸ் வாங்கிட்டுப் போவோம்!''  என மெல்லிய குரலில் முடித்தார் சலோமி.

- அ.லெனின்ஷா
படங்கள்: ப.சரவணகுமார்