Published:Updated:

``வேற லெவல் மாற்றங்களுடன் களமிறங்கும் கூகுள் க்ரோம்!” - 10வது ஆண்டு ஸ்பெஷல்

``வேற லெவல் மாற்றங்களுடன் களமிறங்கும் கூகுள் க்ரோம்!” - 10வது ஆண்டு ஸ்பெஷல்
``வேற லெவல் மாற்றங்களுடன் களமிறங்கும் கூகுள் க்ரோம்!” - 10வது ஆண்டு ஸ்பெஷல்

``வேற லெவல் மாற்றங்களுடன் களமிறங்கும் கூகுள் க்ரோம்!” - 10வது ஆண்டு ஸ்பெஷல்

10 ஆண்டுகள் பின்னோக்கி செல்வோம், பிரவுசர் உலகில் மோசில்லா ஃபயர்ஃபாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வெளுத்துக்கட்டிய காலம் அது. அந்நேரத்தில் இவற்றுக்குப் போட்டியாக களம் கண்டது கூகுளின் புதிய பிரவுசரான க்ரோம். அன்று ஆரம்பித்த வளர்ச்சி, இன்று முன்னணி பிரவுசராக இருக்கிறது க்ரோம். க்ரோமின் இந்த 10வது ஆண்டு நினைவைக் கொண்டாடும் விதமாக பிரவுசரில் புதிய மாற்றங்கள் பலவற்றை கொண்டுவந்துள்ளது கூகுள் நிறுவனம். 

69வது க்ரோம் வெர்ஷனான இது மெட்டிரியல் டிசைன் என்ற புதிய வடிவமைப்பு நடைமுறையைப் பின்பற்றி அழகிய மற்றும் எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட் மேனேஜர், துல்லியமான ஆட்டோ-ஃபில், கூடுதல் பாதுகாப்பு எனப் பல மாற்றங்கள் இருக்கும் இந்த வெர்ஷனை விண்டோஸ், மேக், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என அனைத்துச் சாதனங்களுக்கும் அப்டேட்டாக கொடுத்துள்ளது கூகுள். 

தோற்றம் 

டேப்களின் வடிவம் தொடங்கி ஐகான்கள் வரை அனைத்தையுமே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய தோற்றம் மக்களுக்கு டேப்கள் இடையே சென்று வர மிகவும் சுலபமாக இருக்கும் என்று நம்புகிறது கூகுள். பல வருடங்களாக ஒரே டிசைனை பார்த்துப் பழகிய நமக்கு இந்தப் புதிய தோற்றம் சற்று உற்சாகத்தை அளிக்கும் விதத்திலேயே இருக்கிறது. மேலும் பின்னணியில் இருக்கும் படம் அல்லது நிறத்தை முன்பை விட எளிதான முறையில் மாற்ற முடியுமாம் இந்த வெர்ஷனில். 

மேம்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட் மேனேஜர் 

லாகின் வசதிகளைப் பாதுகாப்பானதாக்க க்ரோம் எளிதில் கணிக்கமுடியாத எளிதாக ஹேக் செய்யமுடியாத பாஸ்வேர்ட்களை எந்தத் தளத்தில் கணக்கு தொடங்கும்போதும் பரிந்துரைக்கிறது அதன் மேம்படுத்தப்பட்ட தற்போதைய பாஸ்வேர்ட் மேனேஜர். மேலும், இது அந்த பாஸ்வேர்ட்களையும், கிரெடிட் கார்டு விவரங்களையும் கணக்குகளுடன் சின்க் செய்யவும் உதவுகிறது. இந்தத் தகவல்கள் அவரவர் கூகுள் கணக்குகளில் சேமிக்கப்படும். 

ஆம்னிபாக்ஸ் அப்டேட் 

அது என்ன ஆம்னிபாக்ஸ் என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம். க்ரோமில் மேலே இருக்கும் பாக்ஸில் கூகுளில் தேட வேண்டியவற்றையும் டைப் செய்யலாம், செல்லவேண்டிய இணையதள முகவரியையும் டைப் செய்யலாம், இதையே ஆம்னிபாக்ஸ் என்றழைக்கிறது கூகுள். தற்போது இதிலேயே நீங்கள் தேடுவதைப் பற்றிய சிறிய தகவல்களைத் தருகிறது க்ரோம். இதை 'Smart Answers' என்று கூறுகிறது க்ரோம். வருங்காலத்தில் உங்கள் டிரைவ் ஃபைல்களையும் இந்தப் பாக்ஸில் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது கூகுள்.

எளிதான தங்களுக்கு ஏற்றது போல மாற்றும் வசதி 

இனி பயன்பாட்டாளர்கள் எளிதாக இணையதளங்களின் ஷார்ட்கட்களை உருவாக்கமுடியும். ஃபார்ம்களை நிரப்ப உதவும் ஆட்டோ-ஃபில் வசதியும் இன்னும் துல்லியமாக இருக்குமாம். 

தோற்றத்தில் மட்டுமல்லாமல் பின்னணியிலும் எக்கச்சக்க மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது க்ரோம். பிரவுசர்களுடனேயே விளம்பரத்தைத் தடுக்கும் ப்ளாக்கர்கள், சைட்-ஐசோலேஷன் என்ற மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு முறை, ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டிக்கான கூடுதல்சப்போர்ட் எனத் தோற்றத்தை தாண்டியும் பல அப்டேட்கள் பெற்றுள்ளது புதிய க்ரோம். சோதனைகளுக்காகப் பிரத்தியேகமாக விடப்பட்ட க்ரோம் பீட்டா வெர்ஷன்களைப் பயன்படுத்தியவர்கள் இந்த மாற்றங்களை ஏற்கெனவே பார்த்திருப்பர். சமீபத்தில் வெளிவந்த மொஸில்லாவின் குவான்டம் பிரவுசர் கொஞ்சம் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த மாற்றங்கள் மூலம் பிரவுசர் உலகில் மீண்டும் தன் இடத்தைத் திடமாக க்ரோம் தக்கவைக்கும் என நம்பலாம்.

அடுத்த கட்டுரைக்கு