Published:Updated:

கொஞ்சம் உணவு... நிறைய நாட்டுப்பற்று!

கொஞ்சம் உணவு... நிறைய நாட்டுப்பற்று!

கொஞ்சம் உணவு... நிறைய நாட்டுப்பற்று!

கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது 'அஞ்சு சட்னி கடை’. சட்னியுடன் நாட்டுப் பற்றையும் சேர்த்துப் பரிமாறுகிறார் கடையின் உரிமையாளர் ராஜேஷ்.

##~##
ஹோட்டலில் திரும்பிய பக்கம் எல்லாம் தேசத் தலைவர்களின் புகைப்படங்கள், முக்கிய வரலாற்றுக் குறிப்புகள், உலகில் நடந்த போர்களைப் பற்றிய படங்களுடன் கூடிய விவரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

''25 வருஷத்துக்கு முன்னாடி ஓசூரில் ஆறு ஹோட்டல்கள் மட்டுமே இருந்தன. அப்பதான் என் அப்பா இங்கே கடை ஆரம்பிச்சார். அந்தக் காலகட்டத்தில் ஓசூர், பெரிதாக வளர்ச்சி அடையாத ஊர். வெறும் சோறு, ரசம் மட்டும்தான் கிடைக்கும். இட்லி, தோசை எல்லாம் பண்டிகைக் கால உணவுகள்.

அப்பா கடையை ஆரம்பிச்ச உடனே, குறைந்த விலையில் இட்லி, தோசை, பலவகை தானியங்களை அரைத்து செய்த களி... இவற்றுடன் கொத்துமல்லி, புதினா, தேங்காய், தக்காளி, வரமிளகாய் என ஐந்து வகை சட்னிகளை அறிமுகப்படுத்தினார். 25 வருஷத்துக்கு முன்னாடி இது ரொம்பப் பெரிய விஷயம். அப்பா சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட தியாகி. அதனால், காந்தி, நேரு, பகத்சிங் படங்களை மாட்டிவைத்தார். காந்தியின் 'சத்திய சோதனை’ புத்தகம் கடையில் இருக்கும். சாப்பிட வருபவர்கள் எடுத்துப் படிக்கலாம்.

கொஞ்சம் உணவு... நிறைய நாட்டுப்பற்று!

அப்பாவுக்கு வயதாகிவிட்டதால், இப்போது நான் கடையைப் பார்த்துக் கொள்கிறேன். அப்பா தொடங்கிவைத்த ஐந்து வகை சட்னி இப்போதும் உண்டு. இரண்டு இட்லி பார்சல் வாங்கினாலும் ஐந்து சட்னிகளையும் தனித்தனியாகக் கட்டிக் கொடுப்போம். எனக்கு சிறு வயது முதல் ராணுவத்தில் சேர ஆசை. ஆனால்,  ஒரு விபத்தில் கால் உடைந்துவிட்டதால், அந்த ஆசை நிறைவேறவில்லை. அதனால், என்ன, என் நாட்டுப்பற்றை இப்படி வெளிப்படுத்துகிறேனே!'' அழகாகப் புன்னகைக்கிறார் ராஜேஷ்!

  • கேரள சினிமா நட்சத்திரங்களுக்கு ஒரு சென்டி-மென்ட். தங்களது திருமணம் நிச்சயமான பின் சைலன்டாக ஒரு நாள் கோவை சித்தாபுதூரில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு வந்து ஸ்பெஷல் வழிபாடு நடத்திச் செல்வார்கள். சமீபத்தில் ஒருநாள் நயன்தாரா இங்கே வந்ததாகச் சொல்கிறார்கள்!

கு.சக்திவேல்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

அடுத்த கட்டுரைக்கு