Published:Updated:

கார் வாங்கப் போறீங்களா... வெயிட் ப்ளீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கார் வாங்கப் போறீங்களா... வெயிட் ப்ளீஸ்!
கார் வாங்கப் போறீங்களா... வெயிட் ப்ளீஸ்!

ஹூண்டாயைப் பொறுத்தமட்டில், எலீட் i20 மற்றும் க்ரெட்டா ஆகிய கார்களின் பேஸ்லிஃப்ட் மாடல்களை இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முன்பு போலவே, 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்குப் பிறகு, கார் நிறுவனங்கள் வரிசையாகத் தமது புதிய தயாரிப்புகளை வரிசையாகக் களமிறக்கி வருகின்றன. இதில் பேஸ்லிஃப்ட்கள், ஸ்பெஷல் மற்றும் லிமிடெட் எடிஷன்கள், புதிய வேரியன்ட்களும் அடக்கம்.  அதேபோல பண்டிகை காலத்தில் தமது புதிய மாடல்களைக் கார் நிறுவனங்கள் விற்பனைக்குக் கொண்டு வருவதும் வாடிக்கையான நிகழ்வுதான். எனவே தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் நேரத்தில் களமிறங்கப்போகும் கார்கள் என்ன (சான்ட்ரோ உட்பட) என்பதைப் பார்ப்போம். நீங்கள் புதிய கார் வாங்கும் முடிவில் இருந்தால், இன்னும் சில நாள்கள்/மாதங்கள் காத்திருந்தால், புத்தம் புதிய காரை சொந்தமாக்கிக் கொள்ளலாம்!

இந்த ஆண்டில் கார் நிறுவனங்கள் இதுவரை சாதித்திருப்பது என்ன?

ரெனோ க்விட் மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகியவற்றை, இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். டாடா மோட்டார்ஸ் ஒருபுறம் டிகோர் Buzz எனும் ஸ்பெஷல் எடிஷனுடன், நெக்ஸானில் AMT ஆப்ஷனைச் சேர்த்துவிட்டது. மறுபுறத்தில் ஃபோர்டு புதிய ஃப்ரிஸ்டைல் காருடன், எக்கோஸ்போர்ட்டில் 2 புதிய எடிஷன்களை வெளியிட்டிருக்கிறது. மாருதி சுஸூகி சியாஸும் பேஸ்லிஃப்ட்தான் என்றாலும், மேம்படுத்தப்பட்ட டிசைன் - புதிய இன்ஜின் - SHVS தொழில்நுட்பம் எனப் புதிய அம்சங்களையும் தன்வசப்படுத்தி இருந்தது. மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட்டையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஹூண்டாயைப் பொறுத்தமட்டில், எலீட் i20 மற்றும் க்ரெட்டா ஆகிய கார்களின் பேஸ்லிஃப்ட் மாடல்களை இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. டொயோட்டா நிறுவனம் யாரிஸ் செடானைக் களமிறக்கியதும் தெரிந்ததே. XUV 5OO காரின் பேஸ்லிஃப்ட் மற்றும் மராஸோவை வெளியிட்டிருக்கிறது மஹிந்திரா. 

டட்ஸன் கோ மற்றும் கோ ப்ளஸ் - செப்டம்பர் 2018

தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களைவிட, ஸ்டைலான தோற்றத்தில் வரவிருக்கிறது கோ மற்றும் கோ ப்ளஸ் காரின் பேஸ்லிஃப்ட் மாடல்கள். கடந்த மே மாதத்தில் உலகளவில் அறிமுகமான இவை, 14 இன்ச் அலாய் வீல்கள் - பாடி கிட் - LED DRL - இண்டிகேட்டருடன் கூடிய ரியர் வியூ மிரர்கள் - அகலமான க்ரோம் கிரில் உடன் அசத்தின. கேபினைப் பொறுத்தவரை, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் - 6.75 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் - புதிய ஏசி வென்ட்கள் - 4 கதவுகளுக்கும் பவர் விண்டோஸ் - 1 காற்றுப்பை & ஏபிஎஸ் - எலெக்ட்ரிக் மிரர்கள் - ஆட்டோ ஹெட்லைட்ஸ் எனப் புதிய வசதிகள் இருந்தன. கோ காரில் CVT கியர்பாக்ஸும், கோ ப்ளஸ்ஸில் டூயல் டோன் கேபினும் பிரத்தியேகமாக இடம்பெற்றுள்ளன. இதில் எவை இந்திய மாடலில் இருக்கும் என்பது விரைவில் தெரிந்துவிடும். இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மாற்றமில்லை.

ஹோண்டா CR-V: அக்டோபர் 2018

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் சிவிக் மற்றும் அமேஸ் ஆகிய செடான்களுடன் ஹோண்டா காட்சிப்படுத்திய ஒரே எஸ்யூவி, புதிய CR-Vதான். மூன்றாம் தலைமுறை மாடலான இதில், 7 சீட்கள் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் இருப்பது பெரிய ப்ளஸ். ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ், மிட்சுபிஷி அவுட்லேண்டர் ஆகிய கார்களுடன் போட்டிபோடும் இந்த காரில், வழக்கமான 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் உண்டு. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட இதன் விலை அதிகமாக இருக்கும் என்றாலும், அதிக இடவசதி - ஸ்மூத் & பவர்ஃபுல் இன்ஜின் - நல்ல கட்டுமானத் தரம் - சிறப்பான பர்ஃபாமென்ஸ் & மைலேஜ் என அதை நியாயப்படுத்தும் அம்சங்கள் காரில் இருக்கின்றன.

ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் - செப்டம்பர் 2018

ஃப்ரிஸ்டைல் காரில் இடம்பெற்றிருந்த பல அம்சங்களை, ஃபிகோ மற்றும் ஆஸ்பயரில் பொருத்த இருக்கிறது ஃபோர்டு. எனவே அதில் இருந்த புதிய 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் இன்ஜின் -  Sync 3 உடனான 6.5 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் - டூயல் டோன் டேஷ்போர்டு ஆகியவை, இந்த கார்களிலும் பயன்படுத்தப்படும். சர்வதேச மாடலில் புதிய பம்பர்கள் - க்ரோம் கிரில் - டைமண்ட் கட் அலாய் வீல்கள் - 6 காற்றுப்பைகள் - டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை இருந்த நிலையில், அவை அப்படியே இந்திய மாடலில் இருக்கும் என நம்பலாம். அமேஸ் மற்றும் ஸ்விஃப்ட்டின் அதிரடியை ஃபோர்டு சமாளிக்க கைவசம் வழி வைத்திருக்கிறது!

மாருதி சுஸூகி எர்டிகா - நவம்பர் 2018

தற்போது இருக்கும் மாடலைவிட, நீளம் மற்றும் அகலத்தில் வளர்ந்திருக்கிறது புதிய எர்டிகா. இதனால் கடைசி வரிசையில் இடவசதி நன்றாக இருக்கலாம். ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், புதிய கிரில், ஸ்போர்ட்டியான பம்பர்கள், ளேட், LED டெயில் லைட், 16 இன்ச் அலாய் வீல்கள் என வெளியே ஏகப்பட்ட புதிய அம்சங்கள் இருக்கின்றன. இரண்டாம் தலைமுறை எர்டிகா  Heartect  ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டுள்ளதால், முன்பைவிட காரின் எடை குறைந்திருக்கிறது. இதனுடன் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - 6.8 இன்ச் ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் - கிளைமேட் கன்ட்ரோல் ஏசி - ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் எனக் கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மஹிந்திரா மராஸோவுக்குப் போட்டியாக வரப்போகும் இது, மைலேஜ் மற்றும் விலை விஷயத்தில் ஆச்சர்யத்தை அளிக்கலாம்!

ஹூண்டாய் சான்ட்ரோ - அக்டோபர் 2018

இயானுக்கு மாற்றாக வரப்போகும் புதிய ஹேட்ச்பேக்குக்கு, மக்களின் அமோகமான ஆதரவால் சான்ட்ரோ என்றே பெயர் சூட்டப்பட உள்ளது. கிராண்ட் i10 காருக்கு முன்பு பொசிஷன் செய்யப்பட உள்ள இந்த கார், AH2 என்ற புனைபெயரில் தற்போது இறுதிக்கட்ட டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. இதில் முந்தைய சான்ட்ரோ மற்றும் i10 ஆகிய கார்களில் இருந்த 1.1 லிட்டர் Epsilon பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அமைப்பு பொருத்தப்பட உள்ளது. ஆனால், இது BS-6 மாசு விதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பதுடன், AMT கியர்பாக்ஸையும் கொண்டிருக்கும் என்பது வரவேற்கத்தக்கது. க்விட், டியாகோ, செலெரியோ ஆகியவற்றுக்குப் போட்டியாக வரப்போகும் சான்ட்ரோ, போதுமான பாதுகாப்பு வசதிகளையும் கொண்டிருக்கும்.

மஹிந்திரா காம்பேக்ட் எஸ்யூவி - நவம்பர் 2018

டாடா நெக்ஸான் மற்றும் மாருதி சுஸூகி விட்டாரா பிரேஸ்ஸாவுக்குப் போட்டியாகக் களமிறக்க ஏதுவாக, S201 எனும் புனைபெயரில் ஒரு காம்பேக்ட் எஸ்யூவியை டெஸ்ட் செய்துவருகிறது மஹிந்திரா. ஸாங்யாங் டிவோலி எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட உள்ளதால், எடை குறைவான மோனோகாக் சேஸி நிச்சயம் எனலாம். ஆனால் இந்தியாவுக்கு ஏற்ப டிசைன், கிரவுண்ட் கிளியரன்ஸ், டயர் சைஸ், உள்நாட்டு உதிரிப்பாகங்கள் எனக் காரில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், 7 காற்றுப்பைகள், ESP, 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், அலாய் வீல்கள் போன்ற வசதிகளையும் காரில் எதிர்பார்க்கலாம். இதில் தனது புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் மராஸோவில் இருக்கும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆகியவற்றை மஹிந்திரா பொருத்துவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

மஹிந்திரா ரெக்ஸ்ட்டன்/XUV 7OO - டிசம்பர் 2018

தற்போது விற்பனையில் இருக்கும் ரெக்ஸ்ட்டனுக்கு மாற்றாக, முற்றிலும் புதிய மாடலைக் களமிறக்க உள்ளது மஹிந்திரா. புதிய லேடர் ஃப்ரேம் சேஸியைக் கொண்டிருப்பதால், இதன் எடை முன்பைவிட குறைந்திருந்தாலும், கட்டுமானத் தரத்தில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. LED DRL உடனான ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், அறுகோண வடிவ க்ரோம் கிரில், LED பனி விளக்குகள் மற்றும் டெயில் லைட், 20 இன்ச் அலாய் வீல்கள் என வெளித்தோற்றம் செம பிரிமியம் ரகம். உள்ளே 9.2 இன்ச் HD டச் ஸ்க்ரீன் சிஸ்டம், Nappa லெதர் உள்ளலங்காரம், Soft Touch ப்ளாஸ்டிக்ஸ், மர மற்றும் க்ரோம் வேலைப்பாடுகள், ரிவர்ஸ் கேமரா, ரியர் ஏசி வென்ட்கள், 7 சீட்ஸ், எலெக்ட்ரானிக் அட்ஜஸ்ட் உடனான சீட் மற்றும் மிரர்கள் என ஹைடெக்காக இருக்கிறது கேபின். இதில் ஸாங்யாங்கின் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் - AWD மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி பொருத்தப்படும். உள்நாட்டில் உற்பத்தி என்பதால், விலையும் வாவ் ரகம்.

ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் - டிசம்பர் 2018

ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் காம்பஸ் எஸ்யூவியின் ஆஃப் ரோடர் வெர்ஷனாக வரப்போவதுதான் ட்ரெய்ல்ஹாக். மஹிந்திராவின் XUV 5OO-க்குப் போட்டியாக வரப்போகும் இதில், 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் உள்ளது. ஆனால் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஜீப்பின் Trail Rated 4WD சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுக்கு, ரஞ்சன்கவுனில் இருந்து இந்தக் கார்களை ஏற்கெனவே ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது ஜீப். எனவே, இது விரைவில் இந்தியாவிலும் டயர் பதிக்கலாம்! ஆனால், வழக்கமான மாடலைவிடக் கூடுதல் விலையில் இது வரும் என்றாலும், பவர்டு சீட்ஸ் - சன்ரூஃப் எனச் சில பிரிமியம் வசதிகள் காரில் இருக்கலாம். பிராக்டிக்கலான ஆஃப் ரோடர் வேண்டும் என்றால் காத்திருக்கலாம்.

டாடா டியாகோ NRG - செப்டம்பர் 2018

Pseudo க்ராஸ்ஓவர் கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், தனது முதல் க்ராஸ் ஹேட்ச் காராக டியாகோ NRG காரை, வருகின்ற செப்டம்பர் 12 அன்று அறிமுகப்படுத்த இருக்கிறது டாடா. எனவே ஸ்கஃப் ப்ளேட் உடனான கட்டுமஸ்தான பம்பர்கள், பக்கவாட்டுப் பகுதியில் பாடி கிளாடிங், ரூஃப் ரெயில், 14 இன்ச் டயமண்ட் கட் அலாய் வீல்கள் - கறுப்பு நிற மிரர்கள் - கிரில் - பில்லர்கள் - ரூஃப் - கைப்பிடி, 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் - ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் என க்ராஸ்ஓவருக்குத் தேவையான அம்சங்கள் அனைத்தையும் கொண்டிருக்கிறது டியாகோ NRG. கேபினில் 5 இன்ச் டச் ஸ்க்ரீன் - Harman ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, கூல்டு க்ளோவ் பாக்ஸ், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மிரர்கள், Contrast ஃப்னிஷ் எனக் கணிசமான அம்சங்கள் கூடுதலாக இருக்கின்றன. அதே பெட்ரோல்/டீசல் இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே தொடரும் என்றாலும், வழக்கமான மாடலைவிட இதன் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கலாம். மேலும் இதன் பர்ஃபாமென்ஸ் JTP எடிஷன் மற்றும் EV மாடலையும் பின்னாளில் எதிர்பார்க்கலாம்.

இசுஸூ MU-X: டிசம்பர் 2018

சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட நிலையில், MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் களமிறக்கும் முடிவில் இருக்கிறது இசுஸூ. இதில் LED DRL உடனான ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED டெயில் லைட்ஸ், டைமண்ட் கட் அலாய் வீல்கள், புதிய பம்பர்கள், க்ரோம் ஃப்னிஷ் கொண்ட கிரில் மற்றும் மிரர்கள் என வெளியே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். உள்ளே மர வேலைப்பாடுகளுடன் கூடிய டூயல் டோன் டேஷ்போர்டு, Soft Touch ப்ளாஸ்டிக்ஸ் மற்றும் சில்வர் ஃப்னிஷ், புதிய டச் ஸ்க்ரீன் சிஸ்டம் மற்றும் அப்ஹோல்சரி என லேசான வித்தியாசங்கள் இருக்கலாம். 3.0 லிட்டர் டீசல் இன்ஜினில் (2WD/4WD) எந்த மாற்றமும் இல்லாவிட்டாலும், புதிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு