Published:Updated:

மனு வாங்கும் சாமி!

மனு வாங்கும் சாமி!

காதல், கல்யாணம், பங்காளிச் சண்டை, நோய் நொடி என அனைத்துக்கும் மனு எழுதிக் கொடுத்தால் தீர்த்து வைப்பாராம் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருக்கும் நாவலடியான் கருப்பண்ணசாமி! இங்கு இருக்கும் நாவல் மரத்தில் ஆயிரக்கணக்கில் கட்டப்பட்டுக் கிடக்கின்றன மனுக்கள்.

மனு வாங்கும் சாமி!

கோயில் பூசாரி சுந்தரம், ''இந்தப் பகுதியை உப்பிலியன் திட்டு என்கிற  ஊரைத் தலைநகராகக் கொண்டு, கோவூர் பழையன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவன் எந்த முடிவு எடுத்தாலும் நாவலடி கருப்பனைக் கேட்டுதான் எடுப்பானாம். மன்னன் காலத்திலேயே கோயில்ல மனு கொடுக்கிற பழக்கம் இருந்திருக்கு. அந்தக் காலத்தில் இருந்தே கோயிலுக்குக் காவல் மரமாக நாவல் மரம் இருக்கு. இப்ப அந்த மரம் பட்டுப்போனாலும் அதைக் கடவுளாத்தான் வணங்குறோம். அந்தப் பட்ட மரத்தில் சாமி இருக்கிறதால், சாமிக்குப் 'பட்ட மரத்தையன்’ என்கிற பெயரும் உண்டு.

கடன் பாக்கி, சொத்துப் பிரச்னைனு நீதிமன்றத்தில் தீராத விவகாரங்களைக்கூட நவலடியான்கிட்ட மனு போட்டு தீர்ந்து இருக்கு. அதனால், இந்தச் சாமிக்கு, 'ஜட்ஜ் துரை’ என்கிற பெயரும் உண்டு. காதலர்கள் இங்க ஜோடியா வந்து மனு எழுதிப்போடுவாங்க. கோரிக்கை நிறைவேறி எங்கே கல்யாணம் நடந்தாலும் இங்கே வந்து ஒருமுறை மாலை மாத்திப்பாங்க.

''பக்தர்கள் தங்களோட கோரிக்கையை 'அனுப்புநர், பெறுநர், பொருள்’ போட்டு எழுதி, கோயில் ஆபீஸர்கிட்ட கொடுக்கணும். அவர் சீல் வைத்துக் கொடுப்பார். அதை என்கிட்ட கொடுத்தால், மஞ்சள்

மனு வாங்கும் சாமி!

தடவி பூஜை செஞ்சு நாவல் மரத்தில் கட்டிடுவோம். இதுக்காக  நாங்க காசு எதுவும் வாங்குவது இல்லை' என்கிறார்.

  • சீமானுக்கு நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி மீது தனிப் பிரியம் உண்டு. காரணம், தமிழகத்தின் எந்த மூலையில் தன் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்தினாலும் கூடலூர் சார்பில் கணிசமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வந்து கலந்துகொள்வதுதான்!

கட்டுரை, படங்கள்: ஞா.அண்ணாமலை ராஜா  

அடுத்த கட்டுரைக்கு